உங்கள் சமையலறையில் செய்யக்கூடாதது..!

rice stock in home
rice stock in home
Published on

ம் சமையலறையில் சில பேர் செய்யக்கூடிய தவறு ஒன்று இருக்கிறது. அது என்ன தவறு? அதை எப்படி திருத்திக் கொள்ளலாம். என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பொதுவாக தன  தானியங்கள் நிறைந்த வீட்டைதான் செல்வ கடாட்சம் நிறைந்த வீடு  பஞ்சம் இல்லாத வீடு, வறுமை இல்லாத வீடு என்று சொல்வார்கள். இன்றைக்கு நம்முடைய வீட்டில் சாப்பிடுவதற்கு முதன்மை பொருளாக இருப்பது அரிசி. எந்த ஒரு வீட்டிலும் ஒரு கைப்பிடி அளவு அரிசி கூட இல்லாமல் சுத்தமாக துடைத்துவிட்டு சமைக்க கூடாது. சிறிது அரிசி இருக்கும்போதே புதிய அரிசி நாம் வீட்டில் வாங்கி வைத்துவிட வேண்டும். இது முதல் விஷயம். இரண்டாவதாக பெரும்பாலும் நிறைய பேர் வீட்டில் இந்த தவறை செய்வது கிடையாது இருப்பினும்சில பேர் இதனை செய்கிறார்கள்.

அரிசி மூட்டை அல்லது அரிசி போடும் டப்பா எப்போதும் நாம் அடுப்பு வைக்கும் இடத்திற்கு கீழ்ப்பக்கத்தில்தான் இருக்க வேண்டும்.

அலமாரி இருக்கும் காரணத்தினால் அரிசியை  ஏதாவது ஒரு பாத்திரத்தில் கொட்டி அதை தூக்கி நம் தலைக்கு மேலே வைத்து விடக்கூடாது. இப்படி செய்தால் வீட்டில் சாப்பாட்டிற்கு பஞ்சம் வரும் என்ற ஒரு கருத்தை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். காரணம் அரிசி நாம் சமைக்கும் அடுப்பிற்கு கீழே இருந்தால் அரிசி பானையில் அரிசி உள்ளதா இல்லையா? என்று நமக்கு தெரியும்

நம்முடைய தலைக்கு மேலே இருந்தால் அரிசி பாத்திரத்தில் அரிசி உள்ளதா இல்லையா? என்பதை கவனிக்காமல், அடுத்த நாள் அரிசி குறைந்தது தெரியாது. அரிசிப் பானையில் அரிசி இல்லை என்ற வார்த்தையை  நம் வீட்டில் ஒருபோதும் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் அரிசியை எப்போதும் நம் கண்களில் படும்படி அடுப்புக்கு  கீழ் வைக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் முன்னேற தள்ளிவைக்க வேண்டிய 5 நபர்கள்!
rice stock in home

பெரும்பாலும் இது நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் தெரியாதவர்கள் இந்த தவறை செய்யக்கூடாது ஏனென்றால் அந்தக் காலத்தில் எல்லாம் அரிசியை மூட்டையாக வாங்கி கீழே வைத்துத்தான் புழங்குவார்கள் இந்த கால கட்டத்தில் கணவன் - மனைவி தனியாக குடும்பம் நடத்தும் சூழ்நிலையில்  குறைவாக அரிசியை வாங்கி டப்பாவில் போட்டு மேலே வைத்து விடுவார்கள்.

அதனால்தான் அடுப்புக்கு கீழ் பக்கத்தில் அரிசி வைத்தால் வீட்டில் ஆயுசுக்கும் பஞ்சம் வர வாய்ப்பு கிடையாது.

முடிந்தால் மரத்தினால் செய்யப்பட்ட பெரிய ட்ரம்மை வாங்கினால் நல்லது. உங்கள் வீட்டில் அரிசி வைக்கும் டப்பாவில் அதில் அடிப்பகுதியில் ஒரு விரலி மஞ்சள், ஒரு வசம்பு துண்டு போட்டு வைத்து அதன் மேல் அரிசியை போட்டு வைத்தால் வீட்டில் எப்போதும் சுபிட்சம் நிலைத்திருக்கும்.

இப்படி செய்தால் வீடு எப்போதும் லட்சுமி கடாட்சம் பெருகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com