குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

Parents
What Parents Should Do to Help Their Kids Study Well

உலகில் உள்ள எல்லா பெற்றோர்களுமே தங்களது குழந்தை கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் குழந்தைகள் நன்றாக படிப்பது ஒன்றும் எளிதானது அல்ல. ஒரு பெற்றோராக தங்களது குழந்தை நன்றாகப் படிக்க சரியான பழக்கம் மற்றும் சூழலை உருவாக்கித் தர வேண்டியது அவசியம். ஒரு பெற்றோராக உங்களது குழந்தையின் கல்விக்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அதில் மிக முக்கியமான விஷயங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

தினசரி உங்கள் குழந்தைகள் படிப்பதற்கு ஒழுக்கம் மற்றும் நேரத்தை கடைபிடிக்க அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். ஒரு குறிப்பிட்ட பாடத்தைப் படிக்க நேரத்தை ஒதுக்கி, அவர்களுக்கு கவனச் சிதறல்கள் இல்லாத சூழலை உருவாக்கித் தரவேண்டும். இப்படி ஒரு நல்ல பழக்கத்தை அவர்களுக்கு கற்பிக்கும்போது, அவர்களாகவே அதைப் புரிந்துகொண்டு நன்றாகப் படிக்கத் தொடங்குவார்கள்.  

என்னதான் குழந்தைகள் படிப்பது முக்கியம் என்றாலும், படிப்பதற்கு இடையில் இடைவெளி எடுப்பது மிகவும் முக்கியமானது. குழந்தைகள் ஓய்வெடுக்கவும், இழந்த ஆற்றலை மீட்டெடுக்கவும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, குறைந்தது 15 நிமிடமாவது அவர்களை ஓய்வெடுக்கச் சொல்லுங்கள். 

அவர்களிடம் எப்போதும் நேர்மறையாகவும், ஆதரவளிக்கும் விதமாகவும் பேசுங்கள். உங்களது பிள்ளையின் படிப்பில் ஆர்வம் காட்டுங்கள். அவர்களுக்கு எதுவெல்லாம் கஷ்டமாக இருக்கிறது என்பதை கேட்டுத் தெரிந்துகொண்டு, அதை சரி செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமலும், மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாமலும், மரியாதையுடன் நடத்துங்கள்.  

எப்படியெல்லாம் படிக்கலாம் என்பதை ஆய்வு செய்ய உங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள். சிறப்பாக குறிப்புகள் எடுப்பது, எதையும் புரிந்து கொண்டு படிப்பது போன்ற நுட்பங்களை அவர்களுக்கு கற்றுத் தாருங்கள். மிகக் கடினமான பாடத்திட்டங்களை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து படிக்க அவர்களுக்கு கற்றுத் தாருங்கள். 

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மணமும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உங்கள் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கற்றுத் தரவும். உடற்பயிற்சி செய்வது, சத்தான உணவுகளை உண்பது, போதுமான தூக்கம் போன்றவற்றைப் பெற ஊக்குவிக்கவும். நன்கு ஓய்வெடுத்து ஊட்டத்துடன் இருக்கும் குழந்தை எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பிள்ளைகள் எதிரில் பெற்றோர் பேசக்கூடாத முக்கியமான 2 விஷயங்கள் என்ன தெரியுமா?
Parents

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது படிப்பிற்கு தீங்கு விளைவிக்கும் செயலாகும். எனவே உங்கள் குழந்தைகள் அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும். அவற்றிற்கு பதிலாக வெளியே சென்று விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுத்துங்கள். 

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே அவர்களுக்கு ஏற்ப தேவைகளை மாற்றி அமைப்பது அவசியம். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் குழந்தையின் கல்விக்கு உறுதுணையாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு குழந்தைகள் கல்வியில் ஈடுபாட்டுடன் இருப்பார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com