குழந்தைகளுக்கு சரியான உணவுகளைக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். ஆனால் குழந்தைகள் எப்போதும் விளையாட்டுத்தனமாக இருப்பதால் அவர்களின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். என்னதான் பல உணவுகளை அவர்களுக்கு நாம் கொடுத்தாலும், அவர்களின் மூளையை சுறுசுறுப்பாக்கி நன்றாக உணரச் செய்யும் ரகசிய உணவுப் பொருள் ஒன்று உள்ளது. அதுதான் ஆங்கிலத்தில் வால்நட் என அழைக்கப்படும் அக்ரூட் பருப்புகள்.
இந்த பருப்புகளை உங்கள் குழந்தைக்கு தினசரி கொடுத்து வருவதால், அவர்களை ஆரோக்கியமாகவும், புத்திசாலியானவர்களாகவும் நீங்கள் மாற்ற முடியும். இந்த பதிவில் என்ன காரணத்திற்காக உங்கள் குழந்தைக்கு அக்ரூட் பருப்பு கொடுக்க வேண்டும் எனத் தெரிந்து கொள்ளுங்கள்.
மூளை சுறுசுறுப்புக்கு உதவும்: குழந்தைகளின் மூளை என்பது பல விஷயங்களை தேடி அறிந்து கொள்வதற்காக எப்போதுமே கடினமான செயல்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும். இந்த அக்ரூட் பருப்புகள் மூளையின் செயல்பாட்டுக்கு சிறந்த எரிபொருளாக அமைகிறது. குழந்தைகள் நன்றாக சிந்தித்து செயல்படவும், கற்கும் விஷயங்கள் அப்படியே நினைவுகளில் தங்கவும் உதவி செய்யும். எனவே உங்களது குழந்தை எல்லா விஷயங்களிலும் வெற்றி பெற வேண்டுமெனில் அக்ரூட் பருப்புகளை அவர்களுக்குக் கொடுங்கள்.
நல்ல மனநிலையை தரும்: குழந்தைகளின் செயல் திறன் மற்றும் மூளை இயக்கம் சிறப்பாக இருக்கும் போது, அவர்களின் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அக்ரூட் பருப்புகளில் மனநிலையை சிறப்பாக வைத்திருக்கும் சத்துக்கள் இருப்பதால், இவற்றை தயிரில் கலந்தோ அல்லது சாலட்களில் சேர்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
எலும்புகளை வலுவாக்கும்: பொதுவாகவே எல்லா பெற்றோர்களுக்கும் தங்களது குழந்தை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே உங்களின் விருப்பத்திற்கு அக்ரூட் பருப்புகள் நன்கு உதவும். குறிப்பாக இது இதய தசைகளை வலுப்படுத்தி எலும்புகளையும் வலுவாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது: வால்நட் பார்ப்பதற்கு சிறிய அளவில் இருந்தாலும் அதில் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் போன்றவை நிறைந்துள்ளது. இவை குழந்தைகளை வலுவாகவும், புத்திசாலிதையாகவும், செரிமானத்தை சிறப்பாகவும் வைத்திருக்க உதவும்.