சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் என்னவாகும்?

What happens if a child is born in the month of Chithirai?
What happens if a child is born in the month of Chithirai?https://tamil.oneindia.com
Published on

பொதுவாக, ‘சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் அது குடும்பத்திற்கு ஆகாது’ என்று பலரும் சொல்வார்கள். ஆனால், அதில் ஏதாவது உண்மை இருக்கிறதா? ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

சித்திரை மாதம் என்பது அனல் தகிக்கும் வெப்ப மாதம். சாதாரணமாக, மனிதர்களால் இந்த சித்திரை மாத வெயிலை தாங்கவே முடியாது. அப்படி இருக்கும்போது ஒரு கர்ப்பிணிப் பெண்ணால் வயிற்றில் குழந்தை வைத்துக் கொண்டு அதீத வெப்பத்தை தாங்கவே முடியாது. அதேபோல, பிறக்கும் பிஞ்சுக் குழந்தைக்கும் இந்த அதீத வெப்பம் துன்பத்தையே கொடுக்கும். மேலும், இந்த மாதத்தில்தான் அம்மை போன்ற நோய்கள் தாக்கக்கூடும். அதனால்தான் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கக் கூடாது என்று பெரியோர்கள் சொன்னார்கள்.

ஆனால், ஆன்மிகத்தின்படி ஒரு குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்தால் அது எல்லா விதத்திலும் சிறப்பாகவே இருக்கும். ஏனென்றால், இந்த மாதத்தில்தான் சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சத்தில் பிரவேசம் செய்கிறார். இந்த சமயத்தில் பிறக்கும் குழந்தை எல்லா விதத்திலும் உச்சத்தில் இருக்கும். செல்வாக்கு, அதிர்ஷ்டம் கல்வி, செல்வம், வீரம் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள். அது பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி. இதற்கு என்ன சான்று?

இதையும் படியுங்கள்:
ஆழ்வார் சொன்னார் பெருமாள் செய்தார்!
What happens if a child is born in the month of Chithirai?

இதிகாச நாயகனான ஸ்ரீராமன், தனது தம்பிகள் லட்சுமணன், பரதன், சத்ருக்னன் நால்வருடன் சித்திரை மாதம்தான் பிறந்தார்கள். அவர்கள் கல்வி, செல்வம், வீரம், அழகு, ஆற்றல், அறிவு என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார்கள். அதுபோல
ஸ்ரீ ராமானுஜரும் சித்திரையில்தான் பிறந்தார்.

மேலும், சித்திரையில் பிறக்கும் ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, நியாயம், தர்மம் எதுவாக இருந்தாலும் இதுதான் சரி, இதுதான் தவறு என்று நேரிடையாக சொல்லும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். அதனால் பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கக்கூடாது என்று நினைத்தனர். ஏனென்றால், அந்தக் காலத்தில் பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன. அதனால் சித்திரையில் பிறந்த பெண்ணை திருமணம் செய்ய முன் வரமாட்டார்கள். அவள் உண்மையை உரக்கச் சொல்லும் ஆற்றல் உடையவளாக இருப்பாள். அது புகுந்த வீட்டிற்கு ஏற்புடையதாக இருக்காது என்று நினைத்தார்கள். எனவே, சித்திரையில் குழந்தை பிறந்தால் அது குடும்பத்திற்கு ஆகாது என்னும் கூற்று உண்மை அல்ல.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com