Lift-களில் கண்ணாடி இருப்பது அழகு பார்க்க அல்ல! இதன் பின்னணியில் உள்ள ரகசியம் தெரியுமா?
மாடிப்படியில் ஏறுவது ஆரேக்கியமாக இருந்தாலும் உயரமான கட்டிடங்களில் ஏறும்பேது லிஃப்ட்தான் உதவியாக இருக்கிறது. நீங்கள் எந்த லிப்டுக்குள் நுழைந்தாலும் அதற்குள் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். அது நம் தோற்றத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.
இதனால் லிஃப்டுக்குள் சென்றதும் மக்கள் தங்களை பார்க்கிறார்கள். முடியை சரிசெய்கிறார்கள் ஆடைகளை சரிசெய்து கொள்கிறார்கள். லிஃப்ட் கண்ணாடிகள் அலங்காரத்திற்காகவோ அல்லது மக்கள் தங்கள் தோற்றத்தை சரி செய்வதற்கோ மட்டுமல்ல. அதற்கான உண்மையான காரணம் உள்ளது. அவை என்னென்ன விஷயங்கள் என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்
சைக்கலாஜிக்கல் ஆறுதல்
லிஃப்ட் போன்ற மூடிய காற்று வராத இடங்களில் க்ளாஸ்ட்ரோஃபோபியா அல்லது பதட்டம் போன்ற உணர்வுகளை பலர் அனுபவிக்கின்றனர். கண்ணாடிகள் இதனால் பிரச்னையைச் சரிசெய்ய லிஃப்ட் பெரிய இடம் போன்ற மாயையை உருவாக்கி லிஃப்ட் பெரிதாகவும் குறைவாக மூடப்பட்டதால் உணர வைக்கும். பதட்டமாக இருப்பவர்களுக்கு இது நல்லது. மனநல மேம்பாடுக்கு இந்த கண்ணாடிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பாதுகாப்பு
கண்ணாடிகள் லிஃப்டில் பயணிப்பவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தெளிவாக பார்க்க அனுமதிக்கின்றன. இதில் யார் பின்னால் இருக்கிறார்கள் என்பதும் அடங்கும். இது உடனிருப்பவர்கள் மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களை பற்றித் தெளிவாகக் காட்டுவதால் மக்கள் பாதுகாப்பை உணரமுடியும் இது தவறான செயல்பாடுகளைத் தடுக்கும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுகிறது
சக்கர நாற்காலிகளில் அல்லது நடப்பதில் சிக்கல் உள்ளவர்களை எளிதாக கையாள கண்ணாடிகள் உதவுகின்றன. சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் லிஃப்டிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் கண்ணாடி அவர்கள் பின்னால் என்ன இருக்கிறது என்பதை திரும்பிப் பார்க்காமலே தெரிந்து கொள்ள உதவும்.
கவனச் சிதறலுக்கு உதவுகிறது
லிஃப்ட் பயணம் முடியும் வரை காத்திருக்கும்போது மக்கள் பெரும்பாலும் பொறுமையின்மையை உணர்கிறார்கள். மேலும் கண்ணாடியில் முகம் பார்ப்பது அவர்களை திசை திருப்ப உதவும். அவர்கள் பிரதிபலிப்பை ப் பார்த்து முகம் உடைகளை சரிசெய்வது காத்திருப்பதில் சலிப்பு இல்லாமல் செய்யும்.
நடைமுறை பயன்பாடு
கண்ணாடிகள் பயணிகள் தங்கள் தோற்றத்தை விரைவாக சரிசெய்ய அனுமதிக்கிறது. தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்ள முடிகிறது அவசரமான விழாக்களுக்கும் செல்லும்போது, முக்கியமான நேர்காணலுக்குச் செல்லும்போது சமூக நிகழ்வுகளுக்கு செல்வதற்கு முன் கடைசி நிமிட டச் அப்பிற்கு இந்த கண்ணாடிகள் உதவுகின்றன. லிஃப்ட் கண்ணாடிகள் மனநலத்தை மேம்படுத்துவதில் பாதுகாப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

