மடித்துப் பார்த்தால் உண்மை தெரியும்... உங்கள் தலையணைக்கு இந்த டெஸ்ட் பண்ணுங்க!

உங்கள் தூக்கத்தைக் கெடுத்து ஆரோக்கியத்தை பாதிக்கும் பழைய தலையணை எப்போது மாற்றப்பட வேண்டும் என்பதற்கான 5 முக்கிய அறிகுறிகள்.
பழைய தலையணை When to replace old pillow
பழைய தலையணை When to replace old pillow
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

தினசரி உடற்பயிற்சி, கடுமையான வேலைப் பளு காரணமாக இரவில் நல்ல அமைதியான உறக்கம் எனக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். சில நேரங்களில் காலையில் தூங்கி எழுந்ததும் கடுமையான கழுத்து வலியால் நான் மிகவும் அவதிப்பட்டுள்ளேன். 

இதற்கு நாம் தூங்கும் முறை மட்டுமின்றி நாம் பயன்படுத்தும் தலையணையும் ஒரு முக்கிய காரணமாகும். இதை நான் மிகவும் தாமதமாகவே உணர்ந்தேன். குறிப்பாக நாம் எப்போது தலையணை உறைகளை மாற்ற வேண்டும் என்பதைப் பற்றி பலருக்கும் சரியான விழிப்புணர்வு இருப்பதில்லை.

சரியான காலக்கெடு! 

நமது சருமம் மற்றும் கூந்தல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க தலையணை உறைகளை 7 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் நல்லது என பல தூக்க நிபுணர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். உங்களுக்கு முகப்பரு அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் 2 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது இன்னும் சிறப்பு. 

அதேபோல நாம் தொடர்ந்து பயன்படுத்தும் விரிப்புகளை 1 அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறை முழுமையாகத் தூக்கி எறிந்துவிட்டுப் புதியதாக வாங்க வேண்டும். பணத்தைச் சேமிப்பதாக நினைத்துக்கொண்டு வருடக் கணக்கில் அவற்றைப் பயன்படுத்துவது பலவிதமான சரும நோய்களை நமக்கு இலவசமாகக் கொண்டுவந்து சேர்த்துவிடும்.

நாம் தூங்கும்போது வெளியாகும் வியர்வை மற்றும் இறந்த செல்கள் படிந்து ஒருவித மஞ்சள் நிறக் கறையை நாளடைவில் அங்கு உருவாக்குகின்றன. இது கெட்ட பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளர வழிவகுக்கிறது. 

பழைய தலையணை When to replace old pillow
பழைய தலையணை When to replace old pillow

காலையில் எழும்போதே கழுத்து மற்றும் தோள்பட்டை வலி தொடர்ச்சியாக இருந்தால், நீங்கள் தினமும் பயன்படுத்தும் பழைய தலையணை உங்களுக்குச் சரியான ஆதரவைத் தரவில்லை என்று எளிதாகப் புரிந்துகொள்ளலாம். இதை உடனே மாற்றிவிட்டு உங்கள் உடலுக்கு ஏற்றவாறு சரியான அளவுடைய ஒன்றைப் புதிதாக வாங்குவது உங்களின் ஒட்டுமொத்த தசை ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

இதையும் படியுங்கள்:
பாக்கெட் தேங்காய்ப்பால் உண்மையிலேயே பாதுகாப்பானதா? வீட்டுத் பாலுடன் ஒரு அதிரடி ஒப்பீடு!
பழைய தலையணை When to replace old pillow

தலையணையின் உள்ளே இருக்கும் பஞ்சு தட்டையாகவோ அல்லது ஆங்காங்கே கட்டிகளாகவோ மாறிவிட்டால் அது நிம்மதியான தூக்கத்தை முற்றிலும் கெடுத்துவிடும். இரவில் தூங்கச் செல்லும்போது அல்லது அதிகாலையில் அதிக தும்மல் வந்தால், அங்கு Dust Mites எனப்படும் கண்ணுக்குத் தெரியாத தூசிப் பூச்சிகள் பெருமளவில் சேர்ந்துள்ளன என்பது தெளிவாகிவிடும். 

இதன் காரணமாக ஏற்படும் மூக்கடைப்பு, தோலில் ஏற்படும் அரிப்பு போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை நாம் ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாகப் புதிய உரைகளை மாற்றுவது மட்டுமே இதற்கான ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.

பரிசோதனை முறை! 

சில நேரங்களில் நாம் டிடர்ஜென்ட் போட்டு நன்றாகத் துவைத்த பிறகும் கூட ஒருவிதமான கடுமையான துர்நாற்றம் வீசினால் அதனுள் ஈரப்பதமும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களும் ஆழமாகத் தங்கிவிட்டன என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

இதையும் படியுங்கள்:
தப்பான டை வாங்கி முடியை கெடுக்காதீங்க… இதை படிச்சிட்டு அப்புறம் வாங்குங்க?
பழைய தலையணை When to replace old pillow

இதை எளிதாகச் சோதிக்க வீட்டில் ஒரு Fold Test செய்து பார்க்கலாம். அதாவது தலையணையை நடுவில் இரண்டாக மடித்துப் பாருங்கள். அது ரப்பர்போல தானாகவே பழைய நிலைக்குத் திரும்பாமல் அப்படியே பேப்பர்போல மடிந்து கிடந்தால் அதன் ஆயுட்காலம் முற்றிலும் முடிந்துவிட்டது என முடிவெடுக்கலாம்.

நிம்மதியான இரவுத் தூக்கம் அடுத்த நாள் முழுவதும் நம்மைச் சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்க உதவும் ஒரு மிகச்சிறந்த அருமருந்து. நாம் தினசரி முகம் வைத்துத் தூங்கும் தலையணைகளை மிகவும் சுத்தமாகப் பராமரிப்பது மனதிற்கும் உடலுக்கும் நல்ல புத்துணர்ச்சியைத் தந்து சோர்வை நீக்கும். 

உங்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கும் அந்த பழைய தலையணை இனி அறவே வேண்டாம் என முடிவு செய்து இன்றே மாற்றுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com