ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் நம்மால் heighta வளர முடியாது. ஏன் தெரியுமா?

Height
Height
Published on

குள்ளமாக இருப்பவர்கள் அனைவருக்குமே height ஆகணும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். மரபணு, ஊட்டச்சத்துக்குறைபாடு போன்ற பல காரணங்களால் அவர்களின் வளர்ச்சி குறைவாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் நம்மால் height ஆக முடியாது. நமது வளர்ச்சி நின்றுவிடும் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். அதற்குப் பின்னாடி இருக்கும் காரணம்தான் என்ன? நாம் எப்படி வளர்க்கிறோம்? என்று தெரிந்துகொள்வோமா?

மனிதர்களின் வளர்ச்சியானது கை மற்றும் கால்களில் உள்ள நீளமான எலும்புகளின் வளர்ச்சியை பொறுத்தே அமைகிறது. மூட்டுப் பகுதிக்கு சற்று மேலே Epiphyseal Plate எனப்படும் Grow Plate (GP) உள்ளது. எலும்புகளிலேயே மிகவும் மென்மையான பலவீனமான பகுதி என்றால் அது இந்த Grow Plateதான். எலும்பின் நீளம், வடிவம் மற்றும் நமது வளர்ச்சியை தீர்மானிப்பதும் இதுவே.

இந்த GP ஒரு குறிப்பிட்ட வயதுவரை மட்டுமே வளர்ச்சிக்கான செல்களை உற்பத்தி செய்கிறது. அதன்பிறகு, மென்மையான இது, தடிமனான எலும்பாக மாறிவிடுகிறது. அதன்படி, ஒவ்வொரு மனிதரும் 18 முதல் 21 வயதுவரைக்கும்தான் வளர முடியும். இந்த GP மென்மையாக இருப்பதால், இதில் லேசாக அடிபட்டாலும் கை கால்களை அசைக்க முடியாத அளவிற்கு ஆகிவிடும் என்பதனால்தான் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் இதன் வளர்ச்சி நின்றுவிடுகிறது.

இதையும் படியுங்கள்:
வெனிலா பிரியரா நீங்க? போச்சு போங்க...
Height

பெரும்பாலும், ஒரு மனிதனின் வளர்ச்சியானது ஜீன்களை பொறுத்தே அமைகிறது. அதையும் தாண்டி உயரமாக வளரவேண்டும் என உயரம் குறைவாக இருப்பவர்கள் ஆசைப்படுவதுண்டு. அவர்கள், குறிப்பிட்ட வயதுக்குள் வளர்ச்சியை தூண்டுவதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டால் வளருவதற்கான சாத்தியக் கூறுகள் நிச்சயம் உள்ளன.

அது என்னென்ன வழிமுறைகள் என்று பார்ப்போமா?

முதலில், நாம் எடுத்துக் கொள்ளும் உணவு, போதிய அளவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்துக்கள் வளர்ச்சியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று உறுதியாக நம்பப்படுகிறது. ஆய்வு மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எலும்பு வளருவதற்கு கால்சியம் மாற்றும் கொலாஜன் நிறைந்த உணவுகள் மட்டும் போதாது. அதனுடன் வைட்டமின் டி -யும் இணைவது வளர்ச்சிக்கு அவசியமாகிறது.

இரவு நேரங்களில் செயல்படக் கூடிய ஹார்மோன்களும் சில உள்ளன. போதிய அளவு தூங்கும்போது, அவை எலும்பு வளர்ச்சிக்கும் உதவிபுரிகின்றன.

அடுத்ததாக, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், உடலில் உள்ள சுரப்பிகள் தூண்டப்பட்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு அது வழிவகுக்கும். அனைத்து ஹார்மோன்களும் ஏதாவது ஒரு வகையில் எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

ஆனால், இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே கடைபிடித்து வந்தால், மரபுவழியால் ஏற்படும் வளர்ச்சியைத் தாண்டியும் வளர முடியும். அதற்கு மேல் வளருவதற்கு நாம் செய்யும் முயற்சிகள் அனைத்துமே நிரந்தரமான வளர்ச்சியைத் தராது.

இந்த வயதை கடந்தவர்கள், வளர வேண்டும் என்று நினைத்தால் வேறு வழி இல்லையா? இருக்கிறது. கால் நீட்டிப்பு அறுவை சிகிச்சை. ஆனால், மருத்துவர்களே இதிலுள்ள ஒரு சில குறைபாடுகளால் இந்த சிகிச்சை செய்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள். எனவே, அந்த வழி நமக்கு வேண்டாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com