‘லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர்களுக்கு உயிர் கொடுத்த ஏ.ஆர் ரகுமான்.. AI செய்த மேஜிக்! 

AR Rahman, who gave life to dead singers.
AR Rahman, who gave life to dead singers.

'லால் சலாம்' திரைப்படத்திற்காக மறைந்த பாடகர்களான பம்பா பாக்கியா மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோரின் குரல்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் உருவாக்கியுள்ளார் ஏ.ஆர் ரகுமான்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு நம்முடைய ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட கேமியோவில் நடித்துள்ளார். லால் சலாம் திரைப்படத்தில் ‘திமிரி எழுடா’ என்ற பாடலுக்காக மறைந்த பாடல்களான பம்பா பாக்கியா மற்றும் ஷாகுல் அமீது ஆகியவரின் குரல்களை மீண்டும் உருவாக்கியுள்ளார் ஏ.ஆர் ரகுமான். 

இதற்காக மறைந்த பாடகர்களின் குடும்பத்திடம் அனுமதி கேட்டு அவர்களின் குரல்களை மறு உருவாக்கம் செய்வதற்கு உரிய பணம் அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். மேலும் AI தொழில்நுட்பத்தின் நேர்மறையான பயன்பாட்டை வெளி உலகத்திற்கு காட்டவே, இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக ஏ.ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஏ.ஆர் ரகுமான், “தொழில்நுட்பத்தை நாம் சரியாக பயன்படுத்தினால் அதனால் நமக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் தொல்லையும் இருக்காது” என கேப்ஷன் எழுதி, சோனி மியூசிக் இன் ‘திமிரி எழுடா’ பாடலின் போஸ்டரை பகிர்ந்துள்ளார். 

இதையும் படியுங்கள்:
ஓவிய மாளிகையாக விளங்கும் எல்லோரா கயிலாசநாதர் கோயில்!
AR Rahman, who gave life to dead singers.

பம்பா பாக்கியா மற்றும் சாகுல் ஹமீது இருவருமே ஏ.ஆர் ரகுமானின் இசைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர். பம்பா பாக்கியா கடந்த 2022ல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சாகுல் ஹமீது 1997 இல் கார் விபத்தில் மரணம் அடைந்தார். இவர்களின் குரலில் மீண்டும் மற்றொரு பாடலைக் கேட்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரவிற்கும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், லிவிங்ஸ்டன், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. திரைப்படத்தின் பாடல்களை யூடியூப் மற்றும் ஆடியோ தளங்களில் நீங்கள் கேட்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com