
சைக்கிள்கள் காலத்தால் அழியாத இயந்திரங்கள். அவை அனைத்து வயதினருக்கும் சுதந்திரம், சுகாதார நன்மைகள், பழைய நினைவுகளைத் தங்கள் கண் முன் கொண்டு வருகின்றன. குழந்தையின் முதல் சவாரியில் தொடங்கி, நிதானமாக சைக்கிள் ஓட்டுவதை அனுபவிக்கும் மூத்தவர் என அனைவருக்கும் பொருந்தும் இந்த சைக்களில் இன்னும் என்ன எல்லாம் நன்மைகள் இருக்கின்றன?
அனைத்து வயதினருக்கும் பொருந்தும் சைக்கிள்களின் வகைகள்
சமநிலை சைக்கிள்கள் (Balance cycle) - புதிதாக சைக்கிள் ஓட்ட கற்கும் குழந்தைகளுக்கு ஏற்றவை.
குழந்தைகளுக்கான சைக்கிள்கள் (Kids’ Bikes) - பாதுகாப்பு அம்சங்களுடன் 18 வயது குறைவானவர்களுக்கு சவாரி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.
மலை சைக்கிள்கள் (Mountain Bikes) - கரடுமுரடான நிலப்பரப்பை எதிர்கொள்ளும் சாகச பிரியர்களுக்கு ஏற்றவை.
கலப்பின சைக்கிள்கள் (Hybrid Bikes) - சாலை மற்றும் மலை சவாரி என்று அனைத்திற்கும் பொருத்தும் அம்சங்களைக் கொண்ட பல்துறை கலவை கொண்டவை.
சாலை சைக்கிள்கள் (Road Bikes) - இந்த சைக்கிள் இலகுரக மற்றும் வேகமானதும் கூட. உடற்பயிற்சி அல்லது தொழில்முறைக்கு இந்த சைக்கிள் (professional cycling) பொருந்தும்.
க்ரூஸர் சைக்கிள்கள்(Cruiser Bikes) - நகர சவாரிகளுக்கு ஏற்ற வசதியை கொண்டது மற்றும் பார்ப்பதற்கு ஸ்டைலான வகையாகவும் இருக்கும்.
மின்சார சைக்கிள்கள் (Electric Bikes) - சிரமமின்றி பெடலிங் செய்யாமல் சுலபமாக இயக்கலாம். வயதில் மூத்தவர்களுக்கு கட்சிதமாக பொருந்தக்கூடியது.
சைக்கிள்களை முதன்மை போக்குவரத்தாக பயன்படுத்தும் நாடுகள்:
நெதர்லாந்து(Netherland) - இங்குள்ள ஆம்ஸ்டர்டாமின் (Amsterdam) தெருக்கள் சைக்கிள் ஓட்டுநர்களால் நாள்முழுக்க சூழப்படுமாம்.
டென்மார்க்(Denmark) - கோபன்ஹேகன் (Copenhagen) என்னும் நகரம் சைக்கிள் பைக்கர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுபோல் ஜப்பான், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் சைக்கிள் மூலமே தங்கள் வேலை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சைக்கிள் ஓட்டும் போது நாம் என்ன உணர்வோம்?
கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நம்பி இருந்தவர்கள் ஒரு நாள் சைக்கிளை பயன்படுத்தும் போது அந்த அனுபவம் அவர்களுக்கு உற்சாகம், ஆர்வம், சுதந்திரம், இயற்கையுடனான இணைப்பு என்று ஒரு புத்துணர்ச்சியூட்டும் வகையில் வித்தியாசமானதாக உணரவைக்கும். இது அவர்களின் ஏக்கத்தையும், மன கட்டுப்பாட்டு உணர்வையும் ஒன்று சேர்த்து ஒரு எளிமையான உணர்வை அவர்களுக்குள் விதைத்திடும்.
சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள்
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் - தசைகளை வலுப்படுத்தும், நம் சக்தி (Stamina) மேம்படும் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்தும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது - மாசுபாட்டைக் குறைத்து ஒரு நிலையான நல்ல வாழ்க்கை முறையை ஆதரிக்கிறது.
செலவு சேமிப்பு - எரிபொருள், மின்சார செலவுகளை குறைக்கும். தேவைப்படும் போது குறைந்தபட்ச பராமரிப்பு செலவை வர வைக்கும்.
மன அழுத்தத்திற்கான நிவாரணம் - இவ்வளவு நாட்கள் சிலர் இழந்த அமைதியை மீண்டும் கொண்டு வரும்.
சைக்கிள் ஓட்டுதல் என்பது வெறும் இயக்கத்தை விட அது நம் மகிழ்ச்சியைப் புதுப்பிக்கும் ஒரு கருவி போன்றது. வாழ்க்கையின் எளிய இன்பங்களை அனுபவத்தை பெற முடியும். ஆகையால் நீண்ட நாள் கழித்து இதை ஓட்டும் போது கண்டிப்பாக நமக்குள் ஒரு புதிய கண்ணோட்டத்தை புகுத்திவிடும்.