

உங்கள் காலணிகளையும் செருப்புக்களையும் பிரதான வாயிலில் வைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்தப்பதிவு உங்களுக்குத்தான். வாஸ்து சாஸ்திரத்தின்படி பிரதான நுழைவாயிலில் உங்கள் காலணிகளை அடுக்கிவைப்பது அசுபமாகக் கருதப்படுகிறது. இது நேர்மறை ஆற்றலைப் சீர்குலைத்து நிதி, குடும்பம் மற்றும் தொழில் தொடர்பான பிரச்னைகளை அதிகரிக்கக்கூடும். நீங்கள் காலணிகளை வாஸ்து விதிகள் பின்பற்றி எங்கே வைப்பது போன்ற விஷயங்களை இப்பதிவில் காண்போம்.
வாஸ்து குறிப்புகள்:
வீடுகளில் காலணிகளை வைப்பதற்கு ஒரு இடத்தைப் பயன்படுத்துவோம். ஆனால் காரணிகளைக் தவறான இடத்தில் வைப்பது வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக பிரதான வாசலுக்கு அருகில் வைக்கப்பட்டால் அது வீட்டின் நேர்மறை ஆற்றலைப்பாதிக்கக்கூடும். வாஸ்து சாஸ்திரத்தில் பிரதான வாசல் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது
பிரதான வாசல். ஏன் சிறப்பானது?
வாஸ்து சாஸ்திரப்படி பிரதான வாசல் என்பது வெறும் ஒரு வழிப்பாதை மட்டுமல்ல. அது வீட்டிற்குள் ஆற்றல் நுழைவதற்கான முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. அது வீட்டுக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. எனவே இந்த இடத்தை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருப்பது அவசியமாகும்.
காலணி அடுக்குகள் நிதிச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
வாஸ்து நம்பிக்கையின்படி பிரதான வாயிலுக்கு முன்னாலோ அல்லது அருகிலோ காலணிகள் வைப்பது நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தைத் தடைசெய்யும். இது நிதிப் பிரச்னைகளை அதிகரித்து பொருளாதார முன்னேற்றத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
காலணிகளும், செருப்புகளும் வெளியிலிருந்து தூசி, அழுக்கு மற்றும் பல்வேறு எதிர்மறை ஆற்றல்களை கொண்டு வருகின்றன. அவற்றை நுழைவாயிலில் வைக்கும்போது அவை வீட்டின் சூழலைப் பாதிக்கக் கூடும். இது குடும்ப உறுப்பினர்களிடையே மனக் கசப்புகளுக்கும், அற்ப விஷயங்களுக்காக ஏற்படும் வாக்குவாதங்களுக்கும் வழிவகுக்கும்.
வாஸ்துவின்படி காலணி அடுக்கு தவறான திசையில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஆங்காங்கே காலணிகள் சிதறிக் கிடந்தாலோ உங்கள் வேலை ,தொழில் மற்றும் வாழ்க்கையில் தடைகள் ஏற்படலாம்.
காலணி வைப்பதற்கான சிறந்த திசை
உங்கள் வீட்டில் காலணி அடுக்கு வைக்க விரும்பினால் மேற்கு அல்லது தென்மேற்கு திசைகள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. வடமேற்கு திசையையும் பயன்படுத்தலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த திசைகள் வெளிப்புற ஆற்றல்களை சமநிலைப் படுத்தி உதவுகின்றன.
தவறுதலாகக்கூட இந்தத் திசைகளில் வைக்காதீர்கள்
வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் காலணிகளை வைப்பதைப் தவிர்க்கவும். குறிப்பாக வடகிழக்கு மூலை மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. வாஸ்து நம்பிக்கையின்படி இந்தப்பகுதியில் காலணி அடுக்கு வைப்பது அமைதியையும், நேர்மறையான சூழலையும் சீர்குலைக்கும்.
உங்கள் காலணி சேகரம் எப்படி இருக்கவேண்டும்?
நிபுணர்களின் கூற்றுப்படி திறந்த காலணி அடுக்குகளைவிட மூடிய காலணி அலமாரிகளே சிறந்தவை. மூடிய அலமாரியில் காலணிகளை ஒழுங்காக வைப்பது மட்டுமல்லாமல் துர்நாற்றம் மற்றும் தூசியையும் கட்டுப்படுத்துகின்றன. மர அல்லது உலோக அலமாரிகள் அதிக நடைமுறைக்கு உகந்தவை யாகக் கருதப்படுகின்றன.
இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வது?
பல வீடுகளில் இடப்பற்றாக்குறை காரணமாக காலணி அடுக்கு பிரதான கதவுக்கு அருகில் வைக்க வேண்டியுள்ளது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அதை கதவிற்கு முன்னால் வைப்பதற்கும் பதிலாக பக்க வாட்டில் வைக்கவும். மேலும் பிரதான கதவுக்கும் காலணி அடுக்குகளுக்கும் சிறிதளவு இடைவெளியைப் பராமரிப்பது சிறந்தது.
வாஸ்து சாஸ்திரப்படி பழைய காலணிகளை சேமித்து வைப்பது சரியல்ல. பயன்படுத்தாத காலணிகளை அகற்றிவிடவேண்டும். பிரதான வாயிலில் செடிகள் நேர்மையை உருவாக்கும் அலங்காரப் பொருட்களை வைக்கலாம். காலணி வைக்கும் அலமாரியில் கர்ப்பூரம் அல்லது கிராம்பை வைப்பது துர்நாற்றத்தைப் குறைக்க உதவுகிறது.
உங்கள் வீட்டின் நுழைவாயிலை வாஸ்து முறைப்படி மாற்றுவதன் மூலம் தேவையற்ற நிதிச் சிக்கல்களைத் தவிர்த்து, குடும்பத்தில் நிம்மதியையும் நிலையான செல்வச் செழிப்பையும் ஈர்க்கலாம்.