உங்களைப் போன்று உங்கள் ஆடைகள் ஜொலிக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

Men and Women
Remove stains easily
Published on

நம்மில் பலருக்கும் புது ஆடை அணிவது என்றால் மிகவும் பிடிக்கும். நமக்கு பிடித்த ஒரு நல்ல ஆடையை நாம் அணிந்துக்கொள்ளும் போது நம்மையும் அறியாமல் அன்றைய தினம் நமக்கு தன்னம்பிக்கை கிடைக்கும்.

ஆனால் இவ்வாறு நாம் அணியும் ஆடை எப்பொழுதும் அதே பொலிவுடன் இருக்குமா? என கேட்டால் நிச்சயம் இருக்காது. நாம் முதல் முறை அணியும் போது மட்டும் தான் நமக்கு அந்த புது பொலிவு கிடைக்கும். அதன் பிறகு உடையின் நிறம் மாறிவிடும். இல்லையென்றால் அந்த ஆடையில் கடினமான கறைகள் படிந்து மீண்டும் பயன்படுத்த முடியாமல் போகும். எந்தவிதமான கறைகளாக இருந்தாலும் அதனை சுலபமாக எப்படி நீக்குவது என்பதை இந்த பதிவில் காண்போம்.

1. உப்பு மற்றும் ஷாம்பு:

நாம் உடுத்தும் ஆடையில் கறைகள் அதிகம் படியும் ஒரு பகுதி எதுவென்றால், அது ஆடையின் கழுத்து பகுதிதான். வியர்வையின் காரணமாக ஆடையின் கழுத்து பகுதியில் கறைகள் படிந்து இருக்கும். நாட்கள் செல்ல செல்ல கரும்புள்ளிகளாக மாறி ஆடையை பயன்படுத்த முடியாமல் போய்விடும். இதனை நீக்க கறைபடிந்த கழுத்து பகுதி உள்ள ஆடையின் மீது ஷாம்பு ஊற்றி நன்றாக தேய்த்து அதனை உப்பு கலந்த இளஞ்சூடான நீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு ப்ரஷ் கொண்டு தேய்த்தால் கறை நீங்கிவிடும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டை விற்க வேண்டுமா? 'ஹோம் ஸ்டேஜிங்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
Men and Women

2. பவுடர் பயன்படுத்துதல்:

ஆடைகளில் எண்ணெய் கறை படிந்துவிட்டால், நம் முகத்திற்கு பயன்படுத்தும் பவுடர் சிறிதளவு எடுத்து, அதனை எண்ணெய் கறை படிந்துள்ள ஆடையின் மீது தேய்த்துவிடவும். பிறகு சிறிது நேரம் கழித்து எப்பொழுதும் போல சோப்பு போட்டு துவைத்துக்கொள்ளலாம்.

 3. எலுமிச்சை சாறு:

ஆடைகளில் பேனா மை கறைகள் படிந்துவிட்டால், கறையின் மீது எலுமிச்சை சாறு ஊற்றி ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு அந்த ஆடையை ப்ரஷ் கொண்டு தேய்த்து அதில் ஷாம்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை தேய்த்தால் கறைகள் நீங்கிவிடும்.

4. பேக்கிங் சோடா

ஆடைகளில் படிந்துள்ள கடினமான கறையை நீக்குவதற்கு பேக்கிங் சோடா ஒரு சிறந்த வழியாகும். வாழைக்காய் கறை, மருதாணி கறை போன்ற கடினமான கறைகளை நீக்குவதற்கு இந்த பேக்கிங் சோடாவை கறைகளின் மீது போட்டு தேய்த்து, 20 நிமிடங்கள் அப்படியே ஊறவைக்க வேண்டும். பிறகு அதில் எலுமிச்சை சாறு பிழிந்து ப்ரஷ் கொண்டு தேய்த்து வந்தால் கறைகள் மறைந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்!
Men and Women

5. பெட்ரோலியம் ஜெல்லி 

உங்கள் ஆடையில் லிப்ஸ்டிக் போன்ற கறைகள் படிந்துவிட்டால், அதில் இந்த பெட்ரோலியம் ஜெல்லி கொண்டு தேய்த்து கறைகளை நீக்கலாம். பெட்ரோலியம் ஜெல்லி என்பது வாஸ்லைன் (vaseline) நாம் பயன்படுத்தும் பொருள்தான். இதனை லிப்ஸ்டிக் கறைகள் மீது தேய்த்து அதன்பிறகு வெந்நீரில் சோப்பு போட்டு தேய்தால் கறைகள் மறைந்துவிடும்.

சுவிங்கம் கறையை நீக்குவது எப்படி?

ஆடையின் மீது சுவிங்கம் ஒட்டிக்கொண்டு அதனை முழுமையாக எடுக்காமல் விட்டால் அந்த கறை மறையாமல் அப்படியே இருக்கும். அதனால் சுவிங்கம் படிந்த ஆடையை ஒரு பாலீதீன் பையில் போட்டு அதனை பிரிட்ஜ் உள்ளே ஃப்ரீசரில் வைத்து ஒரு 1 மணி நேரம் கழித்து சுவிங்கத்தை எடுத்தால் எளிமையாக வந்துவிடும். இப்போது கறையை எளிமையாக நீக்கிவிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com