பெண் முன்னேற்றத்தின் முழு வடிவம் எது?

பெண் முன்னேற்றத்தின் முழு வடிவம் எது?

ற்காலத்தில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். பலவித சாதனைகள் செய்கிறார்கள். பெரிய பதவிகள் வகிக்கிறார்கள். தொழிலதிபர்களாய் இருக்கிறார்கள். இந்த முன்னேற்றம் நமக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகிறது. ஆனால்...

அவ்வப்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் சில, அந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் குறைக்கும் வகையில் அமைகின்றன என்று நினைக்கும்போது  வேதனை அளிக்கிறது.

ஆம்... ஆண்கள் செய்யும் குற்றங்களைப் பெண்களும் செய்து அதிலும் நாங்கள் ஆண்களுக்கு சமம் என்று நிரூபிக்கிறார்களே என்று எண்ண வைக்கிறது.

கல்லூரிச் சீட்டு மற்றும் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக பணம் ஏமாற்றுவது, சீட்டுமோசடி, கள்ளநோட்டு ஜெராக்ஸ், போலி ஆவண மோசடி போன்ற வற்றில் பெண்களும் பெருமளவில் ஈடுபடுவது பற்றி நாளிதழ்களில் செய்தியாகப் படிக்கும்போது கவலையளிக்கிறது. படித்த இளம் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பெண்கள் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தும் நபர்கள், பெண்களில் சிலர் இன்னொரு வகையில் பின்னடைவைத் தேடிப் போகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து அவர்களைத் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் அவர்கள் அடையும் முன்னேற்றம் இன்னொரு வகையில் சரிவைச் ஏற்படுத்துகிறது.

பெண்கள் புற உலக வாழ்க்கையில் முன்னேறுவதும்  சாதிப்பதும் மட்டுமே முழு வெற்றி ஆகாது. அவர்கள் அக வாழ்க்கையில் சிறந்த மனுஷிகளாக, மனதளவில் பக்குவப்பட்டவர்களாக இருந்து நற்பெயர் வாங்குவதும் பெண்கள் முன்னேற்றத்தின் ஓர் அங்கம் என்ற உண்மை உணரப்பட வேண்டும். பிரச்னைகள் வரும்போது சமாளிப்பதில் அறிவை வளர்த்துக் கொள்வதுதான் தேவையே தவிர, தற்கொலை அல்ல; இதைப் போலவே, எந்த விஷயம் ஆனாலும் அதற்கு உரிய முறையில் தீர்வைத் தேட வேண்டுமே தவிர, உணர்ச்சி வசப்பட்டு  தீவிரம் காட்டக் கூடாது.

புறவாழ்க்கையில் வெற்றி பெற்று  சாதிப்பது மட்டும் மகளிர்  முன்னேற்றத்தின் முழு வடிவம் அல்ல. தனிப்பட்ட மனுஷிகளாய்த் தங்கள் அக வாழ்க்கையைச் சிறந்ததாக ஆக்கிக் கொண்டு மற்ற வர்களையும் சிறந்தவர்களாய்  ஆக்குவதிலும் முனைப்புக் காட்டினால் தான் முன்னேற்றம் முழுமையான  வடிவம் பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com