சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி, மற்றும் கடலூர் மக்களுக்கான மழைக்கால வீட்டுப் பராமரிப்பு டிப்ஸ்!

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பெருமழையை எதிர்கொள்ளத் தேவையான முக்கிய வீட்டுப் பராமரிப்பு வழிமுறைகள் இதோ.
வீட்டுப் பராமரிப்பு Monsoon home care
வீட்டுப் பராமரிப்பு Monsoon home careChatGPT Image
கிரி கணபதி

கிரி கணபதி, 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட எழுத்தாளர். Quora போன்ற தளங்களில் எழுதிய அனுபவம் உண்டு.. வீடியோ, பாட்காஸ்ட் வெளியிட்ட அனுபவமும், AI கருவிகளை கையாளும் திறனும் கொண்டவர். ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலகட்டத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர், புதுச்சேரி போன்ற கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். தொடர் மழையினால் ஏற்படும் வெள்ளம், ஈரப்பதத்தில் இருந்து நமது வீடுகளைக் காப்பது மிகவும் அவசியம். எனவே இத்தகைய காலகட்டங்களில் முறையான வீட்டுப் பராமரிப்பு மட்டுமே மழைக்காலத்தில் நமது குடும்பத்திற்கு முழுமையான பாதுகாப்பையும் நிம்மதியையும் தரும்.

சுவர்கள் மற்றும் ரூஃப்!

மழை தொடங்குவதற்கு முன்பாகவே மொட்டை மாடியில் உள்ள சிறு விரிசல்களைச் சரியாகக் கண்டுபிடித்து அடைக்க வேண்டும். அங்கு மழைநீர் கொஞ்சமும் தேங்காமல் இருக்க வாட்டர் புரூஃபிங் கெமிக்கல் பூச்சு கொடுப்பது நல்லது. அதேபோல மாடியில் இருந்து மழைநீர் கீழே இறங்கும் குழாய்களில் உள்ள குப்பைகள், காய்ந்த இலைகளை அகற்றி சுத்தம் சுத்தம் செய்ய வேண்டும்.

கடலோரப் பகுதிகளில் வீசும் உப்புக்காற்றினால் வீட்டின் இரும்பு ஜன்னல்கள் விரைவில் துருப்பிடிக்கும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க ஆன்டி ரஸ்ட் பெயிண்ட் அடிப்பது நல்லது. சுவர்களில் வெதர் கோட்டிங் பெயிண்ட் அடிப்பதன் மூலம் மழைநீர் உள்ளே கசிந்து மோசமான பூஞ்சைகள் உருவாவதை முற்றிலும் தடுக்கலாம். இது வீட்டின் வெளிப்புற அமைப்பை வலுவாக்கும் ஒரு நல்ல தற்காப்பு முறை.

மின்சாதனங்களை கவனிக்கவும்!

மழைக்காலத்தில் சுவர்களில் ஏற்படும் அதிகப்படியான ஈரப்பதத்தால் எதிர்பாராத மின் கசிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே வீட்டில் உள்ள எர்த் வயரிங் சரியாக உள்ளதா என்பதை ஒரு தகுதிவாய்ந்த எலக்ட்ரீஷியன் மூலம் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். ஜன்னல் ஓரத்தில் உள்ள சுவிட்ச் போர்டுகளில் தண்ணீர் படாமல் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்வது அனைவரின் பாதுகாப்பிற்கும் முக்கியமானது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டில் டெங்கு கொசு வளரும் மறைமுகமான இடங்கள்… உடனே பாருங்கள்!
வீட்டுப் பராமரிப்பு Monsoon home care

வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களின் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற விலையுயர்ந்த மின்சாதனப் பொருட்களைத் தரையில் இருந்து சற்று உயரமாக மரப்பலகைகள் மீது ஏற்றி வைக்க வேண்டும். எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் மழைநீர் புகுந்தால் கூட இந்த எளிய முன்னேற்பாடு உங்களின் அத்தியாவசிய பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கப் உதவும்.

வீட்டுப் பராமரிப்பு Monsoon home care
வீட்டுப் பராமரிப்பு Monsoon home careChatGPT Image

மரப்பொருட்கள் மற்றும் வீட்டின் உட்புறம்!

வீட்டிற்குள் இருக்கும் விலையுயர்ந்த மரத்தாலான கதவுகள், பீரோக்களைச் சுவரில் இருந்து குறைந்தது 2 அங்குலம் தள்ளி வைக்க வேண்டும். சுவரில் இருக்கும் ஈரம் மரப் பொருட்களில் பரவி எளிதாகப் பூஞ்சை பிடித்துவிடும். அலமாரிகளில் ஏற்படும் கெட்ட வாடையைத் தடுக்க சிலிகா ஜெல் பயன்படுத்தலாம். 

மழைக்காலத்தில் ஈரத்துணிகளை வீட்டிற்குள் காயவைப்பதை நாம் முழுமையாகத் தவிர்க்க வேண்டும். மழை இல்லாத நேரங்களில் அறைகளில் நல்ல காற்றோட்டம் இருக்கும்படி ஜன்னல்களைத் திறந்து வைப்பது உள்ளே இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தை நீக்கும். தரை மற்றும் கழிவறைகளை வாரம் 2 முறை தரமான கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது வீட்டில் உள்ள கிருமிகளை அழித்துவிடும்.

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ! மழைக்காலத்தில் ஷாக் அடிப்பதற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
வீட்டுப் பராமரிப்பு Monsoon home care

வடிகால் அமைப்பை கவனிங்க! 

வீட்டின் முன்புறம் உள்ள வடிகால் வாய்க்கால்களைச் சுத்தம் செய்து தெருவில் ஓடும் மழைநீர் வீட்டிற்குள் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்புத் தொட்டியில் உள்ள அடைப்புகளை நீக்கி மழைநீர் தடையின்றி பூமிக்குள் செல்ல வழிவகை செய்ய வேண்டும். வீட்டைச் சுற்றித் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்து நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி மழைக்காலத்தில் வீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.