ஏன் சில ஆண்கள் கல்யாணத்துக்கு பயப்படுறாங்க தெரியுமா?

marriage
marriage
Published on

கல்யாணம்ன்னா ரெண்டு மனசு ஒண்ணா சேர்ந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஆனா சில பசங்க கல்யாணம்னாலே தெறிச்சு ஓடுறாங்க. என்னடா இதுன்னு தோணுதுல? கல்யாணத்தை பார்த்து எல்லாருமே பயப்படுறாங்கன்னு சொல்ல முடியாது. ஆனா நிறைய பேருக்கு உள்ளுக்குள்ள ஒரு சின்ன பயம் இருக்கத்தான் செய்யுது. அது ஏன்ன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

1. கல்யாணம் ஆனா பசங்களுக்கு அவங்க சுதந்திரம் போயிடுமோன்னு ஒரு பயம். கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம இஷ்டப்படி எதுவும் பண்ண முடியாதோ, பொண்டாட்டி சொல்றது கேட்டுக்கிட்டுதான் இருக்கணுமோன்னு நெனைக்கிறாங்க. அவங்க ஃப்ரண்ட்ஸோட ஊர் சுத்துறது, தனியா டைம் ஸ்பெண்ட் பண்றது எல்லாம் குறைஞ்சிடுமோன்னு பயப்படுறாங்க.

2. அப்புறம் கல்யாணச் செலவு, ஆண்களுக்கு குடும்பப் பொறுப்புன்னு நிறைய விஷயங்கள் இருக்குல்ல? இதெல்லாம் நினைச்சாலே சில பசங்களுக்கு பயம் வந்துடும். குடும்பத்தை எப்படி நடத்துறது, புள்ளை குட்டிங்களுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சுப் பார்ப்பாங்க. இந்த நிதிச்சுமையை எப்படி சமாளிக்கப் போறோம்னு ஒரு கவலை அவங்களுக்குள்ள இருக்கும்.

3. அடுத்த முக்கியமான விஷயம், விவாகரத்து பயம். இப்பலாம் விவாகரத்து ரொம்ப சகஜமா ஆயிடுச்சு. ஒருவேளை நம்ம கல்யாண வாழ்க்கை சரியில்லன்னா என்ன பண்றதுன்னு சில பசங்க யோசிக்கிறாங்க. விவாகரத்துக்கு அப்புறம் வர்ற பிரச்சினைகள், கோர்ட்டு கேஸ்ன்னு நினைச்சாலே பயமா இருக்கும்ல?

4. சொந்தக்காரங்க, ஊர்க்காரங்கன்னு எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கோ, பண்ணிக்கோன்னு சொல்றது சில பசங்களுக்கு எரிச்சலா இருக்கும். ஒரு கட்டத்துல இது ஒரு பிரஷரா மாறிடும். எல்லாரும் சொல்றாங்கன்னு அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா சரியா வருமான்னு அவங்க யோசிக்கலாம்.

5. கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த ரொமான்ஸ், காதல் எல்லாம் அப்புறம் இருக்குமான்னு சில பசங்க பயப்படுறாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்க்கை வேற மாதிரி ஆயிடும், அந்த நெருக்கம் இருக்காதுன்னு நினைக்கிறாங்க. டெய்லி ஒரே மாதிரி ரொட்டீன் லைஃப் போரடிச்சிருமோன்னு பயம்.

6. சில பசங்க அவங்க ஃப்ரண்ட்ஸ் இல்லன்னா சொந்தக்காரங்க கல்யாணத்துல நடந்த பிரச்சினைகளை பார்த்திருப்பாங்க. இதனால கல்யாணம்னாலே ஒரு மாதிரி நெகட்டிவ்வா யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. அவங்க பார்த்த கெட்ட அனுபவங்களே அவங்களுக்கு பயத்தை கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
தக்காளியை சில நாட்கள் கெட்டுப்போகாமல் பத்திரமாக வைக்க சில டிப்ஸ்..!
marriage

7. இன்னும் சில பசங்க கல்யாணத்துக்குத் தான் ரெடி இல்லன்னு ஃபீல் பண்ணுவாங்க. இன்னும் கொஞ்சம் நாள் சிங்கிளா ஜாலியா இருக்கலாம்னு நினைப்பாங்க. இல்லன்னா அவங்க கரியர்ல நல்லா செட்டில் ஆகிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு பிளான் பண்ணுவாங்க.

இதுதான் சில பசங்க கல்யாணத்துக்கு பயப்படறதுக்கான முக்கியமான காரணங்கள். ஆனா எல்லா பசங்களும் இப்படித்தான் நெனைக்கிறாங்கன்னு சொல்ல முடியாது. ஒவ்வொருத்தரோட மனசும் வேற வேற மாதிரி இருக்கும்ல. பயம் இல்லாம கல்யாண வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பிக்கணும்ன்னா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும், நம்பிக்கை வெக்கணும். அதுதான் முக்கியம்.

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டு ஸ்பெஷல் சுரைக்காய் அல்வா செய்யலாம் வாங்க!
marriage

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com