தேர்வு நேரத்தில் கவனச்சிதறலை தவிர்க்க என்ன செய்யவேண்டும்?

avoid distraction during exam time
Exam time reading
Published on

தேர்வுகள் காலம் வந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் மாணவர்கள் கவனம் செலுத்தி படித்தால்தான் அதிகம் மதிப்பெண்கள் பெற்று தங்களது விருப்பமான துறை சார்ந்த படிப்புகளில் சேர முடியும். கவனம் செலுத்தி படிக்க முதலில் கவனச்சிதறலை தவிர்க்க வேண்டும். அதற்குநாம் என்ன செய்கிறோம், செய்து கொண்டிருக்கிறோம் என்பதில் எப்போதும் கவனம் தேவை.

அந்த கவனம் ஒரே நாளில் வந்துவிடாது. எந்தவொரு சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை ஒருநிலைப்படுத்தி முழு கவனத்தையும் குவிப்பதற்கு படிப்படியாகப் பயிற்சி செய்ய வேண்டும்.

படிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும், படிக்க அமைதியான ஒரு இடம் தேவை போதிய வெளிச்சமும் தேவை. ஆவலும்.ஈர்ப்பும்,நல்ல குறிக்கோளுடனும் படிக்கும்போது கவனத்திலும் மனதிலும் சிதறல் ஏற்படாது.

ஒவ்வொரு செயலையும் செய்யும்போது இலக்கு நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இலக்கு நிர்ணயம் செய்வதன் மூலம் ஒவ்வொருவருக்கும் அதனை அடைய ஆர்வம் ஏற்படும். இது படிப்பதற்கும் பொருந்தும். டைம் மேனேஜ்மென்ட் அதாவது இவ்வளவு நேரத்தில் இவ்வளவு படித்து முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையிட்டு படிக்கும்போது கவனமும் மனமும் சிதறாது.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்ப்பதற்கான No.1 திறவுகோல்: மாடலிங் அணுகுமுறை
avoid distraction during exam time

தொடர்ந்து 25 நிமிடங்கள் படித்த பிறகு ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு  5 நிமிடங்கள் உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். இது வெறுப்பு இல்லாமல் படிக்க உதவும். முதலில் 10 நிமிடங்கள் படியுங்கள் பின் 10 நிமிடங்கள் ஓய்வு பின் 10 நிமிடங்கள் படியுங்கள் நீங்கள் நிறைய படிப்பீர்கள் என்கிறார்கள்.

படிக்கும்போது செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அவசியம் மற்றும் அவசரத்திற்கு மட்டுமே செல், லேப்டாப்பை பயன்படுத்த வேண்டும். தேர்வு காலத்தில் 4 வாரங்களுக்கு வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் பயன்படுத்த கூடாது.

தொடர்ந்து படிக்க வேண்டாம், மனச்சோர்வு ஏற்படும் இடை இடையே ஓய்வு எடுத்துக் கொண்டு சிறிய நடைப்பயிற்சி, ஆழமாக சுவாசித்தல் போன்றவற்றை செய்யலாம். கவனச்சிதறலை தவிர்த்து உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? உங்கள் மூக்கின் வழியாக மட்டுமே சுவாசியுங்கள் என்கிறார்கள். ஜர்னல் ஆப் நியூரோ சயின்ஸ் ஆய்வாளர்கள்.

படிக்கும்போது அதிகம் கவனம் செலுத்த அடிக்கடி தண்ணீர் குடிப்பது உதவும் என்கிறார்கள் பிரிட்டன் ஆய்வாளர்கள். படிக்கும்போது கலோரி செலவாகிறது மற்றும் வியர்வை வெளியேறி உடலில் நீரிழப்பு ஏற்படுத்தும் அதனை ஈடுசெய்ய அவ்வப்போது தண்ணீர் குடிப்பது அவசியம்.

சத்து குறைவான ஜங்க் புட் மற்றும் குறைவான காய்கறிகள், பழங்கள் உள்ள உணவுகளை தேர்வு நேரத்தில் எடுத்துக்கொள்வதால் அது தேர்வுகள் சமயத்தில் ஒருவித பதட்டத்தையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்துவதாக பெல்ஜியம் நாட்டின் கென்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர், தேர்வு சமயத்தில் 4 வாரமாவது இந்த மாதிரி உணவுகளை தவிர்க்கவேண்டும் என்கிறார்கள்.

உணவின் அளவை சிறிது குறைத்துக் கொள்வதும், காரத்தை குறைத்து கொள்வதும் சிறந்தது. ஆனால் உணவு உண்டால் தூங்கிவிடுவோம் என சாப்பிடாமலே நீண்ட நேரம் படிக்க முயல்வது தவறு என்கிறார்கள்.

தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற மாணவர்களே, காலை உணவை ஒரு போதும் தவிர்க்காதீர்கள் என்கிறார்கள். காலை உணவை தவிர்ப்பது படிக்கும் போது கவனச்சிதறலை உருவாக்குகிறது என்கிறார்கள் இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள். கவனச்சிதறல் மற்றும் சுறுசுறுப்பு கோளாறு உடைய மாணவர்கள் ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள அத்தகைய பாதிப்புகள் குறையும் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
"தினம் இரண்டு தடவை ஐ லவ் யூ சொல்லுங்க; வாழ்க்கை இனிக்கும் பாருங்க!"
avoid distraction during exam time

இளம் வயதினரிடம் படிக்கும்போது படிப்பில்  கவனம் சிதைவதற்கு முக்கிய காரணம் அவர்களின் தூக்கம் மிகக்குறைவாக இருப்பதுதான். என்கிறார்கள். அமெரிக்க தூக்கம் பற்றிய ஆய்வு மைய ஆய்வாளர்கள். எனவே தேர்வு நேரத்தில் 7-8 மணி நேரம் நன்றாக தூங்கி எழுந்து படியுங்கள் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com