Valentine’s day special: ஒவ்வொரு நிறத்தின் காதல் அர்த்தத்தை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க!

Valentine day colors meaning.
Valentine day colors meaning.Imge credit: Color meanings
Published on

காதலர் தினம் அன்று நீங்கள் அணியும் ஒவ்வொரு நிற ஆடையும் ஒரு கதைக் கூறும் என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மைத்தான்! பொதுவாகவே நிறங்கள் பேசும் மொழி யாருக்கும் புரியாது. ஆனால் அதன் அர்த்தம் தெரிந்துவிட்டால் அதுவும் சுலபம்தான். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அந்தவகையில் காதல் அடிப்படையில் நிறங்களுக்கான அர்த்தத்தைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1.  மஞ்சள்: ஏற்கனவே ஒருவரை காதலித்து தோல்வியை கண்டு இப்போது மீண்டும் இணையை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கான நிறம் இது.

2.  பச்சை: காதலி அல்லது காதலனுக்காக காத்திருப்பவர்கள் அணியும் நிறம்.

3.  சிவப்பு: காதலித்துக் கொண்டிருப்பவர்கள் அணியும் நிறம்.

4.  கருப்பு: காதலை எதிர்ப்பவர்கள் அணியும் நிறம்.

5.  இளஞ்சிவப்பு: ஒருவர் கூறிய காதலை ஏற்றுக்கொண்டவர்கள் அணியும் நிறம்.

6. நீலம்:  காதலி அல்லது காதலனிடம் தன் காதலை கூறியவர்கள் பயன்படுத்தும் நிறம்.

7. ப்ரௌன்: ஏற்கனவே ஒருவரை காதலித்து தோல்வியை சந்தித்தவர்கள், சில நாட்களுக்கு காதல் வேண்டாம் என்று நினைப்பவர்கள் அணியும் நிறம்.

8. பர்பிள் மற்றும் கிரே: காதல் அழைப்புகள் வந்தும் நிராகரித்தவர்கள் அணியும் நிறம்.

9.  வெள்ளை: ஏற்கனவே வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று சொல்பவர்கள் இந்த வெள்ளை நிற ஆடையை உடுத்திக்கொள்ளலாம்.

10. ஆரஞ்சு: காதலை சொல்லப்போகிறவர்கள் பயன்படுத்தும் நிறம் இது.

இதுப்போக உங்கள் காதலனையோ அல்லது காதலியையோ பார்க்க சென்றால், சிவப்பு நிற உடை அணிந்துக்கொண்டு செல்லலாம். இது காதலின் அடையாளமாகும்.

அதேபோல் காதலர் தினத்தைக் கொண்டாட சில நிறங்களைத் தேர்ந்தெடுத்து, கொண்டாடும் இடத்தை அலங்கரித்துக் கொள்ளலாம். காதல், அக்கறை, நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் வரும் என்பதால் அதற்கு ஏற்றவாரு அலங்கரித்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
Valentines Gift for boyfriend: உங்கள் காதலனுக்கு இந்த 8 பரிசுகளைக் கொடுங்கள்!
Valentine day colors meaning.

சிவப்பு: காதல்.

இளஞ்சிவப்பு: மென்மை

பொன்னிறம்: நம்பிக்கை

லாவண்டர்: காதலையும் பணியையும் சமமாக எண்ணுபவர்கள் பயன்படுத்தும் நிறம்.

பர்கண்டி (சிவப்பு நிற வகையைச் சேர்ந்தது): அக்கறை.

இந்த நிறங்களின் அடிப்படையில் இந்த காதலர் தினத்திற்கு உங்களுக்கு ஏற்ற நிறங்களைத் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com