இயற்கை வழியில் உடல் எடை குறைக்க வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க?

இயற்கை வழியில்  உடல் எடை குறைக்க வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க?

உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இயற்கை வழிகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். பொதுவாக நிரந்தரமாக உடல் எடையைக் குறைக்க முயலும் போது, அதன் பலன் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அதற்கு சற்று பொறுமைக் காக்க வேண்டும்.
உடல் எடை குறைய ஏதேனும் சிறப்பு பொருட்கள் உள்ளதா என்று தேடி அலைபவர்களுக்கு, நம் வீட்டு சமையல் அறையிலேயே அதற்கு தீர்வு உள்ளது. நம் ஊரின் பாரம்பர்ய உணவிலேயே நமது உடல் எடையைக் குறைக்கும் பல்வேறு ரகசியங்கள் கொட்டி கிடக்கிறதே ..

எலுமிச்சம் பழம் :

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர, உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.

கேழ்வரகு:

கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைவாக உள்ளன. இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்புச்சத்து உள்ளது. நிறைவுறா கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதனால், உடலில் நல்ல கொழுப்பு சேரும். தேவையற்ற கொழுப்பு நீங்கும். கேழ்வரகுக் கஞ்சியை மோருடன் சேர்த்துச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் உட்பட அனைவருமே சாப்பிட ஏற்றது.

பூண்டு :

4-5 பூண்டை ஒரு டம்ளர் பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பாலுடன் பூண்டை சாப்பிட வேண்டும். இதனால் பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.

சிவப்பு அரிசி புட்டு:

பாலீஷ் செய்யப்படாத சிவப்பு அரிசி புட்டு உடல் பருமனைக் குறைப்பதில் முக்கியபங்கு வகிக்கின்றது. எண்ணெய் இல்லாமல் நீராவியில் வேகவைக்கப்படுவதால், கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஜீரணமாக அதிக நேரம்எடுத்துக்கொள்ளாது. நாள் முழுவதற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும்.

கல்யாண முருங்கை இலை:

கல்யாண முருங்கை இலையை அரைத்துச் சாறாக்கி, காலை ஃப்ரெஷ் ஜூஸாகக் குடிக்கலாம். கேழ்வரகு மாவு, அரிசிமாவுடன் இந்த இலையின் சாறைச் சேர்த்து அரைத்து, தோசை செய்து சாப்பிடலாம். இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்கும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு இது சிறந்தத் தீர்வாக அமைகிறது. கர்ப்பக்காலத்தில் பெண்களுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இதில் அடங்கி உள்ளன.

கொடம்புளி:

கொடம் புளியை அன்றாடச் சமையலில் ரசம் வைக்கப் பயன்படுத்தலாம். கொடம்புளி, ஏலக்காய், பனங்கற்கண்டு சேர்த்த பானகத்தைத் தினமும் காலையில் அருந்தி வந்தால் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்புப் படலம் கரையும்.

கொள்ளு:

எலும்புக்கும், நரம்புக்கும் சக்தி தரக்கூடியது கொள்ளு. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். ஊளைச் சதையைக் குறைக்கும். கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் அல்லது வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி, பசியைத் தூண்டுவதுடன் உடலுக்கு வலு சேர்க்கும். உடலில் பித்தம் அதிகமாக உள்ளவர்கள் கொள்ளைத் தவிர்ப்பது நல்லது. கொள்ளு உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.

பயறுகள்:

எண்ணெயில் பொறித்த நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதைத் தவிர்து பயறுகள் சாப்பிடலாம். உளுந்து, கம்பு, தினை, ஆளி விதைஉள்ளிட்ட தானியங்களை வறுத்துச் சாப்பிடுவதால், உடல் எடை குறைகிறது. ரத்தசர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. பெரும்பாலான பயறுகள்கொழுப்புச்சத்துக் குறைவானவை. சில பயறுகள் முற்றிலும் கொழுப்பற்றவை. அதிக கொழுப்புச்சத்து உள்ள நபர்களின் அன்றாட உணவில் பயறுகள்இடம்பெறும்போது, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு 22 சதவிகிதம் குறைகிறது.

துளசி:

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் துளசியை பேஸ்ட் செய்து சேர்த்து, அத்துடன் தேன் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com