அறுபது வயது வாழ்வியல் எப்படி இருக்கோணும்?

elders 60+
elders 60+

- பி.ஆர்.லட்சுமி

அரசுப்பணியில் 58 வயது வந்ததும் போய் வா… என்று வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். அதற்குப் பிறகு ஓய்வு காலம் என்று சட்டமும் சொல்கிறது. மனிதனின் சராசரி ஆயுட்காலம் முன்னர் 100 ஆண்டுகளாக இருந்தது. தற்போது நன்றாக நடக்க முடிகின்ற காலம் 60 ஆண்டுகளாக குறைந்துவிட்டது. 60 வயதிற்கு மேல் நாம் பூமியில் வாழ்ந்தோமானால் அது நமக்கு ஆண்டவர் கொடுத்திருக்கிற போனஸ் பரிசு. அந்த போனஸ் பரிசு காலத்தை எப்படிக் கழிக்கலாம்?

முதலில் நமக்கு இருக்கின்ற ஈகோவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நம் வயதிற்கு இவ்வளவுதான் செய்ய முடியும் என்ற எண்ணம் வர வேண்டும்.

  • காலை எழுந்தவுடன் யாருடைய தயவும் இன்றி நமது அன்றாட வேலைகளை நாமே செய்துகொள்ளலாம்.

  • காலையில் எழுந்தவுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

  • உடல் ஒத்துழைத்தால் யோகா போன்ற உடற்பயிற்சியையும் செய்யலாம்.

  • காலை உணவை முடித்துவிட்டு இறைவழிபாட்டிற்கு கோயிலுக்கோ, தேவாலயத்திற்கோ, மசூதிக்கோ செல்லலாம்.

  • நம் வயது ஒத்த நண்பர்களுடன் பேசி மகிழலாம்.

  • உற்ற துணையால் சமைக்க முடியாத பட்சத்தில் நாமே சமைத்து குடும்பத்தை மகிழ்ச்சியாக்கலாம்.

  • இதுவரை சமைக்கப் பழகாதவர்கள்கூட இப்போது சமைக்க கற்றுக்கொள்ளலாம் அல்லவா!

  • தோட்டக்கலை என்பது மன மகிழ்ச்சிக்கு உகந்த ஒரு சிறப்பான களம் என்றே சொல்லலாம்.

  • நம்மால் முடிந்தால் சமுதாயப் பணிகளைச் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
முன்னே கசக்கும்! அதுவே பின்னே இனிக்கும்! புரியலையா?
elders 60+
  • மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கம் போடலாம்.

  • டீ தயாரித்து சாப்பிடலாம்.

  • வீட்டிற்கு வரும் பேரன், பேத்திகளுக்கும் நாம் செய்த சமையலைக் கொடுத்து மகிழலாம்.

  • பள்ளி சென்று வரும் அவர்களுக்கு குட்டி, குட்டி கதைகள் சொல்லி மகிழலாம்.

  • பள்ளியில் நடந்த சம்பவங்களைக் கேட்டு ஊக்கப்படுத்தலாம். அவர்களுடன் சேர்ந்து அவருக்குப் பிடித்த விளையாட்டுகளை விளையாடலாம்.

  • மாலை முடிந்து, இரவு ஆனதும் தொலைக்காட்சியில் நமக்கு பிடித்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு தூக்கம் வரும் முன் ஒரு சிறு நடைபயிற்சியை வீட்டுக்குள்ளேயே செய்துவிட்டு தூங்கப் போகலாம்.

இவை எல்லாம் எனக்கு சரிபடாது… எனக்குன்னு ஒரு சின்ன தொழில்தான் பார்க்கணும்னு நினைக்கிறேன்… அப்படின்னு நினைக்கிறவங்க ஒரு குட்டி அலுவலகத்தை திறந்து தொழில் செய்யலாமே!

60+ களிலும் தொழில் செய்ய ஆசை வரும்தானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com