விளக்கின் வகைகளும் அவற்றின் பலன்களும்!

Types and benefits of lamps
Types and benefits of lamps
Published on

வீட்டில் விளக்கேற்றுவது புனிதமாகவும், மங்கலகரமாவும் கருதப்படுகிறது. வீட்டில் விளக்கேற்றி கடவுளை வழிபடும்பொழுது மனதில் உள்ள அழுக்குகள் நீங்கி  அமைதியுடனும், பக்தியுடனும் கடவுளை வழிபடுவதற்கு வழிவகுக்கிறது. விளக்குகளில் பல வகைகள் உண்டு. மண் விளக்கு, வெள்ளி விளக்கு, குத்து விளக்கு, காமாட்சி விளக்கு போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். சில விளக்குகளை பெண்கள் பரம்பரை பரம்பரையாக போற்றிப் பாதுகாத்து வருவார்கள். அத்தகைய விளக்குகளையும், அதன் சிறப்புகளையும் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. பஞ்சலோக விளக்கு: தங்கம், வெள்ளி, துத்தநாகம், செம்பு, இரும்பு ஆகியவை சரியான விகிதத்தில் கலக்கப்பட்டு செய்யப்படுவதுதான் பஞ்சலோகம் ஆகும். இத்தகைய உலோகத்தில் செய்யப்படும் விளக்கை வீட்டில் ஏற்றி வழிபடுவதால், கண் திருஷ்டி பிரச்னை சரியாகும், தெய்வங்களின் அருள் பரிபூரணமாகக் கிட்டும், தொழிலில் வளர்ச்சியடைய முடியும்.

2. வெள்ளி விளக்கு: வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டால், செல்வ செழிப்பு பெறலாம். வெள்ளி விளக்கில் மகாவிஷ்ணுவும், மகாலக்ஷ்மியும் குடியிருப்பதாக ஐதீகம். எனவே, வெள்ளி விளக்கை முறையாக பராமரித்து வழிபடும் பொழுது பணப்புழக்கம், மன நிம்மதியான வாழ்வை பெறலாம்.

3. இரும்பு விளக்கு: குடும்பத்தில் உள்ள தீர்க்க முடியாத சிக்கலை தீர்க்கவும், செல்வ செழிப்பு பெறவும், ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கவும் இரும்பு விளக்கை ஏற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

4. வெண்கல விளக்கு: நிரந்தர வருமானத்திற்கும், வீட்டில் உள்ளவர்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருக்கவும் வெண்கல விளக்கில் தீபமேற்றி வழிபடுவது உகந்ததாகும்.

5. மண் விளக்கு: தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டின் வாசலில் மண்ணால் ஆன அகல் விளக்கு ஏற்றி வைப்பது சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுத் தரும். வீட்டினுள் துஷ்ட சக்தியை அண்ட விடாது. வீட்டிற்குள் மகாலக்ஷ்மி தாயார் வாசம் செய்வார். துன்பங்கள் படிபடியாகக் குறைந்து மகிழ்ச்சி கிட்டும்.

இதையும் படியுங்கள்:
சீதையின் காலடித்தடம் எங்குள்ளது தெரியுமா?
Types and benefits of lamps

6. குத்து விளக்கு: குத்து விளக்கு ஏற்றுவது மிகவும் புனிதமான வழிபாடாகும். இந்த விளக்கை வீட்டில் ஏற்றும்போது மங்கலமும், செல்வ செழிப்பும் பொங்கும். செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்பதால் குத்து விளக்கு என்று பெயர் பெற்றது. முக்கியமான பண்டிகைக் காலங்களில், விசேஷங்களில் ஐந்து முகக் குத்து விளக்கை ஏற்றி வழிபடுவது மங்கலகரமாகக் கருதப்படுகிறது.

7. காமாட்சி விளக்கு: காமாட்சி விளக்கு எல்லா வீடுகளிலும் கண்டிப்பாக இருக்கும். இதற்கு பூ வைத்து, பொட்டு வைத்து தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விளக்கு மிகவும் புனிதமாகவும், மங்கலகரமாகவும் கருதப்படுகிறது. இந்த விளக்கை வீட்டில் தினமும் ஏற்றி வைப்பதால் அனைத்துவிதமான பிரச்னைகளும் நீங்கி, வீட்டினுள் மகிழ்ச்சி நிலைக்கும், பண வரவு அதிகரிக்கும். இந்த விளக்கை ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் பொன்னை போல பாதுகாப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com