வடகிழக்கு திசை நீரை குறிக்கின்றது. இதை ஈசானிய மூலை என்பார்கள். பெருஞ்செல்வம் வரும் திசையாக இது கருதப்படுகிறது.
கிழக்கு என்பது சூரியன் இருக்கும் இடம். வாழ்வின் நலம் மற்றும் நம் வாழ்க்கையின் ஆற்றலைக் குறிக்கிறது.
தென்கிழக்கு என்பது அக்னி அல்லது நெருப்பின் இருப்பிடம். இது ஆன்மிக ஆற்றலைக் குறிக்கிறது. .
தெற்கு என்பது மரணம் மற்றும் மறுபிறப்பின் திசை. இது ஆன்மிக வளர்ச்சியின் திசை.
தென் மேற்கு பித்ரு அல்லது மூதாதையர்கள் நிலையாகும்.
மேற்கு என்பது வருணன் அல்லது கடல்களின் அதிபதி. இது உடல் மற்றும் நிதி வளர்ச்சி விரிவாக்கத் தைக் குறிக்கிறது.
வடமேற்கு என்பது காற்று. இது அறிவுசார் வளர்ச்சியையும் படைப்பாற்றலையும் குறிக்கிறது.
வடக்கு என்பது குபேரன், செல்வத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் அதிபதி. இது செழிப்பைக் குறிக்கிறது.
மையம் - பிரம்மா ஸ்தானம். இது மண்டலத்தின் மிக சக்தி வாய்ந்த ஆற்றல் வாய்ந்த பகுதியாகும். மேலும் ஒலி, தொடுதல், வாசனை, சுவை மற்றும் வடிவத்தின் அனைத்து அனுபவங்களையும் கொண்டுள்ளது.
வீட்டு மாடிப்படி அமைப்பதில் உள்ள வாஸ்துகுறிப்புகள்.
ஒரு இடத்திற்கு தலைவாசல் அமைப்பதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அதுபோல் ஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டு அமைக்கும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
ஒரு இடத்திற்கு உட்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தெற்கு அல்லது மேற்கு பகுதி நடுவில் அமைப்பது சிறந்தது.
ஒரு இடத்திற்கு வெளிப்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தென்கிழக்கு தென்மேற்கு மற்றும் வடமேற்கு மூலையில் திறந்த வெளி படிக்கட்டு முறையில் மட்டுமே அமைக்க வேண்டும்.
வீட்டிற்கான வாசல்படிகள் அமைக்க:
வாசற்கால், உயரத்திலிருந்து ஒன்பதில் ஐந்து பங்கு அகலம் இருக்க வேண்டும். அதாவது உயரம் 9 அடிகள் இருந்தால் அகலம் 5 அடிகள் இருக்க வேண்டும். இவ்வாறு அமைக்க லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
வெளியில் உள்ள வாசல் படியை விட உள்ளே உள்ள வாசற்படிகள் உயர்ந்திருந்தால் அதிக நன்மை இருக்கும். வீட்டின் வாசல் படிகளை கருங்கற்களால் அமைக்கக் கூடாது. வாசல் படிகளின் எண்ணிக்கை இரட்டைப் படையாக இருப்பது நல்லது.
வீட்டிற்குள் நுழையும் போதும் வெளியில் செல்லும் போதும் நம் கண்களில் சுவாமி படங்கள் படும்படி வைக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் அறைகள் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருக்க வேண்டும்.
அறைகள் காற்றோட்டமாகவும், சுத்தமாகவும், பிரகாசமாகவும் இருக்க வேண்டும். எல்லா அறைகளின் மூலைகளும் கூட முடிந்தவரை பிரகாசமாக இருக்க வேண்டும்.
அனைத்து கதவுகளும் குறிப்பாக பிரதானக்கதவு உள்ளே திறக்கப்பட வேண்டும். எனவே ஆற்றல் வீட்டிற்குள் இருக்கும்.
குழந்தைகள் படிக்கும் மேஜைக்கும் சுவருக்குள் இடையே இடைவெளி இருக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி பணப்பெட்டி தெற்கு அல்லது தென்மேற்கு சுவரில் இருக்க வேண்டும். பணத்தை இரட்டிப்பாக்குவதைக் குறிக்கும் வகையில் லாக்கரின் முன் கண்ணாடியை வைப்பது சிறப்பு.