செருப்பு சனீஸ்வரருக்கு உகந்த பொருளாகக் கருதப்படுகிறது. கிழிந்த மற்றும் பழைய செருப்புகளை உபயோகப் படுத்துவதால் சனி பகவானின் இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.
அதேபோல் நம் கால்களின் அளவை விட பெரியதாகவோ, சிறியதாகவோ செருப்புகள் இருக்கக் கூடாது. காலுக்கு சரியாக பொருந்தக்கூடிய செருப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பிறர் உபயோகப் படுத்திய செருப்புகளை உபயோகப் படுத்தக் கூடாது.
செருப்பு வாங்க உகந்த கிழமைகள்:
நீங்கள் பிறந்த கிழமைகளில் செருப்பு வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் நீங்கள் பிறந்த கிழமைக்கு முந்தய நாளில் வாங்குவது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். அதாவது நீங்கள் திங்கட்கிழமை பிறந்திருக்கிறீர்கள் என்றால் ஞாயிறு அன்று வாங்க வேண்டும் .
ஒருவேளை பிறந்த கிழமை தெரியாதவர்கள் புதன் கிழமைகளில் வாங்கலாம். இதன் மூலம் உங்களுக்கு சில நன்மைகளை ஏற்படுத்தி கொடுக்கும் .
எந்த ராசியினர் எந்த நிற செருப்புகளை அணியலாம்?
மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் கருப்பு நிற செருப்புகளை அணியக்கூடாது . அதற்கு பதில் சந்தனம் மற்றும் வெள்ளை நிற செருப்புகளை அணியலாம்.
ரிஷபம் மற்றும் துலாம் ராசியினர் சிகப்பு மற்றும் கோல்டன் நிற செருப்புகளை அணியலாம்.
மிதுனம் மற்றும் கன்னி ராசியினர் வெள்ளை மற்றும் சிகப்பு நிற செருப்புகளை அணியலாம் .
மகரம் மற்றும் கும்ப ராசியினரும் கருப்பு நிற செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதில் கோல்டன், சில்வர், ஊதா நிற செருப்புகளை அணியலாம்.
கடக ராசியினர் கருப்பு, பச்சை, ஊதா இந்த நிறங்களில் செருப்புகளை அணியலாம்.
சிம்ம ராசியினர் வெள்ளை, ஊதா, கருப்பு போன்ற நிறங்களை அணியலாம்.
தனுசு மற்றும் மீன ராசியினர் அரக்கு, சந்தனம், சில்வர் போன்ற நிற செருப்புகளை அணியலாம்.