வீட்டில் விலை உயர்ந்த Repair-களைத் தடுக்கும் வழிமுறைகள்! 

Home
Ways to prevent costly repairs at home!
Published on

வீடு என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு பெரிய முதலீடு. எனவே அதை நல்ல நிலையில் பராமரிப்பது முக்கியம். இல்லையெனில் அது விலை உயர்ந்த பழுதுபார்ப்புகளுக்கு வழிவகுக்கும். தடுப்பு பராமரிப்பு என்பது தொடக்கத்திலேயே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்வதன் மூலம் பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதை தடுப்பதாகும். இது உங்கள் வீட்டை நீண்ட காலம் நல்ல நிலையில் வைத்திருக்கவும் பணத்தை சேமிக்கவும் உதவும்.

தடுப்பு பராமரிப்பின் முக்கியத்துவம்: 

  • தொடக்கத்தில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை சரி செய்வது பெரிய பிரச்சனைகளை விட விலை குறைவானது. எனவே, இதுபோன்ற சிறிய பராமரிப்புகளுக்கு செலவு செய்வது நீண்ட காலத்தில் உங்களுக்கு அதிக பணத்தை சேமிக்க உதவும். 

  • வீட்டை நல்ல நிலையில் பராமரித்தால் அதன் மதிப்பு அதிகரிக்கும். ஒருவேளை வீட்டில் உள்ள பொருட்களுடன் சேர்த்து நீங்கள் எதிர்காலத்தில் மொத்தமாக விற்பனை செய்யும்போது, அதன் மறு விற்பனை மதிப்பு அதிகரிக்க உதவும். 

  • சில தடுப்பு நடவடிக்கைகள் தீ விபத்துக்கள் மற்றும் கார்பன் மோனாக்சைடு விஷவாயு போன்ற பாதுகாப்பு அபாயங்களைக் குறைக்க உதவும். குறிப்பாக கழிவறையை முறையாக சுத்தம் செய்தல் மற்றும் தேவையில்லாத குப்பைகளை வீட்டில் சேர்த்து வைத்தால் போன்றவற்றால் ஏற்படும் பெரும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படும். 

  • வீட்டை நல்ல முறையில் பராமரிக்கும்போது நீங்கள் அங்கு வசிக்கும் சூழலை சிறப்பாக மாற்றலாம். இது நீங்கள் மகிழ்ச்சியுடன் வசிக்கவும், உங்கள் விருந்தினர்களை பொறாமைப்பட வைக்கவும் நல்ல டெக்னிக்காக இருக்கும். 

வழக்கமான பராமரிப்பு பணிகள்: 

உங்களது வீடு பெரியதாக இருந்தால், அவ்வப்போது வீட்டை சுற்றிப் பார்த்து ஏதேனும் நீர் கசிவுகள் அல்லது சேதம் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்யவும். 

உங்கள் வீட்டின் மின்சார வயர்கள் மற்றும் ஸ்விட்ச்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரி பார்த்து, ஏதேனும் பிரச்சனை தென்பட்டால் தகுதியான எலக்ட்ரீசியனை அழைத்து அதை உடனடியாக சரி செய்யவும். மின்சார விபத்தால் பெரும் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம் என்பதால், இதில் கொஞ்சம் கூட அலட்சியம் காட்டாதீர்கள். 

உங்கள் வீட்டுக் கூரையில் ஏதேனும் சேதம் அல்லது நீர்க்கசிவு உள்ளதா என்பதை தேடிப் பார்த்து உடனடியாக சரி செய்யவும். மேலும் வீட்டில் உள்ள குழாய்களின் இணைப்பில் ஏதேனும் அடைப்பு அல்லது கசிவுகள் உள்ளதா என்பதை கவனித்து, அதையும் பிளம்மரை வரவைத்து சரி செய்வது நல்லது. 

முடிந்தால் உங்கள் வீட்டில் ஸ்மோக் மற்றும் விஷவாயு டிடெக்டரை பொருத்துவது நல்லது. இதன் மூலமாக ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அல்லது விஷவாயுக் கசிவு நடந்தால், நீங்கள் அலர்ட் ஆகி பாதுகாப்பாக இருக்கலாம். 

இதையும் படியுங்கள்:
வீட்டு கார்பெட்டை எளிதாக சுத்தம் செய்யும் ரகசியங்கள்! 
Home

வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா என கவனிக்கவும். குறிப்பாக ஏசி, பிரிட்ஜ் போன்றவற்றை, அவ்வப்போது நீங்களே சுத்தம் செய்து, பெரிய பிரச்சனை எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது, வருடத்தில் ஒருமுறையாவது மின்சாதன பொருட்களை சர்வீஸ் செய்வது நல்லது. 

வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். வீட்டுப் பொருட்களின் மீது படிந்துள்ள தூசி மற்றும் அழுக்கை அகற்றி சுத்தப்படுத்தினால் அது விரைவில் சேதமடைவது தடுக்கப்படும். 

இப்படி வீட்டில் உள்ள எல்லா விஷயங்களையும் நீங்கள் அவ்வப்போது பராமரித்து கவனத்துடன் செயல்பட்டால், பெரிய ரிப்பேர் செலவுகளில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் வீட்டை பராமரித்து பணத்தை மிச்சப் படுத்தி பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com