ஆடைகளை எப்பொழுதும் புதுசு போல வைத்திருக்க வேண்டுமா? அதற்கான வழிகள் என்னென்ன?

Drying and washing the clothes
Drying and washing the clothes

உங்கள் ஆடைகளை நன்கு கவனித்துக்கொள்வதன் மூலம் அவற்றின் தரத்தை பராமரிக்கவும், ஆயுட்காலம் நீடிக்கவும் முடியும். அதை அடைய உங்களுக்கு உதவும் சில வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. வாஷ் கேர் லேபிள்களைப் படிக்கவும்:

உங்கள் துணிகளில் உள்ள துணி பராமரிப்பு லேபிளை வாங்கியவுடன் பார்த்துக்கொள்ளுங்கள். ஆடையை எப்படி துவைப்பது, உலர்த்துவது மற்றும் அயர்ன் செய்வது பற்றிய அத்தியாவசிய தகவல்கள் அதில் இருக்கும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆடையின் சேதத்தைத் தடுக்க முடியும்.

2. சலவைகளை வரிசைப்படுத்தவும்:

நிறம், துணியின் தன்மை மற்றும் சலவை வழிமுறைகளின் அடிப்படையில் உங்கள் சலவைகளை வெவ்வேறு குவியல்களாக பிரிக்கவும். இப்படி துவைப்பதன் மூலம் உங்கள் துணிகளின் தரம் நீடித்திருக்கும்.

3. கறைகளுக்கு முக்கியத்துவம் தேவை:

கறைகளை உடனடியாக போக்க, கறை நீக்கி திரவியத்தை பயன்படுத்துங்கள். துவைப்பதற்கு முன் கறை படிந்த பகுதியை ஊறவைக்கவும். கறையை அகற்றுவதற்கு சூடான நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அது சில நேரங்களில் கறையை நிரந்தரமாக ஆடையிலே படிந்து வைத்துவிடும்.

4. கழுவுவதற்கு குளிர்ந்த நீரைப் பயன்படுத்துங்கள்:

குளிர்ந்த நீரில் கழுவுவதே பொதுவாக ஆடைகளுக்கு சிறந்தது. இது வண்ணங்களைப் பாதுகாக்க உதவுகிறது மற்றும் சுருக்கத்தைத் தடுக்கிறது.

5. மிதமான சோப்பு பயன்படுத்தவும்:

அதிகப்படியான சோப்பு துணிகளை கடினமாகவும் மந்தமாகவும் மாற்றும். ஒவ்வொரு தடவை துவைக்கும் போதும் நீங்கள் பயன்படுத்தும் சோப்பு அளவைக் குறைக்க பழகுங்கள். பேக்கிங் சோடாவுடன் சோப்பை சேர்த்து துவைத்து பாருங்கள். இதன் மூலமும் நல்ல பலன்கிடைக்கும்.

6. துணிகளை உள்பக்கமாக மாற்றி துவைக்கவும்:

உங்கள் ஆடைகளை உள்பக்கமாக மாற்றி துவைப்பது வண்ணங்களின் பிரகாசத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும், சலவை செய்யும் போது உராய்வு ஏற்படாமல் தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டு உபயோக பொருட்களின் ஆயுளை நீட்டிக்க விரும்புறீங்களா?
Drying and washing the clothes

7. உங்கள் சலவை இயந்திரத்தில் அதிக சுமை ஏற்றுவதைத் தவிர்க்கவும்:

ஓவர்லோடிங் துணிகளை கஷ்டப்படுத்தி அவற்றை சேதப்படுத்தும். இயந்திரத்தில் நீங்கள் முழு சுமையையும் பயன்படுத்தலாம் ஆனால் நெரிசலின்றி(Overloading) பயன்படுத்திப்பாருங்கள்.

8. அதிகமான சூரிய ஒளியில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்:

துணிகளை காய வைப்பதற்கு அதிகாலை அல்லது மாலை நேரங்கள் சிறந்தது. நேரடி சூரியஒளி விழும் நேரங்களில் அல்லது மதிய நேரங்களில் துணிகளை காயப் போடுவதால் சில நேரங்களில் துணிகளின் சாயம் வெளுத்து போகும்.

9. கவனத்துடன் இஸ்திரி(Ironing) செய்யுங்கள்:

ஆடையின் லேபிளில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். சரியான வெப்பநிலையில் இஸ்திரி செய்வது துணிமணிகளின் சேதத்தைத் தடுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com