
நம்ம எல்லாரும் காலையில எழுந்ததும் பல் துலக்குவோம். இது ஒரு சாதாரணமான விஷயம்னு நாம நினைக்கலாம். ஆனா, தினமும் நாம செய்யுற இந்த பல் துலக்குறதுல கூட சில தவறுகளை செய்றோம்னு சொன்னா நம்புவீங்களா? இந்த சின்னச் சின்ன தவறுகள்தான் நம்ம வாய் ஆரோக்கியத்தை ரொம்பவே பாதிக்குதுன்னு பல் மருத்துவர்கள் சொல்றாங்க.
வெறும் பல் துலக்குனா மட்டும் போதாது, சில விஷயங்களை சரியா செய்யலைன்னா, பல் சொத்தை, ஈறு நோய், வாய் துர்நாற்றம்னு நிறைய பிரச்சனைகள் வரும். அப்போ, நாம என்னென்ன தவறுகள் செய்றோம், அதை எப்படி சரி பண்றதுன்னு இந்தப் பதிவுல பார்க்கலாம் வாங்க.
நீங்க செய்ற 5 பெரிய தவறுகள்!
1. அவசர அவசரமா பல் துலக்குறது: நிறைய பேர், ஒரு நிமிஷம்கூட ஆகாம பல் துலக்கி முடிச்சிடுவாங்க. ஆனா, பல் மருத்துவர்கள் குறைஞ்சது ரெண்டு நிமிஷமாவது பல் துலக்க சொல்றாங்க. நாம சரியான நேரம் கொடுக்கலைன்னா, பற்பசைல இருக்கிற ஃப்ளூரைடு நம்ம பற்களுக்குள்ள போய் வேலை செய்ய நேரம் கிடைக்காது.
2. ரொம்ப ஹார்டான பிரஷ் யூஸ் பண்றது: சிலர், கடினமான பிரஷ் யூஸ் பண்ணா பற்கள் நல்லா சுத்தம் ஆகும்னு நினைப்பாங்க. ஆனா, இது ரொம்ப தப்பு! ரொம்ப ஹார்டான பிரஷ் பயன்படுத்தினா, ஈறுகள்ல வலி வரும், பற்சிப்பியும் தேய்ஞ்சு போகும். இதனால பற்கள் ரொம்ப சென்சிட்டிவ் ஆகிடும். அதனால, எப்பவுமே சாஃப்டான பிரஷ் அல்லது எக்ஸ்ட்ரா சாஃப்ட் பிரஷ் தான் பயன்படுத்தணும்.
3. நாக்கை சுத்தம் பண்ணாம விடுறது: பல் துலக்குனாலும், நாக்கை சுத்தம் பண்ணலைன்னா, வாயில துர்நாற்றம் வரும். பாக்டீரியாக்கள் நாக்குலேயே தங்கிடும். அதனால, பல் துலக்கும் போது டங் கிளீனர் யூஸ் பண்ணி நாக்கையும் மறக்காம சுத்தம் செய்யணும்.
4. ஒரே பிரஷை வருஷக்கணக்கா யூஸ் பண்றது: நிறைய பேர், ஒரு பிரஷ் வாங்கினா, அது தேயுற வரைக்கும் மாத்தவே மாட்டாங்க. ஆனா, இது ரொம்பவே தப்பு! பிரஷ்ஷுல உணவுத் துகள்களும், பாக்டீரியாக்களும் சேர்ந்து அழுக்காயிடும். அதனால, மூணு மாசத்துக்கு ஒரு தடவை கட்டாயம் உங்க பல் துலக்கும் பிரஷை மாத்தணும்.
5. தப்பான முறையில பல் துலக்குறது: நம்மில் நிறைய பேருக்கு, சரியான முறையில எப்படி பல் துலக்கணும்னு தெரியாது. சாதாரணமாக கை பிரஷ் பயன்படுத்துறீங்கன்னா, பிரஷ்ஷை 45 டிகிரி கோணத்துல வச்சு, பற்களை மெதுவா முன்னும் பின்னுமா துலக்குங்க. பல்லோட எல்லா பக்கத்தையும், உள்ளே, வெளியே, மெல்லுற பகுதி எல்லாத்தையும் சுத்தம் செய்யணும்.
ஆரோக்கியமான பல் துலக்க சில டிப்ஸ்:
அதிக சக்தி கொடுத்து நீண்ட நேரம் துலக்கினா பற்கள் சுத்தமா இருக்கும்னு நினைக்காதீங்க. அப்படி செஞ்சா ஈறுகளும் பற்களும் பாதிக்கப்படும். உங்க வாய் அளவுக்கு சரியா இருக்கிற ஒரு மென்மையான பிரஷ்ஷை பயன்படுத்தறதுதான் ரொம்ப முக்கியம். இந்த சின்ன சின்ன மாற்றங்கள் உங்க வாய் ஆரோக்கியத்தை ரொம்பவே மேம்படுத்தும்.