Work-Life Balance என்றால் என்ன தெரியுமா? 

What is work life balance.
What is work life balance.

இன்றைய காலகட்டத்தில் வேலை மற்றும் குடும்பத்தை ஒரே மாதிரி சமமாகப் பார்த்துக் கொள்வது கடினமாகவே உள்ளது. பெரும்பாலானவர்கள் தங்களது நேரத்தை வேலை வேலை என வேலைக்காகவே செலவழித்து, குடும்பத்திற்காக போதிய நேரம் ஒதுக்கத் தவறி விடுகிறார்கள். ஒருவர் தனது வேலை மற்றும் குடும்பத்திற்கு சமமாக நேரத்தை செலவழிப்பதே Work-Life Balance எனப்படுகிறது. 

ஒருவர் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு இந்த Work-Life Balance மிக முக்கியம். நேரம் என்பது ஒரு மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய வளமாகும். அதை முடிந்தவரை தனது வேலைக்காகவும் குடும்பத்திற்காகவும் சமமாக செலவழிக்க முயல வேண்டும். நாம் நம்முடைய வீட்டில் இருக்கும்போது முழு கவனத்தையும் வீட்டின் மீது செலுத்தி குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அதேபோல வேலை செய்யும் நேரத்தில் முழு கவனமும் வேலை மீது மட்டுமே இருக்க வேண்டும். 

Work-Life Balance எப்படி கையாள்வது? 

உடல்நிலை: இதில் முக்கிய பங்கு வகிப்பது உங்களுடைய உடல்நிலை தான். நீங்கள் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருந்தால் மட்டுமே, வேலை மற்றும் குடும்பத்தில் ஒரே மாதிரியான கவனம் செலுத்த முடியும். எனவே உங்கள் உடலுக்குத் தேவையான செயல்களில் தினசரி ஈடுபடுங்கள். உதாரணத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவை உங்களை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். 

திட்டமிடல் மிக முக்கியம்: Work-Life Balance-ஐ சரியாகக் கையாள முறையான திட்டமிடல் அவசியம். நீங்கள் உங்களது குடும்பத்தையும் வேலையையும் எப்படி சரியாக அமைத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பது பற்றி முன்கூட்டியே சிந்திக்கத் தவறாதீர்கள். உங்களுக்கு வேலைதான் முக்கியம் என குடும்பத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால், குடும்ப நபர்களுக்கு உங்கள் மீதான ஈர்ப்பு போய்விடும். அதேபோல குடும்பம்தான் முக்கியம் என வேலையில் கவனம் செலுத்தவில்லை என்றால், வேலையில் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இவை இரண்டுக்கும் சரியாக நேரம் ஒதுக்கும்படி திட்டமிடுங்கள். 

இதையும் படியுங்கள்:
‘லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர்களுக்கு உயிர் கொடுத்த ஏ.ஆர் ரகுமான்.. AI செய்த மேஜிக்! 
What is work life balance.

நெருக்கடிகளை கையாளுங்கள்: குடும்பம், வேலை இரண்டிலுமே உங்களுக்கு நெருக்கடியான தருணங்கள் ஏற்படலாம். எனவே அச்சமயங்களில் அமைதியாக சிந்தித்து, எப்படி செயல்பட்டால் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை சரியாகத் தேர்வு செய்யுங்கள். சூழ்நிலையை சரியாப் புரிந்துகொண்டு செயல்பட்டால், இரண்டு இடங்களிலுமே நிலைத்தன்மையுடன் உங்களால் இருக்க முடியும். 

குடும்பத்தினரிடம் பேசுங்கள்: நாம் வேலை செய்யும் இடத்தில் நம்மால் அதிக அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் உங்களது குடும்பத்தில் உங்களது நிலைப்பாட்டை சொல்லி புரிய வைக்க முடியும். எனவே அவ்வப்போது குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசி, உங்களைப் பற்றி தெரியப்படுத்துங்கள். முடிந்தவரை குடும்ப உறுப்பினர்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருந்தாலே, பணியிடத்தில் சிறப்பாக செயல்பட முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com