"சமைக்கிறது கூட ஈஸிங்க... ஆனா அந்தப் பாத்திரத்தைக் கழுவுறது இருக்கே, அதுதான் பெரிய வேலை" என்று புலம்பாத இல்லத்தரசிகளே இல்லை. தினமும் நடக்கிற வேலைதானே, இதுல என்ன பெருசா இருக்குன்னு நாம அசால்ட்டா இருப்போம். ஆனா, காலங்காலமா நாம செஞ்சிட்டு வர்ற சில பழக்கங்கள், பாத்திரத்தோட ஆயுளைக் குறைக்கிறது மட்டுமில்லாம, நம்ம ஆரோக்கியத்துக்கும் வேட்டு வைக்குது. பாத்திரம் கழுவுறதுல நாம செய்யுற சின்னச் சின்ன தவறுகளையும், அதை எப்படிச் சரியா செய்யுறதுங்கிறதையும் இப்ப பார்ப்போம்.
உங்களிடம் பாத்திரங்களைக் கழுவும் ஜெல் (Dishwashing gel) இருக்கா..?
நான்ஸ்டிக் பாத்திரங்கள் உஷார்!
இப்போதெல்லாம் தோசைக்கல் முதல் குழம்பு சட்டி வரை எல்லாமே 'நான்ஸ்டிக்' மயமாகிடுச்சு. ஆனா, அதைச் சுத்தம் பண்ணும்போதுதான் நாம பெரிய தப்பு பண்றோம். பிசுக்கு போகணும்னு நினைச்சு, சாதாரண இரும்பு நார் போட்டுத் தேய்ப்போம். தயவுசெஞ்சு அப்படிச் செய்யாதீங்க. அதுல இருக்கிற கோட்டிங் பிய்ந்து போய், அதுல சமைக்கும்போது மோசமான ரசாயனங்கள் உணவில் கலக்க வாய்ப்பிருக்கு. அதுக்குன்னு இருக்கிற மென்மையான ஸ்பாஞ்ச் மட்டுமே பயன்படுத்துங்க.
இரவு நேரச் சோம்பேறித்தனம்!
ராத்திரி சாப்பிட்ட மயக்கத்துல, "காலையில பார்த்துக்கலாம்"னு எச்சில் பாத்திரங்களை சிங்க்ல அப்படியே போட்டுட்டுப் படுக்கப் போயிடுவோம். இதுதான் கிருமிகளுக்குக் கொண்டாட்டம். ராத்திரி முழுக்க அந்தக் கழிவுல பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி, காலையில ஒரு கெட்ட வாடையை உண்டாக்கும். எவ்வளவு டயர்டா இருந்தாலும், ராத்திரியே பாத்திரத்தைக் கழுவி வெச்சிட்டா, காலையில ஃப்ரெஷ்ஷா இருக்கலாம், கரப்பான் பூச்சி தொல்லையும் இருக்காது.
பெரும்பாலும் நாம பைப்பைத் திறந்து சாதாரணத் தண்ணீரில்தான் கழுவுவோம். ஆனா, அசைவம் சமைச்ச பாத்திரங்களையோ அல்லது எண்ணெய் பிசுக்கு அதிகமா இருக்கிற தட்டுகளையோ கழுவும்போது, கடைசியா ஒருமுறை சுடுதண்ணீரில் அலசுங்க. இது பாத்திரத்துல கண்ணுக்குத் தெரியாம ஒட்டியிருக்கிற கிருமிகளை அழிச்சிடும். பாத்திரமும் 'பளிச்'னு இருக்கும்.
ஈரத்தோடு அடுக்காதீர்கள்!
பாத்திரத்தைக் கழுவின உடனே, அதுல ஈரம் சொட்டச் சொட்ட அப்படியே ஸ்டாண்ட்ல அடுக்கி வெச்சிடுவோம். இது தப்பு. ஈரம் காயாம இருந்தா, அதுல பூஞ்சை வர வாய்ப்பிருக்கு. குறிப்பா, மரக்கரண்டிகள்ல ஈரம் இருந்தா சீக்கிரம் பூசணம் பிடிக்கும். முடிஞ்ச வரைக்கும் பாத்திரத்தைக் கழுவினதும் வெயில்ல காய வைங்க, இல்லன்னா ஒரு சுத்தமான துணியாலத் துடைச்சுட்டு அப்புறமா எடுத்து வைங்க.
இந்தச் சின்ன மாற்றங்கள் நம்ம வீட்டுச் சமையலறையைச் சுகாதாரமா வெச்சுக்க உதவும். பாத்திரம் கழுவுறது வெறும் அழுக்கை நீக்குறது மட்டும் இல்ல, நம்ம குடும்பத்தோட ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிற ஒரு விஷயம்.
உங்களிடம் பாத்திரங்களைக் கழுவும் ஜெல் (Dishwashing gel) இருக்கா..?