இந்தியாவின் நிலநடுக்க தருணங்கள் - ஆபத்தான பகுதிகள் எவை?

Earthquake
Earthquake
Published on

நிலநடுக்கம் என்பது பூமியில் நிகழக்கூடிய கொடூரப் பேரழிவுகளில் ஒன்று. சமீப காலகட்டத்தில் வருடத்திற்கு ஒரு முறையாவது எதோ ஒரு நாட்டில் இந்தக் கோரச் சம்பவம் நடந்துவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த காலங்களில் இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத் தாக்கங்கள் எப்படி இருந்தன? நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா?

இந்தியாவின் புவியியல் அமைப்பு இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் சங்கமத்தில் அமைந்துள்ளதால் (Convergence of the Indian and Eurasian tectonic plates) நம் நாடும் பூகம்பங்களுக்கு அதிகம் வாய்ப்புள்ள பகுதிதான். நாட்டின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 59% பகுதிகள் நில அதிர்வு சம்பவங்களுக்கு ஆளாகக்கூடும். இந்தப் பகுதிகள் நான்கு நில அதிர்வு மண்டலங்களாக, மண்டலம் 2 முதல் மண்டலம் 5 வரை (Zone 2 to Zone 5) வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மண்டலம் 5 மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகும்.

இமயமலைப் பகுதி, வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சில பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் குஜராத்தில் உள்ள கட்ச் (Kutch) போன்ற பகுதிகள் மண்டலம் 5ல் அடங்கும். டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களும் அதிக ஆபத்துள்ள மண்டலங்களின் கீழ் வருகின்றன.

நிலநடுக்கங்களின் முன்கூட்டிய கணிப்பு:

நிலநடுக்கங்களைத் துல்லியமாக கணிப்பது இன்று வரை நிலநடுக்கவியலில் (Seismology) மிகப்பெரிய சவாலாகதான் உள்ளது. இருப்பினும், சில கணிப்பு முறைகள் நமக்கு நில அதிர்வுக்கான நுண்ணறிவை வழங்குகின்றன.

இதையும் படியுங்கள்:
சவூதி அரேபியாவில் நதிகள் ஏன் உருவாகவில்லை?
Earthquake

நில அதிர்வு கண்காணிப்பு (Seismic Monitoring):

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நில அதிர்வு அளவிகள் (Seismometers) மூலம் சின்னச்சின்ன நடுக்கங்கள் (Micro-tremors) மற்றும் பூமிக்கு அடியில் உண்டாகும் அழுத்தங்கள் (Stress) கணக்கிடப்படுகின்றன.

கடந்த கால தரவுகள் (Historical Data Analysis):

கடந்தகால பூகம்ப நிகழ்வுகளைப் படித்து அதன்மூலம் அதிக ஆபத்துள்ள மண்டலங்களைக் முன்கூட்டியே கண்டறியலாம்.

புவியியல் மாற்றங்கள் (Geological Observations):

நீர் மட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள், வாயு வெளியேற்றம் மற்றும் மண் சிதைவு ஆகியவை சில நேரங்களில் அறிகுறிகளாக இருக்கலாம்.

விலங்குகளின் நடத்தை:

நிலநடுக்கங்களுக்கு முன் விலங்குகளின் அசாதாரண நடத்தைகள் முன்னறிவிப்பாக சில நேரங்களில் பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது அறிவியல் ரீதியாக நம்பப்படுவதில்லை.

இந்தியாவின் முக்கிய நிலநடுக்க சம்பவங்கள்:

  • 2001 பூஜ் (Bhuj) பூகம்பம்: குஜராத்தில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு 20,000க்கும் அதிகமான இறப்புகளையும் பெரும் அழிவையும் ஏற்படுத்தியது.

  • 1993 லத்தூர் (Latur) பூகம்பம்: மகாராஷ்டிராவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கிட்டத்தட்ட 10,000 உயிர்களைப் பலி வாங்கியது.

  • 1950 அஸ்ஸாம்-திபெத் (Assam-Tibet) பூகம்பம்: 8.6 ரிக்டர் அளவு கொண்ட வலிமையான நிலநடுக்கம், இது பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

  • 1934 பீகார்-நேபாள நிலநடுக்கம்: 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுத்தி, பலத்த உயிர் சேதம், சொத்து சேதத்திற்கு வழிவகுத்தது.

இதையும் படியுங்கள்:
புலிகளின் எல்லைகளை வரையறுக்கப் பயன்படுத்தும் மரம்!
Earthquake

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com