வெயிலை விரட்டும் வெட்டிவேர் மணம்: உங்கள் வீட்டு ஜன்னல்களில் ஒரு நறுமணத் தென்றல்!

vetiver-curtains
vetiver-curtains
Updated on

வெயில் மிக கடுமையாக உள்ளது.‌ என்னதான் ஏர் கண்டிஷனர் இருந்தாலும்,  நல்ல சுகமான வெளிக்காற்று வீடட்டுக்குள் நுழைந்தால் அது நமக்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தருகிறது‌. காலம் காலமாக கோடைக்காலங்களில் வெட்டிவேர் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. 

இந்த வெட்டிவேர் இயற்கையான குளிர்ச்சியைத் கொடுக்கும் இயற்கை ஏர்கண்டிஷனர் ஆகும்‌. இந்த வெட்டிவேரால் செய்யப்பட்ட கர்ட்டன்கள் நம் வீட்டு ஜன்னல்களிலும் கதவுகளிலும் தொங்கவிடப்பட்டு அதன்மீது தண்ணீர் தெளிக்க, வெளிக்காற்று தென்றலாய் மாறி உள்ளே வருவதுடன் வெட்டிவேரின் நறுமணம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும்.

வெட்டிவேர்

ஒருவகை புல்வகையான க்ரைசோபோகான்  சிசானியோடைஸ் (chrysopogon zizanioides) என்ற புல் வகை செடியில் அடர்த்தியாக மண்ணுக்கு அடியில் உருவாகும் வேர்களே  வெட்டி வேர் என அழைக்கப்படுகிறது.‌ இது அறுவடை செய்தபிறகு பிறகு நன்கு காய வைக்கப்பட்டு அடர்த்தியான பாய் மற்றும் கர்ட்டன்களாக உருவாக்கப் படுகின்றன. 

குளிர்ச்சியான சூழல் என்பது  தண்ணீர் இதன் மீது தெளிக்கப்பட்டதும் அது Evaporate ஆகி நல்ல குளிர்ந்த காற்று வீசுகிறது.‌ இதன் மூலம் அறைகளின் வெப்பம் குறைக்கப்பட்டு குளிர்ச்சியாகிறது.‌

நீங்கள் வெட்டிவேர் திரைச்சீலை மற்றும் கர்ட்டன்கள் பயன்படுத்த மின்சாரம் தேவலயில்லை.‌‌ இது மேலும் பல நாட்கள் நல்ல முறையில் பாதுகாப்பாக வைக்கலாம். வெட்டிவேரில் தண்ணீர் தெளிப்பதன் மூலம் கோடை கால மதிய வேளைகளில் ஏற்படும் அதிக வெப்பம் தணிக்கப்படுகிறது.  மேலும் தண்ணீர் தெளிக்கப் பட்டதும் இதிலிருந்து வீசும் மணம் வீடு முழுவதும் பரவுவதால் நல்ல அமைதியான சூழலை ஏற்படுத்தும்.

இந்த வெட்டி வேர் தூசுகளை நீக்கி தூய்மைப்படுத்தும் பண்பு பெற்றுள்ளது. இதன் இனிய மணம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து சோர்வை நோக்கக் கூடியது. வெட்டி வேரில் இயற்கையான எண்ணைகள் உள்ளன. இந்த எண்ணைகள் பூச்சிகள் வராமல் தடுக்கக் கூடியதாக கருதப்படுகிறது.

வெட்டிவேர் சென்ஷியல் எண்ணை அரோமாதிராபியில்  Oil of Tranquility என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மனதை அமைதிப்படுத்தும் சக்தி பெற்றது.‌ உங்கள் வீட்டு பால்கனியில் வெட்டிவேர் கர்ட்டன் தொங்க விடுவதன் மூலம்  குளிர்ச்சியான காற்றை பெறமுடியும்.‌  நல்ல காற்று உள்ளே புகும் அளவிற்கு ஜன்னல்களை திறந்து வையுங்கள்.  எப்போதும் வெட்டிவேர் கர்ட்டனில் தண்ணீர் தெளித்து வையுங்கள். இந்த கர்ட்டனை சுத்தம் செய்ய தண்ணீரால் கழுவுங்கள்‌. பிறகு நன்றாக வெயிலில் காயவைத்து பயன்படுத்தவும்.

இதையும் படியுங்கள்:
"நோ" சொல்லத் தெரியுமா? தெரிந்தவர்களிடம் பணத்தை இழக்காமல் இருக்க இதோ சில 'ஸ்மார்ட்' பொய்கள்!
vetiver-curtains

நவீன காலத்திற்கு ஏற்றபடி தங்க ப்ரௌன் நிறங்களில் இவை கிடைக்கின்றன‌‌. இந்த வெட்டி வேர் கர்ட்டன் தயாரிக்க மூங்கில், லினன் மற்றும் டெர்ரகோடா  பொருட்களை பயன்படுத்தவும்‌ வீடுகளில்  இந்த வெட்டிவேர் கர்ட்டன்கள் திரைச்சீலை பயன்பாடு உங்கள் வீட்டை கோடைக்காலத்தில் ஜில்லென்று வைப்பதுடன் மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைக்கக்கூடிய வெட்டிவேரின் வாசமும் வீடு முழுவதும் நிறைந்திருக்கும்.

நாட்டு மருந்து கடைகளில் வெட்டிவேர் கிடைக்கும் அதை வாங்கி உங்கள் ஜன்னல்களில் தொங்கவிட் தண்ணீர் தெளிக்க நல்ல நறுமணம் வீசும். ஜன்னலை திறந்து வைப்பதன் மூலம் நறுமணம் உள்ளே குளிர்ந்த காற்றை இந்த கோடையில் அனுபவிக்கலாம்.‌சமயலறை ஜன்னலிலும் இந்த வேரை வாங்கித் தண்ணீர் தெளித்து வைக்க சமயலறை மணமாகத் திகழும்.  இந்த சூழலில் சமையல் வவேலை சுலபமாகும்.

logo
Kalki Online
kalkionline.com