குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு முன் தண்ணீர் கொடுப்பது ஏன் ஆபத்தானது? 

Baby
Baby
Published on

பொதுவாகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நலனைப் பற்றி மிகவும் கவலைப்படுவார்கள்.‌ குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்? என்ன கொடுக்கக் கூடாது என்பது குறித்து பல கேள்விகள் எழும். குறிப்பாக குழந்தைகளுக்கு எப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களுக்கு குழப்பமாகவே இருக்கும். சிலர் குழந்தைகளுக்கு பிறந்தது முதலே தண்ணீர் கொடுக்கலாம் என நினைக்கின்றனர். ஆனால், மருத்துவர்கள் 6 மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர். இது ஏன்? இதன் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? வாருங்கள் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியம். தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட ஒரு இயற்கையான உணவு. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. தாய்ப்பாலில் உள்ள நீர் குழந்தையின் உடலுக்குத் தேவையான அளவு நீரை வழங்க போதுமானது.‌ 

ஏன் தண்ணீர் கொடுக்கக் கூடாது? 

ஆறு மாதத்திற்குள் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பது, குழந்தை தாய்ப்பால் போதுமான அளவு குடிக்காமல் போக வழி வகுக்கும். இதனால், குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆறு மாதத்திற்குள் குழந்தையின் செரிமான மண்டலம் முழுமையாக வளர்ச்சி அடையாது. இதனால், தண்ணீரை செரிமானம் செய்யும் திறன் குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வாந்தி போன்ற செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம். 

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பது அவர்களின் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் குறைத்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியை பாதிக்கும். சில சமயங்களில் தண்ணீர் சுத்தமாக இல்லாவிட்டால் குழந்தைக்கு அலர்ஜி மற்றும் பல்வேறு நோய்த்தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தை பற்றிய புகழ்ச்சி மற்றவர் மனதைப் புண்படுத்தும் என்பதை அறிவீர்களா?
Baby

குழந்தையின் ஆறு மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் கொடுக்கலாம். ஆனால், தண்ணீர் கொடுப்பதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. ஆறு மாதம் வரை குழந்தைக்கு தேவையான எல்லா விஷயங்களும் தாய்ப்பாலிலேயே கிடைத்து விடுவதால், கூடுதலாக தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. 

குழந்தையின் ஆரோக்கியத்தை காப்பதற்கு பெற்றோர்கள், ஆறு மாதம் வரை அவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்ன கொடுக்கக் கூடாது என்பது குறித்து சரியான தகவல்களை மருத்துவர்களிடம் கேட்டுப் பெறுவது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com