Witch's Milk என்றால் என்ன தெரியுமா? இதன் அறிவியல் பின்னணியை தெரிந்துக்கொள்ளுங்களேன்!

Witch’s Milk
Witch’s Milk
Published on

Witch's Milk குறித்து பல நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. இதன் அறிவியல் பின்னணி குறித்தும், இது குழந்தைகளுக்கு ஆபத்தானதா என்பது குறித்தும் பார்ப்போம்....

பல குழந்தைகளின் மார்பகங்களில் இருந்து பாலினை பிழிந்து எடுக்கிறார்கள். பெண் குழந்தைக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைக்கும் கூட இவ்வாறு செய்கிறார்கள். பல குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த பாலை வெளியேற்றவில்லை எனில் அது மார்பிலேயே கட்டிவிடும் என்று கூறுவார்கள். இதன் பின்னால் உள்ள உண்மை என்ன? வாருங்கள் இந்த பதிவில் பார்க்கலாம். 

பிறந்த குழந்தையின் மார்பகத்தில் இருக்கும் இந்த விசித்திரமான திரவத்தின் பெயர் Witch's Milk. குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் அதன் மார்பகங்களில் இருந்து வெள்ளை நிற திரவம் சுரக்கும் இந்த நிகழ்வு, பல நூற்றாண்டுகளாக மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. இந்த திரவம் பால் போன்ற தோற்றம் கொண்டிருந்தாலும், இது உண்மையான பால் அல்ல. இது பெரும்பாலும் கொழுப்பு மற்றும் புரதங்களைக் கொண்டிருக்கும்.

இதற்குப் பின்னால் உள்ள அறிவியல்:

குழந்தை கருவில் இருக்கும்போது, தாயின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குழந்தையின் உடலில் சென்று அதன் மார்பகங்களை வளர்ச்சியடையச் செய்கிறது. இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பால் சுரக்கும் சுரப்பிகளைத் தூண்டி, சிறிய அளவில் பால் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய வைக்கிறது. குழந்தை பிறந்த பிறகு, தாயின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறையத் தொடங்குகிறது. ஆனால், குழந்தையின் உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிறிது நேரம் செயல்படக் கூடும். இதன் காரணமாகவே குழந்தைகளின் மார்பகங்களில் இருந்து Witch's Milk சுரக்கிறது.

ஏன் Witch's Milk என்று அழைக்கப்படுகிறது?

Witch's Milk என்ற பெயர் இதற்கு எப்படி வந்தது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், இது மந்திரவாதிகள் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஒருவித மந்திரத் திரவம் என்று நம்பினர். ஒரு சிலர், இது குழந்தைகள் மீது ஏதேனும் தீய சக்திகள் செலுத்தியதன் விளைவு என்று கருதினர். ஆனால், அறிவியல் வளர்ச்சியின் பின்னர் இந்த நம்பிக்கைகள் தவறானவை என்பது தெளிவாகியுள்ளது.

இது குழந்தைக்கு ஆபத்தானதா?

Witch's Milk குழந்தைக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது. இது ஒரு இயற்கையான நிகழ்வு. பெரும்பாலும், இந்த திரவம் தானாகவே நின்றுவிடும். சில நேரங்களில், மார்பகங்களை மெதுவாக மசாஜ் செய்து, வெதுவெதுப்பான துணியால் சுத்தம் செய்தால் போதும். ஆனால், மார்பகங்களில் வீக்கம் அல்லது சிவப்பு நிறம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த Witch's Milk மனித குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பிற பாலூட்டிகளிலும் காணப்படுகிறது. குறிப்பாக, பசுக்கள், பன்றிகள் மற்றும் நாய்களில் இந்த நிகழ்வு பொதுவாக காணப்படும்.

Witch's Milk என்பது குழந்தையின் உடலில் உள்ள ஹார்மோன்களின் மாற்றத்தால் ஏற்படுகிறது. பெற்றோர்கள் இந்த நிகழ்வைப் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். இதனால், அவர்கள் தேவையற்ற கவலைகளிலிருந்து விடுபட்டு, குழந்தையை சிறப்பாகப் பராமரிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
கோடை கொடுக்கும் வயிற்று வலி: தவிர்க்கும் 5 வழிகள் இதோ!
Witch’s Milk

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com