ப்ளீச்சிங் பவுடர்லாம் இனி வேண்டாம்.. டாய்லெட் சீட்டை புதுசு போல மாற்றுவது இவ்வளவு சுலபமா!

clean-toilet-seats
clean-toilet-seats
Published on

நமது வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்துக்கொண்டாலும், பாத்ரூமை பராமரிப்பது என்பது எப்போதுமே ஒரு சவாலான காரியம் தான். அதிலும் குறிப்பாக டாய்லெட் சீட்களில் படியும் மஞ்சள் நிறக் கறைகளை பார்ப்பதற்கே பலருக்கும் அருவருப்பாக இருக்கும். 

இது ஏதோ நாம் சரியாக சுத்தம் செய்யாததால் வந்த அழுக்கு என நினைத்துக்கொண்டு கடைகளில் விற்கும் எக்கச்சக்கமான ஆசிட் மற்றும் கெமிக்கல்களை ஊற்றி தேய்த்து தேய்த்து நாமே நமது கைகளை புண்ணாக்கி கொள்வோம். 

ஆனால், நிஜத்தில் அந்த கறைகளுக்குக் காரணம் அழுக்கு கிடையாது. இந்த கறைகளை எந்த ஒரு பெரிய செலவும் இல்லாமல், ஈஸியாக விரட்டியடிக்கும் ஒரு அட்டகாசமான சீக்ரெட் பற்றி இப்போது பார்ப்போம்.

கறைகளுக்கான காரணம்!

பொதுவாகவே டாய்லெட் சீட்கள் பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்படுகின்றன. நாம் அதை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் ஆசிட் போன்ற கடுமையான கெமிக்கல்கள் தான் இந்த பிளாஸ்டிக்கை மெல்ல மெல்ல அரிக்கத் தொடங்குகின்றன. 

அதுமட்டுமில்லாமல் சூரிய ஒளியில் உள்ள புறஊதா கதிர்களும் இந்த பிளாஸ்டிக் உடன் வினைபுரிந்து அதன் நிறத்தை மங்கச் செய்து மஞ்சள் நிறமாக மாற்றிவிடுகிறது. நாம் எந்த அளவுக்குக் கடுமையான கெமிக்கல்களைப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்குத் தான் இந்த மஞ்சள் கறைகள் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே போகும்.

மேஜிக் திரவம்!

இந்த பிடிவாதமான மஞ்சள் கறைகளை நீக்க ஒரு சிம்பிளான வழி இருக்கிறது. அதுதான் நாம் பொதுவாக காயங்களுக்குப் பயன்படுத்தும் ஹைட்ரஜன் பெராக்சைடு. மருந்துக்கடைகளில் மலிவான விலையில் கிடைக்கும் இந்த மூன்று சதவீத ஹைட்ரஜன் பெராக்சைடு திரவம் ஒரு மிகச் சிறந்த கிளீனிங் ஏஜென்ட் ஆகும். 

இதையும் படியுங்கள்:
காரைக்குடியில் பரப்புரையை தவிர்த்த விஜய்..! காரணம் இது தான்..!
clean-toilet-seats

இது பிளாஸ்டிக்கை எந்த ஒரு டேமேஜும் செய்யாமல், நிறத்தை மாற்றும் மூலக்கூறுகளை மட்டும் துல்லியமாகத் தாக்கி அழித்துவிடும் வல்லமை கொண்டது. இதை பயன்படுத்தினால் டாய்லெட் சீட் கடையில் வாங்கிய புதுசு போலவே பளபளப்பாக மாறிவிடும்.

பயன்படுத்தும் முறை!

முதலில் டாய்லெட் சீட்டை எந்த ஈரப்பதமும் இல்லாமல் ஒரு காய்ந்த துணியால் நன்றாகத் துடைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சம் காட்டன் பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர்களை எடுத்து, ஹைட்ரஜன் பெராக்சைடு திரவத்தில் நன்றாக நனைத்துக்கொள்ள வேண்டும். அந்த நனைத்த பேப்பர்களை கறைகள் உள்ள இடங்களில் அப்படியே ஒட்டி வைத்துவிடுங்கள். 

சரியாக ஒரு 30 முதல் 60 நிமிடங்கள் வரை இதை அப்படியே ஊறவிட வேண்டும். நேரம் முடிந்தவுடன் அந்த பேப்பர்களை எடுத்துவிட்டு, கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி கழுவினால் போதும், கறைகள் எல்லாம் மாயமாக மறைந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
கடன் தள்ளுபடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
clean-toilet-seats

விளம்பரங்களை பார்த்து ஏமாந்து போய் விலையுயர்ந்த கெமிக்கல்களை வாங்குவதை உடனே நிறுத்துங்கள். அந்த கெமிக்கல்கள் வீட்டின் காற்றையும் மாசுபடுத்துவதோடு நமது ஆரோக்கியத்திற்கும் பெரிய கெடுதலை உருவாக்குகின்றன. அதற்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாத, பாதுகாப்பான இந்த ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்தி பாருங்கள். 

இது உங்களின் பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எந்த ஒரு கடினமான உடல் உழைப்பும் இல்லாமல் உங்களின் பாத்ரூமை எப்போதுமே பிரகாசமாக வைத்துக்கொள்ள ஒரு அருமையான வாய்ப்பாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com