மருந்து வாங்கும் போது மாறிப்போனால்? அச்சச்சோ... அது விபரீதமாச்சே!

Medicine
Medicine
Published on

வயதான தம்பத்தியர். குறிப்பிட்ட மாத்திரைகளை தினமும் காலை, இரவு எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஒவ்வொரு முறையும், இரண்டு மாதங்களுக்கு தேவையான மாத்திரைகள் online மூலம் குறிப்பிட்ட மருந்து கடையில் இருந்து வரவழைத்துக் கொள்வது பழக்கம். மருந்து, மாத்திரைகள் வந்ததும் அந்த முதியவர் நிதானமாக சரி பார்த்துக் கொண்டு தரம் பிரித்து வைப்பது வழக்கம்.

இந்த முறை அப்படி வந்த மாத்திரைகளை சரி பார்க்க எடுக்கும் பொழுது அவர் உள் மனது (intuition) எச்சரிக்கை மணி அடித்தது. ஒரு முறைக்கு இரு முறை check செய்தார். சரியாக இருப்பது போல் தோன்றினாலும் அவருக்கு satisfy ஆகவில்லை. மறுபடியும் பார்க்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட மாத்திரையில் தவறு நடந்து இருப்பது கண்களில் பளீர் என்று தென்பட்டது. தூக்கி வாரிப் போட்டது.

உடனே அந்த மருந்து கடைக்கு போன் செய்து விவரித்தார். அவர்கள் தவற்றை உணர்ந்து, உடனடியாக குறிப்பிட்ட சரிவர மாத்திரைகள் அனுப்பி, முன்னால் தவறுதலாக அனுப்பியதை திரும்ப பெற்றுக் கொண்டனர். மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.

நடந்தது என்ன?

இந்த மருந்து கடையில் புதிதாக சேர்ந்த அவ்வளவு அனுபவம் இல்லாத ஒருவர், குறிப்பிட்ட மாத்திரையை தேடி உள்ளார், கிடைக்கவில்லை. இல்லை என்று கூறாமல் அதே மாத்திரையின் குறைந்த மதிப்பு மாத்திரையை எடுத்து அனுப்பி விட்டார். டாக்டர் ப்ரிஸ்க்ரைப் செய்தது 1000 mg (1 gm) மாத்திரை. டாக்டர் குறிப்பாக கூறியுள்ளார், இந்த மாத்திரை தங்கள் மனைவி மறக்காமல் உணவிற்கு பிறகு தினமும் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று. வந்ததோ 500 mg. ஒரு வேளை கவனிக்காமல் எடுத்துக் கொண்டு இருந்தால், அதனால் பலன் எதுவும் கிடைக்காமல், சைடு எபெக்ட் ஏதாவது ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பிறகு அந்த குறிப்பிட்ட ஊழியரை குறை கூறுவதால் ஏற்படும் விபரீதங்களுக்கு விமோசனம் கிட்டவா போகின்றது.

இதையும் படியுங்கள்:
வீட்டுப் பெரியவர்களிடம் நாம் கற்க வேண்டிய  வாழ்க்கைப் பாடங்கள்!
Medicine

இந்த நிகழ்வு கற்று தந்த பாடம்:

வாங்கும் பொருட்களை (ஆன்லைன் உட்பட) பொறுமையாக சோதித்துப் பார்த்து வாங்க வேண்டிய கால கட்டத்தில் நாம் வசிக்கின்றோம் என்பதை எப்பொழுதும் மறக்க கூடாது.

அவசரப் பட்டு, பதட்டப் பட்டால் நஷ்டம் அப்படிப்பட்டவர்களுக்குதான். நிதானமும், பொறுமையும் அனாவசிய டென்ஷன்களை தவிர்க்க பெரிதும் உதவும்.

சரி பார்க்காமல் வாங்கிக் கொள்வது (accepting on the face of it without due checking may lead to complications) பிரச்சனைகள் உருவாக்க வழி வகுக்கும்.

வயதானவர்கள் தங்கள் அனுபவங்களை சரியாக பெரும்பாலும் உபயோகிக்கிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com