உங்கள் வீடு சுபிட்சம் தருவதாக மாற சில ஆலோசனைகள்!

சுபிட்சமான வீடு
சுபிட்சமான வீடு
Published on

வ்வொரு வீட்டிற்கும் ஒரு சக்தி உண்டு. அந்த சக்தியை நம் வாழ்வின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது நம் கையில்தான் உள்ளது. அதற்கு வீட்டை சுபிட்சம் தருவதாக மாற்ற வேண்டியது அவசியம். வீட்டை சுபிட்சம் தருவதாக மாற்ற என்ன செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

வீட்டை உப்பு கலந்த நீரில் கழுவுங்கள். அதன் பின்னர் நான்கு எலுமிச்சை பழத்தை தனித்தனியாக எடுத்து ஒரு மஸ்லின் துணியில் கட்டி வீட்டின் நான்கு மூலைகளிலும் போடுங்கள். அது வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றும். வீட்டில் தினமும் தீபம் அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுவது நல்ல சக்தியை வீட்டிற்குக் கொண்டு வரும்.

வீட்டில் இனிய இசையை, பக்திப் பாடல்களை அல்லது காயத்ரி மந்திரம் போன்றவற்றை மெலிதாக பரவ விடுங்கள். உடல் நலக்குறைவு உள்ளவர்கள் வீட்டில் இருந்தால் ‘மகா மிருத்யுஞ்யை மந்திரத்தை’ ஒலிக்க விடுங்கள்.

நறுமணம் வீசும் ஊதுபத்தியை வீட்டின் நான்கு மூலைகளிலும் ஏற்றுங்கள். காலையில் சூரிய உதயத்தின்போதும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னரும் இதைச் செய்யுங்கள்.

புத்துணர்ச்சி தரும் அழகிய பூக்கள் நிறைந்த, நீர் சூழ்ந்து இருக்கும் படங்களை வீட்டில் மாட்டுங்கள். வீட்டில் நீரூற்று (பவுன்டன்) வடக்கு கிழக்கு திசையில் வைத்தால் அது வீட்டிற்குள் நல்ல சக்தியை அதிகரிக்கும். அதோடு, உங்களுக்கு நல்ல வளங்களையும் தரும்.

வீட்டிற்குள் பசுமையான தாவரங்கள் இடம்பெறும் தொட்டிகளை வைப்பது நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதுடன், வீட்டில் நல்ல காற்று வீசும் மற்றும் உங்கள் மன பதற்றத்தை குறைத்து உங்களுக்கு உற்சாக மனநிலையை கொண்டு வரும். வீட்டின் தென் மேற்கு திசையில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய புகைப்படத்தை மாட்டுங்கள்.

வீட்டில் யானை உருவம் உள்ள பொம்மைகள், சிலை அல்லது படம் என ஏதேனும் ஒன்றை இருக்குமாறு பார்த்துக்கொள்ள அது நல்ல அதிர்ஷ்டத்தை, பாதுகாப்பை, வளத்தை வீட்டிற்குள் கொண்டு வரும்.

வீட்டின் படுக்கை அறையில் உங்கள் மனம் கவர்ந்த சுவர் கடிகாரத்தை மாட்டுங்கள். அது எப்போதுமே நல்ல சக்தியை பரவ விடும். நீங்கள் உட்காரும் நாற்காலி கூட நல்ல சக்தியை கொண்டு வருமாம். அதனால் நீங்கள் காபி குடிக்கும்போது, பேப்பர் படிக்கும்போது, எழுதும்போது என அனைத்து நேரத்திலும் அது உங்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையிலான நாற்காலியில் உட்காருங்கள்.

வீட்டிலுள்ள தலையணை மற்றும் படுக்கை பெட்ஷீட் போன்றவற்றை அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் அழுக்கு சேர சேர வீட்டிற்குள் கெட்ட சக்தி வரும் வாய்ப்பும், நோய்கள் வரும் வாய்ப்பும் உண்டாகும். எனவே, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவற்றை மாற்றி விடுங்கள்.

இதையும் படியுங்கள்:
வாய் சுகாதாரம் முக்கியம் மக்களே... நச்சுன்னு சில டிப்ஸ்! 
சுபிட்சமான வீடு

உங்கள் வீட்டின் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதோடு கழிவறை கோப்பையின் பின்புறம் கட்டி கல் உப்பை போட்டு வையுங்கள்.

ஒரு வீட்டின் சுபிட்சம் அந்த வீடு சுத்தமாக இருப்பதுதான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும. நாம் நம் வீட்டில் நுழையும்போது ஒரு நிம்மதி பரவசம் வர வேண்டும். அதற்கு வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குப்பை கூளங்கள் சேரச் சேர வீட்டின் அதிர்ஷ்டம் மறையும்.

தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு மற்றும் மாலை சூரிய மறைவுக்கு பின்னர் வீட்டின் தென் கிழக்கு திசையில் சூடம் கொளுத்தி வாருங்கள். காலையிலும், மாலையிலும் வீட்டின் அனைத்து கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வையுங்கள். அது வீட்டின் உள்ளே புதிய வெளிச்சத்தையும், புதிய காற்றையும் அனுப்பும்.

உங்கள் பெயரையும், தெளிவான விலாசத்தையும் உங்கள் வீட்டின் முன் பளிச்சென்று தெரியுமாறு எழுதி வையுங்கள். அது உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை கொண்டு வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com