வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை தேடித் தரும் வாஸ்து சிலைகள்!

Lucky Vastu Statues
Lucky Vastu Statues
Published on

வாஸ்து சாஸ்திரப்படி சில சிலைகள் நம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகுவதுடன், செல்வமும் பெருகும் என்று நம்பப்படுகிறது. இவை வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிப்பதாகவும், செல்வ வளங்களை அள்ளித் தருவதாகவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைவதாகவும் சொல்லப்படுகின்றது. வாஸ்து சாஸ்திரத்தை முறையாகப் பின்பற்ற, நம் வாழ்வில் ஏற்படும் பல பிரச்னைகளை சரி செய்ய முடியும். வீட்டில் அழகிற்காக வைக்கக்கூடிய பொருட்களை அவற்றை எந்த இடத்தில் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு வைக்க, எதிர்மறையான விஷயங்கள் விலகி வீட்டிற்கு மகிழ்ச்சியும் செல்வத்தையும் அள்ளித் தரும். பொதுவாக, வீட்டில் தெய்வ சிலைகளை வைப்பது வழக்கம். ஷோகேசுகளில் அழகான பொம்மைகள் வைப்போம். அவற்றில் அதிர்ஷ்டத்தை தேடித் தரும் சில சிலைகளை வைப்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆமை: வீட்டில் ஆமை சிலைகள் வைப்பது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. ஆமை என்பது மகாவிஷ்ணுவின் வடிவமாக கருதப்படுவதால் இதனை வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு பகுதியில் வைக்க அமைதியும், செல்வ செழிப்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

அன்னம்: இது அமைதி, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. படுக்கை அறையில் ஒரு ஜோடி அன்னப்பறவை சிலைகளை வைக்கலாம். இவை தம்பதிகளுக்கு இடையே அன்பையும் நெருக்கத்தையும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

மீன்: சிலர் வீடுகளில் மீன் தொட்டிகளை வைத்து வண்ணமயமான மீன்களை வளர்ப்பார்கள். வாஸ்து சாஸ்திரப்படி பித்தளை அல்லது வெள்ளியாலான மீன் சிலைகளை வைப்பது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. மீன் சிலைகளை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வாழ்வில் முன்னேற்றமும், வீட்டின் வருமானமும் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
சுற்றுச்சூழலின் நண்பர்களாக விளங்கும் கோட்டிகளின் சிறப்பியல்புகள்!
Lucky Vastu Statues

யானை சிலைகள்: செல்வம் மற்றும் செழுமையின் அடையாளமாகக் கருதப்படும் யானை சிலைகளை வைப்பது நல்லது. யானை சிலைகளை வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி வைக்கலாம். யானை சிலை என்பது உற்சாகம் மற்றும் பாசிட்டிவ் எனர்ஜியின் அடையாளமாகவும், புத்தி கூர்மை மற்றும் பலத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. வீட்டில் நுழைவு வாசல், அலுவலகம், படுக்கையறை, குழந்தைகள் அறை ஆகியவற்றில் யானை சிலைகளை வைக்கலாம். படுக்கையறையில் வெண்கலத்தாலான யானை சிலைகளை வைப்பது சிறப்பு.

கிளி: வாஸ்துபடி கிளி என்பது காதல் மற்றும் மகிழ்ச்சியின் சின்னமாகக் கருதப்படுகிறது இவை நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும். வாஸ்துபடி கிளி என்பது பூமி, நெருப்பு, நீர், மரம் மற்றும் உலோகத்தை குறிக்கிறது பிள்ளைகளின் அறையில் கிளி சிலை அல்லது படத்தை வைப்பது அவர்களுக்குப் படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் என்றும் வீட்டில் கிளி சிலை வைப்பது மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது.

வெள்ளெருக்கு விநாயகர்: வாஸ்து சாஸ்திரப்படி வெள்ளெருக்கு விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட செல்வத்திற்கு குறைவிருக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com