மரப்பலகைகளில் காய்கறி வெட்டுகிறீர்களா? அச்சச்சோ… உடனே தூக்கிப் போடுங்க!

vegetable cutting board
vegetable cutting board
Published on

நம்ம வீடுகள்ல காய்கறி வெட்டறதுக்கு நிறைய பேர் மரப்பலகையைப் பயன்படுத்துவாங்க. இத பழங்காலங்கள்ல இருந்தே நாம பயன்படுத்திக்கிட்டு வறோம். ஆனா, இந்த மரப்பலகைகள்ல காய்கறி வெட்டும்போது, சில ஆபத்துகள் இருக்குங்கறது நிறைய பேருக்குத் தெரியாது. அது என்னென்னனு இப்போ ஒரு 5 விஷயத்தைப் பார்ப்போம்

1. இந்த மரப்பலகைகள்ல பாக்டீரியா பரவ அதிக வாய்ப்பு இருக்கு. ஏன்னா, நம்ம கத்தி படும்போது மரத்துல சின்ன சின்ன கீறல்கள் விழும். அந்த கீறல்களுக்குள்ள காய்கறித் துண்டுகளோ, நீர்ச்சத்தோ போயி சிக்கிக்கும். இதை சரியா கழுவி சுத்தம் செய்யலைனா, அங்க பாக்டீரியாக்கள் பெருகி, நம்ம அடுத்தமுறை காய்கறி வெட்டும்போது அது உணவுல கலந்து உடம்புக்குள்ள போயிடும். இது ரொம்பவே ஆபத்தான விஷயம்.

2. மரப்பலகைகளை சுத்தம் செய்யறது ரொம்ப கஷ்டம். பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி போர்டுகளை மாதிரி தண்ணில போட்டு சும்மா அலசினா மட்டும் போதாது. மரத்துல தண்ணி ஊறி, அது பாக்டீரியா வளர்ச்சிக்கு இன்னும் சாதகமா இருக்கும். அதை நல்லா தேய்ச்சு, வெயில்ல காய வைக்கணும். இல்லனா, பூஞ்சை காளான் பிடிக்கவும் வாய்ப்பு இருக்கு.

3. இந்த மரப்பலகைகள் சீக்கிரம் பழுதாகிடும். தொடர்ச்சியா கத்தி படும்போது, பலகையோட மேல்பகுதி மெல்ல மெல்ல அரிக்க ஆரம்பிச்சிடும். ஒரு கட்டத்துல, பலகை மேடு பள்ளமா ஆகிடும். அப்போ காய்கறி வெட்டும்போது, கத்தி வழுக்கி கையில் வெட்டிக்கிற ஆபத்து அதிகமா இருக்கும். இது நம்ம பாதுகாப்புக்கு நல்லது இல்லை.

4. மரப்பலகைகள் வாசனையை உறிஞ்சும் தன்மை கொண்டது. உதாரணத்துக்கு, வெங்காயம், பூண்டு, மீன் இதையெல்லாம் மரப்பலகையில வெட்டினா, அந்த வாசனை அப்படியே பலகையில ஒட்டிக்கும். அடுத்தமுறை நீங்க பழங்கள் அல்லது வேற ஏதாவது வெட்டும்போது, அந்த வாசனையும் கூடவே வரும். இது சில நேரங்கள்ல ரொம்பவே எரிச்சலூட்டும்.

5. மரப்பலகைகள் பராமரிக்கிறதுக்கு நிறைய மெனக்கெடல் தேவைப்படும். வெறும் தண்ணில கழுவுறது மட்டும் போதாது. அடிக்கடி எண்ணெய் தேய்க்கணும், வெயில்ல காய வைக்கணும், சுத்தமான துணியால துடைக்கணும்னு நிறைய வேலை இருக்கும். இதையெல்லாம் சரியா செய்யலைனா, பலகை சீக்கிரம் கெட்டுப் போயிடும்.

இதையும் படியுங்கள்:
பல் துலக்குவது பற்றி இதெல்லாம் தெரியாம இருந்தா, வாய்க்கு ஆபத்து!
vegetable cutting board

மரப்பலகைகள் பயன்படுத்த எளிதா இருக்கலாம், ஆனால் அதுல ஒளிந்திருக்கும் ஆபத்துகளையும் நாம புரிஞ்சுக்கணும். ஆரோக்கியமான சமையலுக்கு, சுத்தமான மற்றும் பாதுகாப்பான வெட்டும் பலகையைப் பயன்படுத்துவது ரொம்பவே முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com