யோகா தெரியும் கிரியா யோகா தெரியுமா?

Kriya Yoga
Kriya Yoga

யோகா என்பதற்கு ஒன்றிணைதல் என்பது அர்த்தம். யோகா செய்யும்போது நம் உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவை ஒன்றிணைந்து மன அழுத்தங்களை குறைத்து மனதில் அமைதி நிலவும். யோகாவில் கர்ம யோகா, ஞான யோகா, கிரியா யோகா, பக்தி யோகா என நான்கு வகை உள்ளன. இதில் கிரியா யோகா பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

கிரியா என்பதற்கு உள்நிலை செயல்பாடு என்பது அர்த்தம். கிரியா யோகா செய்யும்போது உங்கள் உள்நிலை செயல்பாட்டை மட்டுமே உள்ளடக்கி செய்தலாகும். கிரியா யோகாவை மேற்கொள்ளும்போது ஆன்மீகப் பாதையில் நடப்பது சக்தி வாய்ந்தது. ஆனால் உங்கள் ஈடுபாடும், ஒழுக்கமும் அதில் அதிகம் தேவைப்படும். அவ்வளவு எளிதாக கிரியா பயிற்சி இருக்காது. ஆனால் இரக்கத்துடனும் பொறுமையுடனும் செய்தால், உங்கள் மனதின் உள்ஞானத்தை உண்மையிலேயே ஒளிரச் செய்யலாம். கிரியா யோகாவை மேற்கொள்ள எளிய முறைகளை கீழே கூடுத்துளோம். அவற்றை சிறந்த நிபுணரின் வழிகாட்டுதல் மூலமாக மேற்கொள்வது அவசியம்.

கிரியா யோகா செய்யும் முறை:

* முதலில் நின்றபடி, கைகளை ஒன்று சேர்த்து மார்பினை ஒட்டி வணங்கிய நிலையில் அரை வினாடிகள் கண்களை மூடி நிற்க வேண்டும்.

*அதன் பிறகு, முட்டிக் கால் இட்டு, முன்புறமாக கைகளை ஒன்று சேர்த்து வணங்க வேண்டும். இந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும்.

*அடுத்து, கைகளை பக்கவாட்டில், வைத்து உள்ளங்கைகளை நெஞ்சுக்கு நேரே குவித்து இருக்குமாறு வணங்க வேண்டும். அந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும்.

*மீண்டும், கைகள் இரண்டையும் முன்புறமாக கொண்டு செல்ல வேண்டும். இந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.

*நின்றபடி, நமக்கு பிடித்த தெய்வத்தை மனதில் கொள்ள வேண்டும்.

*மண்டியிடும் போது யோகா குருவினை மனதில் கொள்ள வேண்டும்.

யோகாசனம் செய்வதற்கு முன்பாக, நாம் நம் உடலை

எளிய பயிற்சிகள் மூலம் ஆயத்தப்படுத்துதல்.

* நம் கால்களை 'V'வடிவில் விரித்து நிற்க வேண்டும்.

*கைகளை முன்புறமாக தோள்பட்டை அளவிற்கு உள்ளங்கைகளைச் சேர்த்து நீட்ட வேண்டும்.

*பக்கவாட்டில், நம்முடைய உள்ளங்கைகள் பூமியை நோக்கி இருக்குமாறு விரித்து வைக்க வேண்டும்.

* இவ்வாறு மேற்குறிப்பிட்ட நிலையில், பத்து எண்ணிக்கை மனதில் கொண்டு முன்புறமாகவும், பக்கவாட்டிலும் மாறி மாறி கைகளை மாற்றி, சாதாரண பயிற்சி செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com