இருசக்கர வாகனத்தின் பயன்பாடு தற்போது பல மடங்கு உயர்ந்து விட்டது. சாலைகளில் முன்பெல்லாம் நூற்றுக்கணக்கில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் இப்பொழுது ஆயிரக்கணக்கில் ஓட தொடங்கிவிட்டன. மக்களும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்க அலுவலகம் செல்ல என அனைத்திற்குமே இரு சக்கர வாகனங்களைதான் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் ஒரு காலத்தில், நகரத்தைச் சுற்றிப் பயணிக்க விரும்பினால், ஆட்டோக்கள் தான் பலரது தேர்வாக இருந்தது. பேருந்து வசதி இல்லாத தொலைதூர கிராமங்களிலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்குச் செல்ல விரும்பினால், மூன்று சக்கர ஆட்டோ மட்டுமே ஒரே வழி.
ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறிய ஆட்டோ ஒரு முக்கியமான போக்குவரத்து சாதனமாக இருந்தது. இப்போது அவை நகரங்களில் ஓடுகின்றன. ஆனால் வாடகை வண்டிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் காரணமாக மூன்று சக்கர ஆட்டோக்களின் பயன்பாடு ஓரளவு குறைந்துள்ளது.
இந்த மூன்று சக்கர ஆட்டோ மூன்று சக்கரங்களைக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏன் இன்னொரு சக்கரத்தைச் சேர்த்து அதை 4 சக்கர வாகனமாக மாற்றக்கூடாது? பின்புறத்தில் இரண்டு சக்கரங்கள் இருக்கும்போது முன்புறத்தில் இரண்டு சக்கரங்கள் ஏன் இல்லை?
அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மூன்று சக்கர ஆட்டோவை சமநிலைப்படுத்துவது நான்கு சக்கர ஆட்டோவை விட மிகவும் எளிதானது என நிபுணர்கள் சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல், 4 சக்கரங்களை விட 3 சக்கர வாகனம் அளவில் சிறியதாக இருக்கும் என்பதால் குறுகலான பகுதிகளிலும் வளைந்து சென்று விடும். மேலும் எளிதாகவும் பார்க்கிங் செய்து விடலாம். கூட்டம் அதிகமான நெரிசலான பகுதிகளில் கார், பஸ் போன்ற வாகனங்களை விடவும் ஆட்டோக்கள் எளிதாக சென்று விடும். இதற்கு பெரும் அளவில் உதவுவது அதன் 3 சக்கர அமைப்புதான்.
அளவில் சிறியதாக இருப்பதால் ஆட்டோ எஞ்சின்களை இயக்க மற்ற வாகனங்களை விட குறைவான எரிபொருள் போதுமானது. அதுமட்டுமின்றி, இந்த ஆட்டோவை ஓட்டுபவர்களுக்கு பராமரிப்பு செலவுகள் பெருமளவு குறைகின்றன. ஒரு சிறிய ஆட்டோ அதிக மைலேஜ் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. அதனால்தான் பொறியாளர்கள் மூன்று சக்கரங்கள் கொண்ட ஒரு சிறிய ஆட்டோவை வடிவமைத்தனர்.