வெயில் காலம் வேறு வரப்போகிறது, இத்தனை நாட்கள் குளிரில் ஏசியின் தேவை இல்லாமல் இருந்துவிட்டு, இப்போது ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை தொடங்கப் போகிறது. எனவே நீண்ட காலம் ஏசியைப் பயன்படுத்தாமல் இருந்து அதை மீண்டும் ஆன் செய்யும் முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் அவை என்னவென்றுத் தெரிந்து கொள்ளலாம்.
1. ஏசியை மொத்தமாக ஆய்வு செய்யுங்கள்: நீண்ட நாட்கள் கழித்து உங்கள் ஏசியை இயக்குவதற்கு முன், உங்கள் ஏசி யூனிட்டை ஆய்வு செய்து, அதில் ஏதேனும் தூசி, குப்பைகள் அடைத்துள்ளதா என பரிசோதிப்பது அவசியம். ஏதேனும் பூச்சிகள், உடைந்த பாகங்களில் அறிகுறிகள் உள்ளதா எனப் பாருங்கள்.
2. பில்டரை மாற்றவும்: ஏசியில் உள்ள ஃபில்டர்கள், காற்றின் தரத்தை பராமரிப்பதிலும், ஏசி திறம்பட செயல்படுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்ட நாட்கள் ஏசி பயன்படுத்தாத போது, பில்டரில் தூசி அழுக்கு போன்றவை அடைத்து, காற்றோட்டத்தைத் தடுத்து, ஏசியின் செயல்திறனைக் குறைக்கலாம். எனவே ஏசி பில்டரை பரிசோதித்து புதிதாக மாற்றி விடுவது நல்லது.
3. தெர்மோஸ்டாடை சரிபார்க்கவும்: உங்களது ஏசி தெர்மோஸ்டாட், சரியான குளிரிட்டும் முறை மற்றும் வெப்ப நிலைக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதை சரிபார்த்து தேவைப்பட்டால் தெர்மோஸ்டாட் பேட்டரிகளை மாற்றுவது நல்லது.
4. வெப்பநிலையை படிப்படியாகக் குறைக்கவும்: ஏசியை ஆன் செய்ததும் உடனடியாக வெப்பத்தைக் குறைக்காமல், படிப்படியாக குறையுங்கள். இது ஏசி சிஸ்டத்திற்கு தேவையற்ற அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. இதனால் திடீர் வெப்பநிலை ஏற்ற இறக்கங்களால், ஏசி பழுதாகும் அபாயம் குறைகிறது.
5. வழக்கத்திற்கு மாறான சத்தங்கள் மற்றும் வாசனைகளைக் கண்காணிக்கவும்: ஏசியை ஆன் செய்த பிறகு யூனிட்டில் இருந்து அசாதாரண சத்தங்கள், அதிர்வுகள் மற்றும் துர்நாற்றம் வீசுகிறதா என உன்னிப்பாக கவனிக்கவும். இதில் ஏதாவது உங்கள் ஏசியில் ஏற்பட்டால் உடனடியாக தகுந்த ஏசி மெக்கானிக்கை வர வைத்து சரி செய்து கொள்ளுங்கள்.
இது தவிர உங்கள் ஏசி ஓடினாலும் ஓடவில்லை என்றாலும், வருடத்திற்கு ஒரு முறையாவது ஏசி யூனிட் சர்வீஸ் செய்வது முக்கியமானது. ஏசியை நீங்களே சுத்தம் செய்வதற்கு பதிலாக அனுபவம் நிறைந்த வல்லுனர்களிடம் கொடுக்கும்போது, அவர்கள் முறையாகவும் பாதுகாப்பாகவும் அனைத்தையும் சரியாக செய்வார்கள். இதன் மூலமாக உங்களுடைய ஏசி நீண்ட காலம் நீடித்து உழைக்கும்.