காரைக்குடியில் பரப்புரையை தவிர்த்த விஜய்..! காரணம் இது தான்..!

VIJAY
VIJAYSource:indiatoday
Updated on

வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வேட்பாளர்களை ஆதரித்து பேசும் வகையில் காரைக்குடி பிரச்சார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்ற தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி அனுமதி வாங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து விட்டதால் உரையை நிகழ்த்தாமல் திருச்சி செல்கிறார் விஜய்.

காரைக்குடியில் தொடர்ந்து வந்த தொண்டர்கள் ரசிகர்கள் இடையே வாகனத்தில் வந்தபடி ரோடு ஷோ மேற்கொண்ட தவெக தலைவர் திடீரென வாகனத்திலிருந்து இறங்கி சைக்கிளில் வலம் வந்தார். ஆனால் சில நிமிடங்களிலேயே சூழ்ந்திருந்த தொண்டர்களின் தள்ளுமுள்ளு காரணமாக தடுமாறி மீண்டும் பவுன்சர் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏறினார்.

தொடர்ந்து ஏராளமானவர்களின் பூத்துவல் பரிசுகளுடன் ஆங்காங்கே வாகனத்தை சூழ்ந்த ரசிகர்களை கையசைத்து திருப்தி செய்தவாறு விஜய் காரைக்குடி பிரச்சார இடம் சென்றார்.ஆனால் விஜய் அங்கு சென்ற போது தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்த மதியம் 2.30 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் விதிமுறையை மீறாமல் தனது உரையைத் தவிர்த்த விஜய் சாலை மார்க்கமாக திருச்சிக்கு பயணித்தார்.

இதைத் தொடர்ந்து விஜயைக் காண ஆவலுடன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடம் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

வாகனத்தில் இருந்தபடி விசில் சின்னத்தை காண்பித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபடி ரோடு ஷோ சென்ற விஜய் இடம் அப்பகுதி வேட்பாளர் பிரபு தானே அவரது வாகனத்தில் ஏறி அன்பளிப்பாக காரைக்குடி பிள்ளையார் படத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் வாகனம் டோல்கேட்டில் வந்தபோது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் வாகனத்தில் ஏறி அவர்களது கைகளை காலால் உதைத்துத் தள்ளிய பவுன்சர், பைக்கில் வந்த தொண்டரின் பைக் விபத்து, சைக்கிளில் தள்ளாடிய விஜய், வாகனத்தில் வந்த விஜய் மீது எறியப்பட்ட இலை போன்ற பொருள் என இணையங்களில் சுவாரஸ்யமாக பகிரப்பட்டு வருகிறது விஜயின் காரைக்குடி பிரச்சாரம்.

இதையும் படியுங்கள்:
#JUST IN : ஒன்றியச் செயலாளருக்கு 5 பவுன் தங்கம் - ஓபிஎஸ் அறிவிப்பு..!
VIJAY
logo
Kalki Online
kalkionline.com