வெள்ளிப் பாத்திரங்கள் பொலிவிழக்காமல் இருக்கணுமா? அப்போ கண்டிப்பாக இதை செய்யக்கூடாது...

Silver
Silver
Published on

நம் வீடுகளில் தங்கத்துக்கு அடுத்து மதிப்பான இடம் வெள்ளிக்குதான். நகைகளாகவும், பாத்திரங்களாகவும் நம் வாழ்வில் அதிகம் உபயோகிப்பது வெள்ளிதான்.

பூஜையறையில் குத்து விளக்கு, வெள்ளி தட்டு, டம்ளர், செம்பு, கொலுசு, மெட்டி என அனைத்தும் வெள்ளியில்தான் உபயோகிக்கிறோம்.

வெள்ளி பிரகாசமாக, பள பளப்பாக இருப்பதால் தான் அழகு. அதை சீரான முறையில் துடைத்துப் பராமரித்து சுத்தப்படுத்தும் வழி முறையும், பாதுகாப்பது எப்படி என்பதையும் பார்ப்போம்.

வெள்ளிப் பாத்திரங்கள் பொலிவிழக்காமல் இருக்க வேண்டுமா? கண்டிப்பாக இரும்பு பீரோவில் வைக்கக் கூடாது.

சில்வர் பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்களுடன் கலந்து வைக்கவும் கூடாது.

பழங்கால மரப்பெட்டி இருந்தால் அதற்குள் வெள்ளிப் பாத்திரங்களை பத்திரப் படுத்தலாம். மர பீரோவில் வைக்கலாம்.

நகை கடைகளில் தரும் ரோஸ் நிற பேப்பரிலும், பிரவுன் பேப்பர், வெல்வெட் துணி, நல்ல வெள்ளை காட்டன் துணிகளை இரண்டாக மடித்து அதன் மேல் வெள்ளி நகைகளை வைத்தால் நகைகள் கறுக்காமல், புதிது போல பள பளப்பாக இருக்கும்.

வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரம் போட்டு வைத்தால் கறுத்துப் போவதை தவிர்க்கலாம்.

பெட்டியில் சாக்பீஸ் போட்டும் வைக்கலாம்.

வெள்ளிப் பாத்திரங்களை காற்றுப் படாமல் பிளாஸ்டிக் கவர்களுக்குள் போட்டு கட்டி வைத்தால் புதிது போல் இருக்கும்.

வெள்ளி நகைகளில் அழுக்கு ஏறி இருந்தால் பூந்திக் கொட்டை ஊற வைத்த நீரில் கழுவினால் பளிச்சிடும்.

வெள்ளி ஆபரணங்கள் மீது உருளைக் கிழங்கு தோலை ஈரமாக தேய்த்து சுத்தமான தண்ணீரில் கழுவினால் கறுமை நிறம் நீங்கும்.

அதே போல விபூதியை ஈரமாக்கி வெள்ளிச் சாமான்கள் மீது தேய்த்து சில நிமிடங்கள் கழித்து நல்ல நீரில் கழுவினால் பளபளப்பாகும்.

கொதிக்கும் நீரில் அரை டீஸ்பூன் சமையல் சோடா, அலுமினிய ஃபாயில் பேப்பர்களை போட்டு இதில் 5 நிமிடங்கள் கழித்து எடுத்தால் வெள்ளிப் பாத்திரங்கள், பூஜை சாமான்கள் பள பளப்பாகும். பின் வெள்ளைத் துணியில் துடைத்து எடுத்தால் நிறம் மினு மினுப்பாக இருக்கும்.

சிறிது நல்ல நீரில் ஷாம்பு போட்டு கரைத்து வெள்ளி பொருட்கள் மீது பூசி தேய்த்து நன்கு அலசி ஈரம் போக துடைத்து எடுத்தால் பள பளப்பாகும்.

இதையும் படியுங்கள்:
கவலையளிக்கும் கட்டுமான பொருட்களின் விலை!
Silver

வெள்ளி நகைகளில் சிறிது பற்பசையை தடவி ஊறிய பின் பிரஷ்ஷால் தேய்த்துக் கழுவினால் பள பளவென மின்னும்.

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, நகைகளையும் அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதன் பின் தேய்த்து கழுவினால் அவை புதிது போல் பளபளப்பாக இருக்கும்.

எக்காரணம் கொண்டும் தயிர், எலுமிச்சம்பழம், கெமிக்கல்ஸ் போன்றவற்றை கொண்டு கழுவக் கூடாது. இதனால் அவற்றில் உள்ள அமிலம் வேதி வினை புரிந்து வெள்ளிப் பொருட்களை கரைத்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com