நோய்த் தடுப்பாற்றலைத் தரும் குடிநீர் வகைகள்!

Types of drinking water that give immunity
Types of drinking water that give immunity

டலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆரோக்கியம் மிகுந்த குடிநீர் வகைகள் அக்காலங்களில் இருந்து மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அப்படி உடற்பிரச்னைகளைப் போக்கும் இரண்டு குடிநீர் வகைகளின் பயன்பாடு மற்றும் தயாரிப்பு முறைகளை இந்தப் பதிவில் காண்போம்.

ஓமக் குடிநீர்: முன்பெல்லாம் ஓமக்குடி நீரை பாட்டிலில் அடைத்து, ‘ஓமத் திரவம்’ என்று கூறி விற்பனை செய்துகொண்டு கிராமத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு வேலி ஓரத்தில் படர்ந்து இருக்கும் கோவக்காயைப் பறித்துக் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக பண்டமாற்று முறையில் இந்த திரவத்தை வாங்கி பயன்படுத்துவோம். இப்பொழுது நாம் அதை வீட்டிலேயே தயார் செய்து வைத்துக்கொண்டால் தேவையானபொழுது அதை உபயோகித்துப் பயன் பெறலாம்.

செய்யும் முறை: ஐந்து லிட்டர் அளவு ஒரு பெரிய பாத்திரத்தில் குடிநீர் எடுத்துக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு ஓமம் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை ஆற வைத்து, வடிகட்டி வைத்துக்கொண்டு குடிநீராகப் பயன்படுத்தலாம். நாம் அருந்தும் சாதாரண குடிநீருக்குப் பதிலாக இந்த நீரைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியம் பெறலாம்.

இதனால் சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணமாகும். வயிற்றுப்புண், வயிறு எரிச்சல், வயிறு மந்தம், புளித்த ஏப்பம், பசியின்மை ஆகிய பிரச்னைகள் சரியாகும். வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவற்றை கட்டுப்படுத்தும். ஓமத்தில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் இது இரத்த சோகையையும் போக்கும். சிறு குழந்தைகளுக்கும் வயிற்றில் மந்தம், உப்புசம் என்று இருக்கும்பொழுது பாலாடையில் சிறிதளவு எடுத்துப் புகட்டலாம். அனைவரின் ஆரோக்கியத்தைக் காக்கும் நீர் இந்த ஓமக்குடி நீர்.

வில்வ இலைக் குடிநீர்: ஒரு பானையில் நல்ல சுத்தமான குடிநீரை எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு கைப்பிடி அளவு வில்வ இலைகளைப் பறித்து, கழுவி பின் அதை பானையில் போட்டு மூடி விட வேண்டும். நான்கு முதல் ஐந்து மணி நேரம் கழித்து அதில் இருக்கும் இலைகளை எடுத்துப் போட்டுவிட்டு அதை குடிநீராகப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க சில யோசனைகள்!
Types of drinking water that give immunity

இதை யார் வேண்டுமானாலும் மிக எளிதில் செய்யலாம். இதனால் பல நன்மைகள் உண்டாகும். உடல் எரிச்சல், நாவறட்சி ஆகியவை நீங்கும். கண் எரிச்சல், வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றை நீக்கும். இது புற்றுநோய் செல்களை உடலில் வளர விடாமல் தடுக்கும். குறிப்பாக, மூல நோயைப் போக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவரின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் போன்றவற்றின் இயக்கங்களை சீர்படுத்தும். உடல் குளிர்ச்சி பெறும். மலச்சிக்கலைப் போக்கும். சர்க்கரை நோயை வர விடாமல் தடுக்கும். இரத்த அழுத்தத்தை சீராக்கும். நோய்த் தடுப்பாற்றலைக் கொடுக்கும். நீண்ட ஆயுளைத் தரும். மேலும், இதை கஷாயம், தேநீர் என்று எந்த வடிவில் எடுத்துக் கொண்டாலும் மலச்சிக்கல் அகலும். ஆதலால், இந்த இலை கிடைக்கும்போதெல்லாம் அதைப் பயன்படுத்தி பயன் பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com