வாய் சுகாதாரம் என்பது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது. நமது வாயை சுத்தமாக வைத்திருப்பது பல் சொத்தை, ஈறு நோய்கள், வாய் நாற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்க உதவும். இந்தப் பதிவில் வாயை சுகாதாரமாக வைத்திருக்க சில எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாம்.
வாயை சுகாதாரமாக வைத்திருக்கும் வழிகள்:
தினமும் இரண்டு முறை காலை மற்றும் இரவு மென்மையான டூத் பிரஷ் பயன்படுத்தி பல் துலக்கங்கள். குறிப்பாக அதிக ரசாயனங்கள் கலக்கப்படாத பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்.
பல் துலக்குவது மட்டுமின்றி தினமும் ஒருமுறையாவது பல் நூல் பயன்படுத்தி பற்களுக்கு இடையே உள்ள உணவுத் துகள்களை நீக்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், உணவுத் துகள்கள் பற்களுக்கு இடையில் சிக்கி, உங்களது வாய் சுகாதாரத்தை மோசமாக்குவது தடுக்கப்படும்.
ஒவ்வொரு முறையும் பல் துலக்கிய பின்னர் வாய் கொப்பளிப்பதற்கு மவுத்வாஷ் பயன்படுத்தி வாயை சுத்தம் செய்ய வேண்டும். இது உங்களது வாயில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கிருமிகளை நீக்க உதவும்.
ஒருவேளை உங்களுக்கு வாய்ப்புண்கள் அல்லது பிற வாய் தொற்றுகள் இருந்தால் மருத்துவரின் பரிந்துரைப்படி வாயில் உள்ள கிருமிகளை கொல்லும் கொப்பளிப்பு திரவத்தைப் பயன்படுத்தலாம். எதுவாக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு முடிவெடுக்க வேண்டும்.
குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது பல் மருத்துவரை அணுகி பற்களை பரிசோதித்து, ஏதேனும் பிரச்சினை உள்ளதா என தெரிந்து கொள்வது முக்கியம். இதன் மூலமாக வாயில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து விரைவாக மருத்துவம் பார்க்க முடியும்.
சர்க்கரை மற்றும் அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளை குறைத்து, பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் போன்ற சத்தான உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். இவை உங்கள் வாயில் அதிகமாக வினைபுரியாது என்பதால், வாய் எப்போதும் சுகாதாரத்துடன் இருக்கும்.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் வாய் புற்றுநோய் மற்றும் பிற வாய் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, இவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. இப்போது இல்லை என்றாலும், வயதாக வயதாக உங்களுக்கு அவற்றால் பாதிப்புகள் ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு பற்கள் நன்றாக முளைத்ததும் அவர்களுக்கு பல் துலக்குதல் மற்றும் நூல் பயன்படுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் வழக்கமான பல பரிசோதனை செய்து அவர்களது வாய்ஸ் சுகாதாரத்தில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
வாய் சுகாதாரம் என்பது நமது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். மேலே குறிப்பிட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றி நம்முடைய வாயை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பலவிதமான வாய் தொடர்பான பிரச்சனைகளையும் நாம் தடுக்கலாம்.