இந்த 4 பேர்கிட்ட மட்டும் மோதுனீங்க... அப்புறம் உங்க வாழ்க்கைல நிம்மதிக்கு 'டாட்டா' தான்!

Fight
Fight
Published on

வாழ்க்கைன்னா ஆயிரம் சண்டை வரும், நூறு கருத்து வேறுபாடு வரும். சில சண்டைகள் நம்மள வளர்க்கும், சில விஷயங்களைப் புரிய வைக்கும். ஆனா எல்லா சண்டையும் அப்படி இல்ல. சில சண்டைகள் தேவையில்லாத தலைவலியையும், மன உளைச்சலையும், நிரந்தரப் பகையையும் மட்டும்தான் கொடுக்கும். 

புத்திசாலித்தனம்ங்கிறது எல்லா சண்டையிலயும் ஜெயிக்கிறதுல இல்லை, எந்த சண்டையை போடாம ஒதுங்கிப் போகணும்னு தெரிஞ்சிக்கிறதுலதான் இருக்கு. அப்படி நம்ம வாழ்க்கையில நாம என்ன ஆனாலும் சண்டை போடவே கூடாத ஒரு நாலு பேர் இருக்காங்க. அவங்க யாருன்னு வாங்க பார்க்கலாம்.

1. உங்களுக்கு சமைப்பவர்:

பட்டியல்ல முதலிடம் இவருக்குத்தான். அது உங்க அம்மாவா இருக்கலாம், மனைவியா இருக்கலாம், இல்லை நீங்க தங்கியிருக்கிற ஹாஸ்டல் சமையல்காரரா கூட இருக்கலாம். "உணவைக் கையாள்பவர்களிடம் ஒருபோதும் கோபத்தைக் காட்டாதே"ன்னு ஒரு எழுதப்படாத விதி இருக்கு. யோசிச்சுப் பாருங்க, உங்க ஒரு நாள் முழுக்க நல்லா அமையுறதுல அவங்களுக்கு எவ்வளவு பெரிய பங்கு இருக்கு. 

நீங்க சண்டை போட்டா, அடுத்த வேளை சாப்பாட்டுல உப்பு கூடுச்சோ, இல்ல குறைஞ்சுச்சோ, நீங்க ஒண்ணுமே சொல்ல முடியாது. உங்க கோபத்தை அவங்க சாப்பாட்டுல காட்டினா, பாதிக்கப்படப் போறது நீங்க மட்டும்தான். அதனால, அவங்ககிட்ட எப்பவும் அன்பா இருங்க, உங்க வயிறு நிம்மதியா இருக்கும்.

2. உங்கள் வீட்டு உரிமையாளர் (House Owner):

நீங்க வாடகை வீட்ல குடியிருக்கிறவரா இருந்தா, நான் சொல்றது உங்களுக்கு நல்லாவே புரியும். வீட்டு ஓனர்கிட்ட சண்டை போடுறது, நாமளே உட்கார்ந்திருக்கிற கிளையை வெட்டுறதுக்கு சமம். சின்னதா தண்ணிப் பிரச்சனை, கரண்ட் பிரச்சனைன்னு எதுக்கு சண்டை போட்டாலும், கடைசியில பிரச்சனை நமக்குத்தான். 

இதையும் படியுங்கள்:
நோய் இல்லா வாழ்க்கை வேண்டுமா? மருந்துகளை இப்படி சாப்பிடுங்கள்!
Fight

மாசாமாசம் வாடகை வாங்க வரும்போது ஒரு மாதிரி பார்ப்பாங்க, எதாவது ரிப்பேர்னா கண்டுக்க மாட்டாங்க, ரொம்ப முத்திப் போனா, "ஒரு மாசத்துல வீட்டைக் காலி பண்ணுங்க"ன்னு ஒரே வார்த்தையில சொல்லிடுவாங்க. அவங்ககிட்ட கொஞ்சம் அனுசரிச்சு, பொறுமையா எடுத்துச் சொல்லி வேலையை வாங்கிக்கிறதுதான் புத்திசாலித்தனம்.

3. ஒரு முட்டாள்:

ஒருத்தர் நீங்க சொல்றத காதுகொடுத்துக் கேட்கத் தயாராவே இல்லை, தர்க்கமே இல்லாம பேசுறாங்க, அவங்க பிடிச்ச முயலுக்கு மூணு கால்தான் சாதிக்கிறாங்கன்னா, அவங்ககிட்ட இருந்து உடனே ஒதுங்கிடுங்க. ஒரு முட்டாளோட சண்டை போடுறதுல ரெண்டே விஷயம்தான் நடக்கும். ஒண்ணு, அவங்க தரத்துக்கு நீங்களும் இறங்கி வரணும். ரெண்டாவது, உங்க மன நிம்மதியும், நேரமும் தான் வீணாகும். 

அவங்ககிட்ட நீங்க ஜெயிச்சாலும் அது ஒரு தோல்விதான், ஏன்னா அந்த சண்டையே ஒரு தேவையில்லாத ஆணி. அதனால, அவங்ககிட்ட வாதம் பண்ணி உங்க சக்தியை வீணாக்காம, ஒரு சின்ன சிரிப்போட அங்க இருந்து நகர்ந்துடுங்க.

இதையும் படியுங்கள்:
இந்த 6 வழிகளைப் பின்பற்றினால் உங்கள் வாழ்க்கை வெற்றிப் பாதையில் செல்லும்!
Fight

4. உங்கள் குடும்பத்தினர்:

நம்ம வாழ்க்கையில அதிகமா சண்டை போடுறதும், உரிமையா கோபப்படுறதும் நம்ம குடும்பத்துக்கிட்டதான். ஆனா, அந்த சண்டை ஒரு எல்லையைத் தாண்டவே கூடாது. வெளியுலகத்துல ஆயிரம் பேர் நம்மள எதிர்த்தாலும், கடைசியில நமக்காக வந்து நிக்கப்போறது நம்ம குடும்பம்தான். ஒரு சின்ன ஈகோவுக்காகவோ, ஒரு அற்பமான விஷயத்துக்காகவோ அவங்க மனசை நோகடிக்கிற மாதிரி சண்டை போடாதீங்க. 

சண்டையில நீங்க ஜெயிக்கலாம், ஆனா அந்த உறவுல ஒரு சின்ன விரிசல் விழுந்திடும். ஆயிரம் கருத்து வேறுபாடு வந்தாலும், உட்கார்ந்து பேசுங்க, விட்டுக்கொடுங்க. ஏன்னா, உலகத்துல நீங்க ஜெயிக்க வேண்டிய இடம் வெளியதான், வீட்டுக்குள்ள இல்லை.

சண்டை போடாம இருக்குறதுக்கு பேரு கோழைத்தனம் இல்ல, அதுக்கு பேருதான் பக்குவம். தேவையில்லாத இடத்துல வீரத்தைக் காட்டுறதை விட, நம்ம மன நிம்மதியையும், முக்கியமான உறவுகளையும் காப்பாத்திக்கிறதுதான். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com