வீட்டை தாவரங்களால் அலங்கரிக்க வேண்டுமா? இந்த 4 விஷயங்களை அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Want to decorate the house with plants? You must know these 4 things
Want to decorate the house with plants? You must know these 4 things

வீட்டை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தற்போது பலரின் ஆசையும் முழு நேர வேலையுமாகிவிட்டது. கலைப் பொருட்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், சுவரில் மாட்டப்படும் பொருட்கள் மற்றும் மரச்சாமான்களால் நாம் நமது வீட்டை கவனத்துடன் பார்த்து பார்த்து அலங்கரித்து வருகிறோம். இவற்றில் முக்கியமான ஒன்றுதான் வீட்டை நாம் அலங்கரிக்கப் பயன்படுத்தும் தாவரங்கள். வீட்டில் தாவரங்களை வைக்கும்போது அவை வாடி விடாமல் அழகாக இருக்க, நாம் சிலவற்றை தெரிந்துக்கொள்வது அவசியம். அதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

வீட்டின் பரப்பளவைத் தெரிந்துக்கொள்ள வேண்டும்: தாவரங்கள் வைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தவுடனே முதலில் வீட்டின் பரப்பளவைத் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். எங்கே வைத்தால் சரியாக இருக்கும்? எவ்வளவு பெரிய தாவரத்தை எங்கே வைப்பது? போன்றவற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, தாவரங்கள் சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் நிறைந்த இடங்களில்தான் நன்றாக வளரும். ஆகையால், அதற்கு ஏற்றவாறு இடத்தை தேர்ந்தெடுப்பது அவசியம். அதாவது, ஜன்னல் அருகே, அலமாரி மேலே, நடைப்பாதைகளுக்கு அருகில் போன்ற இடத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. இருட்டான அறையில் வைக்கக்கூடிய தாவரங்களும் உள்ளன. மூங்கில் செடி, பாம்பு செடி, அரிகா பால்ம், சிசி செடி, மோன்ஸ்ட்ரா போன்ற தாவரங்களை வெளிச்சம் குறைவான இடங்களில் வைக்கலாம்.

வெப்பநிலை தெரிந்து வைக்க வேண்டும்: வீட்டில் தாவரங்கள் வளர சரியான வெப்பநிலை இருக்க வேண்டும். சூரிய ஒளி, ஈரப்பதம் மற்றும் காற்று இவை ஒவ்வொரு செடிகளுக்கு ஏற்றவாறு மாறும். ஆகையால், வீட்டின் வெப்பநிலை அறிந்து அது தாவரங்களுக்கு ஏற்றதாக இருக்குமா என்று தெரிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்து விதமான தாவரங்களையும் ரேடியேட்டர் மற்றும் ஃபிரிட்ஜ் அருகே வைப்பதைத் தவிர்க்கவும். அதேபோல், அதிக வெப்பம் தேவைப்படும் தாவரங்களை மேற்கு திசை ஜன்னல் அருகேயும் குறைந்த வெப்பம் கொண்ட தாவரங்களை வடக்கு திசை ஜன்னல் அருகேயும் வைப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
மெசேஜில் பேசுவதா? நேரில் பேசுவதா? எது நல்லது?
Want to decorate the house with plants? You must know these 4 things

அளவைப் பொறுத்து இடத்தைத் தேர்ந்தெடுங்கள்: சில தாவரங்கள் நாம் தினமும் இலைகளை வெட்டி பராமரிப்பதுபோல் இருக்கும். ஆனால், சில தாவரங்கள் தினமும் கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோன்ற தாவரங்களை வாங்குவது நல்லது. மேலும், அலமாரி, ஜன்னல் அருகே வைக்க வேண்டிய தாவரங்கள் எவை, நடைப்பாதை மற்றும் வீட்டின் மூலையில் வைக்க வேண்டிய தாவரங்கள் என்னென்ன என்று யோசித்து தாவரங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

நன்றாகப் பராமரிக்க வேண்டும்: செடிகளைத் தேர்ந்தெடுக்கும்பொழுது அதனை எப்படிப் பராமரிப்பது என்பதையும் தெரிந்துக்கொள்வது அவசியம். அன்றாடம் தண்ணீர் ஊற்றுதல், காய்ந்த இலையை நீக்குதல், அதற்கேற்ற உரம் தெரிந்து பயன்படுத்த வேண்டும். அதேபோல், தாவரத்தை எதில் வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். கலை நயமிக்க தொட்டிகள், பானைகள் போன்றவற்றை ஓட்டை போட்டு பயன்படுத்தலாம். அப்போதுதான் நீர் அதில் தங்கிவிடாமலும் தாவரம் அழுகாமலும் இருக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com