உங்க வீட்டுல வாட்டர் ஹீட்டர் இருக்கா? போச்சு… கொஞ்சம் கவனமா இருங்க! 

water heater
water heater

தற்போது பெரும்பாலான வீடுகளில் வாட்டர் ஹீட்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதுவும் இப்போது வரும் வாட்டர் ஹீட்டர்களில் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் இருப்பதால் தண்ணீர் போதிய அளவு சூடானதும் தானாகவே அணைந்துவிடும். வாட்டர் ஹீட்டர் வந்த பிறகு வெந்நீர் வைத்து குளிப்பது எளிதாகிவிட்டாலும், அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்கிற விஷயத்தில் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இது மின்சாரத்தில் இயங்குகிறது என்பதால் முறையாக பராமரிக்கப்படாத நேரத்தில் சில ஆபத்துகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

ஒருவேளை நீங்கள் பழைய மாடல் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதில் நவீன கால வாட்டர் ஹீட்டரில் இருப்பது போல, தண்ணீர் போதிய அளவு சூடானதும் தானாக அணைந்துபோகும் கட் ஆப் அம்சம் இருக்காது. இந்நிலையில் தண்ணீர் போதிய அளவு சூடானதும் உடனடியாக அணைக்கவில்லை எனில், அதில் ஏதாவது பிரச்சனை ஏற்படலாம். 

நீங்கள் புதிதாக வாட்டர் ஹீட்டர் வாங்கப் போகிறீர்கள் என்றால் அதில் ISI குறிச் சான்றிதழ் உள்ளதா என சரிபார்க்கவும். மேலும் அதற்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார்கள் என்பதையும் பார்க்கவும். அதிகப்படியான ISI மதிப்பெண்களுடன் வரும் வாட்டர் ஹீட்டர்களில் பாதுகாப்பு அதிகம். விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக ஏதோ ஒரு நிறுவனத்தின் வாட்டர் ஹீட்டரை ஒருபோதும் வாங்காதீர்கள். அவற்றின் தரம் எப்படி இருக்கும் என நமக்கு தெரியாது என்பதால், சில நேரங்களில் அதிக வெப்பத்தால் அவை வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

வாட்டர் ஹீட்டர் பொருத்துவதற்கு எப்போதும் ஒரு நிபுணரின் உதவியை நாடுங்கள். ஒருவேளை நீங்களே பொறுத்த முயற்சிக்கும்போது சரியாக பொருத்தவில்லை எனில், ஏதேனும் விபத்துக்கள் நடக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக வாட்டர் ஹீட்டரின் பவர் அவுட்லெட் சுவரில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
Western Toilet எப்படி பயன்படுத்தணும் தெரியுமா? நச்சுனு நாலு டிப்ஸ்! 
water heater

வாட்டர் ஹீட்டர் வைக்கும் குளியல் அறையில் காற்றோட்டம் முறையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் சில நேரங்களில் வாட்டர் ஹீட்டரிலா இருந்து வாயுக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் காற்றோட்டம் இல்லையெனில் உள்ளே இருக்கும் நபருக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். எனவே குளியல் அறையில் வாட்டர் ஹீட்டர் வைத்திருந்தால் ஒரு எக்ஸாஸ்ட் ஃபேன் பொருத்த மறந்துவிடாதீர்கள். 

வாட்டர் ஹீட்டர் எப்போதுமே குளியலறையின் மேற்பரப்பில் பொருத்துங்கள். அதே நேரம் அது இயக்குவதற்கான சாக்கெட் ஹீட்டரின் அருகிலேயே இருக்க வேண்டும். ஏன் உயரத்தில் இருக்க வேண்டுமென்றால், அப்போதுதான் நாம் குளிக்கும் போது வாட்டர் ஹீட்டரின் மேல் தண்ணீர் படாமல் இருக்கும். இல்லையேல் தண்ணீர் பட்டு விரைவில் சேதமடையும் வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com