
சில வீடுகளில் கணவன், மனைவிக்குள் அதிக அன்பு இருந்தாலும் சண்டை சச்சரவுகளும் இருந்து கொண்டேதான் இருக்கும். இது குடும்பத்தில் உள்ளோர் மன அமைதியை கெடுக்கும். எனவே, கணவன், மனைவி சந்தோஷமாக இருக்க சில வாஸ்து முறைகளைப் பின்பற்றலாம்.
வாஸ்து சாஸ்திரப்படி ஒவ்வொரு திசைக்கும் ஒரு சிறப்பு பொருள் உண்டு. தென்மேற்கு மூலையில் சிவப்பு நிறத்தை தவிர்த்து, அங்கு ஒரு ஜோடி காதல் பறவைகளை வைப்பது நல்லது.
தெற்கு - தென்மேற்கு பகுதிகளில் நீல நிறத்தை தவிர்ப்பது நல்லது.அத்துடன் வீட்டின் மையப்பகுதியை எப்பொழுதும் காலியாக வைத்திருக்க வேண்டும்.
கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்க இரண்டு கண்ணாடிகளை வீட்டில் நேருக்கு நேர் வைப்பதைத் தவிர்க்கவும். இதனால் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது.
படுக்கை அறை சுவர்களுக்கு சிவப்பு மற்றும் கருப்பு போன்ற அடர் நிறங்களைத் தவிர்க்கவும். அதேபோல், படுக்கைக்கு முன்னால் கண்ணாடியை வைப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் கண்ணாடிகள் தனிப்பட்ட சக்தியை குறைத்து சண்டைகளை ஏற்படுத்தும்.
படுக்கை அறைக்கு சிறந்த இடம் வீட்டின் தென்மேற்கு பகுதியாகும். இது அமைதியான மற்றும் நிலையான ஆற்றலை அளிக்கிறது. வாழ்க்கைத் துணையின் நல்லிணக்கத்திற்கு உதவுகிறது. படுக்கை அறையை சுத்தமாக வைத்திருக்க நல்ல ஆற்றல் பரவும்.
வெளிர் நீலம், இளம் பச்சை அல்லது கிரீம் போன்ற மென்மையான, மகிழ்ச்சியான வண்ணங்களை படுக்கை அறைக்கு பயன்படுத்த நேர்மறையான ஆற்றலும், துணையை நேசிக்கவும் வைக்கும்.
படுக்கை அறையில் ஒரு ஜோடி வாத்துக்களை மேற்கு-தெற்கு மூலையில் வைக்க தம்பதிகள் இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும்.
மணம் வீசும் பூக்களை வெள்ளிக்கிழமைகளில் கடவுளுக்கு போட்டு வர கணவன், மனைவிக்கு இடையில் வரும் சச்சரவுகள் மற்றும் இடைவெளி குறையும்.
படுக்கை அறையில் கட்டிலுக்கு அடியில் தண்ணீர் நிரப்பப்பட்ட சிம்பு பாத்திரத்தை வைத்து காலையில் அதனை வீட்டுக்கு வெளியில் தெளிக்க வாஸ்து தோஷம் நீங்கி, கணவன், மனைவியிடையே அன்பு பெருகும்.
தினமும் விநாயகரை வழிபடுவதும், லட்டு நிவேதனம் செய்து பிரசாதமாக எடுத்துக்கொள்வதும் கணவன், மனைவி இடையே அன்பே அதிகரிக்கச் செய்யும்.
வாஸ்து குறைகளைப் போக்க வடகிழக்கு மூலையில் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வைப்பதும், வண்ண மீன் தொட்டிகள் வைப்பதும், பசுமையான செடிகளை வளர்ப்பதும் நல்லது.
வீட்டின் பிரதான கதவு ஆற்றலைக் கொண்டு வரும். வாழ்க்கைத் துணையின் நல்லிணக்கத்திற்காக அதை அழகாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும்.
கதவின் அருகில் காலணிகள் அல்லது குப்பைகளைக் குவிய விடாமல் இருப்பது நல்லது. இவை மகிழ்ச்சியான சக்தியை தடுக்கும் என்று வாஸ்து கூறுகிறது. மஞ்சள் அல்லது வெள்ளை போன்ற மென்மையான வண்ணங்களில் கதவை வண்ணம் தீட்டி, சத்தங்கள் எதுவும் வராமல் பராமரிப்பது நல்லது.
வலுவான உறவு நல்லிணக்கத்திற்கு தென்மேற்கு மூலையில் ஒரு ஜோடி காதல் பறவைகள் அல்லது ரோஜா பூக்களை வைக்க நல்ல ஆற்றலை தக்கவைக்க உதவும்.
உடைந்த கடிகாரங்கள், உலர்ந்த பூக்கள், பழைய துணிகள் மற்றும் பயன்படுத்தப்படாத மின்னணு சாதனங்களை அகற்றவும். படுக்கைக்கு அடியில் உள்ள இடத்தை சுத்தமாகவும், காலியாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
அன்பை அதிகரிக்க அறையின் தென்மேற்கு மூலையில் ஒரு ஜோடி ரோஜா குவார்ட்ஸ் கற்களை வைக்கவும்.
மென்மையான விளக்குகள், நறுமண மெழுகுவர்த்திகள் மற்றும் வெளிர் வண்ணங்கள் உறவை பலப்படுத்தி மேம்படுத்தும்.
படுக்கை அறையில் தீவிரமான விஷயங்களைப் பற்றி பேசுவதையோ, விவாதிப்பதையோ தவிர்க்கவும்.
வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் எப்போதும் நிறைந்து வழியும்.