சாவியை மட்டும் கொடுத்தா போதாது; ஒரு சின்ன அலட்சியம் உங்களை ஜெயிலுக்கு அனுப்பலாம்!

vehicle rc transfer rules
vehicle rc transfer rules
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

காரோ, பைக்கோ, ஸ்கூட்டரோ விற்க விரும்புவார்கள் அந்த வேலையை சட்டப்படி செய்யவேண்டும். நம்மில் பலர் பணத்தை பெற்றுக்கொண்டு சாவியை கொடுத்து விடுகிறார்கள். வாகனங்களை விற்கும்போது அதற்கான முறைகள் உண்டு. நாம் யாருக்கு விற்கிறோமோ அவர் பெயருக்கு வாகனம் சம்பந்தப்பட்ட RC புத்தகத்தில் மாற்றப்பட வேண்டும்.

இதில் நாம் அலட்சியம் காட்டினால் பெரிய சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொண்டு அவதி மட்டுமல்லாமல் பண இழப்பையும் சந்திக்க நேரிடும். வாகனத்தின் RC புத்தகத்தில் நம் பெயர் நீக்கப்பட்டு வாங்குபவரின் பெயர் ஏற்றப்படும் வரை அந்த வாகன சம்பந்தமான எல்லா நடப்புகளுக்கும் நாமே பொறுப்பாக நீதிமன்றம் கருதும். இப்போது ஒருவர் தனது வண்டியை பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு வாங்குபவருக்கு கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அப்படி வாங்குபவர் அந்த வண்டியை வைத்து விபத்து ஏற்படுத்தி உயிர் சேதமோ அல்லது காயமோ மூன்றாவது மனிதருக்கு நடந்து விட்டால் அந்த வண்டியின் உரிமையை முறைப்படி transfer செய்யாத விற்பவரைதான் சேரும். அவர்தான் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு தரும்படியாகிவிடும்.

சமீபத்தில் பெங்களூரில் ஒருவர் தன் இருசக்கர வாகனத்தை விற்றார் ஆனால் முறைப்படி உரிமையை மாற்றவில்லை. விற்றவரின் பெயரிலேயே வாகனம் தொடர்ந்து இருந்துள்ளது. வாங்கினவர் அந்த வாகனத்தை தாறுமாறாக ஒட்டி விபத்து ஏற்படுத்தி ஒருவரை உயிரிழக்க செய்துவிட்டார். இறந்தவரின் மனைவி நஷ்ட ஈடு கேட்டு விற்றவரின் மேல் வழக்கு தொடர்ந்தார். விற்றவர் தான் வண்டியை விபத்து ஏற்படுத்தியவருக்கு விற்று விட்டதால்தான் பொறுப்பில்லை என்று வாதாடினார். கோர்ட் அதை ஒப்புக்கொள்ளாமல் அவர்தான் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 47 லட்சம் நஷ்ட ஈடு தர உத்தரவு இட்டது.

எனவே வாகனம் விற்க விரும்புவர்கள் RC புத்தகம் வாங்குபவரின் பேருக்கு மாற்றப்பட்டதை உறுதி செய்த பிறகே வண்டியை கொடுக்கவேண்டும். பெயர் மாறினால் ஒழிய அந்த வண்டியை உபயோகித்து வாங்குபவர் செய்யும் எல்லா தப்பு தண்டாகளுக்கும் விபத்துகளுக்கும் முறையின்றி விற்பவர் பொறுப்பாகிவிடுவார்.

இதையும் படியுங்கள்:
Home Tips: பயனுள்ள வீட்டு குறிப்புகள்..!
vehicle rc transfer rules

இப்போதும் நிறைய பேர்கள் வண்டியை வாங்கிக் கொண்டு ஒரு பேப்பரில் கையெழுத்து போட்டு தந்துவிட்டு போய் விடுகிறார்கள். விற்பவர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளக்கூடாது. அப்படி கொடுக்கப்பட்ட வெத்து பேப்பர் செல்லுபடியாகாது. விபத்து மட்டுமல்ல நாம் முறைப்படி சட்டப்படி விற்கபடாத வாகனங்களை கடத்தல் போன்ற சட்ட விரோத காரியங்களையும் செய்து நம்மை கம்பி எண்ணவைத்து விடுபவர்களுக்கு உண்டு. பழைய வண்டிகளை வாங்கி விற்பவர்கள் சிலர் இந்த விஷயத்தை லேசாக எடுத்து செயல்படுகிறார்கள். உஷார்!

logo
Kalki Online
kalkionline.com