மாமியாரை வசப்படுத்தும் மருமகள்: அன்பும் பொறுமையும் சேர்த்த ‘ஹோம் டிப்ஸ்’!

அன்பு, பொறுமை, சிறு விட்டுக்கொடுப்புகள் சேர்ந்து மாமியார்–மருமகள் உறவை இனிமையாக்கும் வீட்டு குறிப்புகள்!
simple-home-tips
simple-home-tips
Updated on

ரியோ! தப்போ!  மாமியார் சொல்வதை எல்லாம்  கேட்க வேண்டியிருக்கிறது. மண்டை உடைகிறது  என்று  குறை கூறும் பெண்கள் அநேகர்.

பெண்களால் இயலாதது என ஒன்றுமே கிடையாது. அன்பினால் அனைத்து உலகையும்,   அரக்கத்தனமாய் இருப்பவர்களையும் வசப்படுத்துவதில் வல்லவர்கள். இதனை நன்றாக அறிந்த பெண்களுக்கு, மாமியாரை வசப்படுத்துவது எளிதுதான். அவரும்  ஒரு பெண்தானே!

குற்றம் கண்டு பிடிக்கும் மாமியார், கடு-கடுவென இருக்கும் மாமியார், சுயபுராணம் பாடும் மாமியார், வம்பு பேசும் மாமியார், புலம்பல் மாமியார்   என அநேக வீடுகளில்,  பல தரப்பட்ட மாமியார்கள்.

மாமியாரும் ஒரு வீட்டு மருமகள்தான். மருமகள்களாக இருப்பவர்களும் மாமியார்களாக மாறும் காலம் பூமி சுழல்வதைப் போல சுற்றி வரும்.

கடு-கடு;  சிடு-சிடு;  முணு-முணு மாமியார்களை, அவர்களது வழியிலேயே சென்று சுலபமாக வழிக்கு கொண்டு வரலாம். எவ்வாறு...?

மாமியார்களின் உண்மையான நல்ல அடிப்படைத் தகுதிகள் பற்றி பலரிடமும் வாய்விட்டு பாராட்டி பேசுங்கள். மாலாடுவோ, மைசூர்ப்பாகோ, என் மாமியார் (அம்மா அல்லது அத்தை) செய்தால்,  வாயில் போட்டவுடன் கரையும். எந்தெந்த கடைகளில் தரமான சாமான் கிடைக்கும் என்பது அவருக்கு அத்துபடி. இப்படியெல்லாம் புகழ்ந்து பேசினால், மாமியார் சரண்டர்தான்.

அந்த காலத்துல நான் எல்லாம் என்று ஆரம்பித்து, தன்னுடைய மாமியார் - நாத்தனார் செய்த உப்பு பெறாத செயல்கள், தான் சிரமப்பட்ட விபரங்கள் போன்றவைகளை திரும்ப - திரும்ப மாமியார்  சொன்னால், காது கொடுத்து கேட்பதுபோல நடியுங்கள். போரடிக்கும்தான்.  நம்ப அம்மா பேசினால் கேட்க மாட்டோமா ! என்ன!

இதையும் படியுங்கள்:
பழமொழி, பொன்மொழி கூட்டணி!
simple-home-tips

வெளியில் துணிமணிகள்  பர்ச்சேஸ் செய்யப் போகையில், மாமியாரையும் அழைத்துச்செல்லுங்கள்.  வாரம் ஒருமுறை நீங்கள் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டால், அவர்களை மாதம் ஒருமுறையாவது கூட்டிச் செல்லுங்கள்.  அவர்கள் கோவில் செல்கையில் உங்களைக் கூப்பிட்டால், உடன் கோவிலுக்குச் சென்று வாருங்கள்.

மாமியாரின் ஏகபோக சாம்ராஜ்யமாக இருக்கும் கிச்சனை ஒரேடியாக மாற்ற முயலாதீர்கள். படிப்படியாக, நிதானமாக, அவர்களது கருத்துக்களையும் கேட்டு  செய்தால் ஒத்துக் கொள்வார்கள்.

அநேக மாமியார்கள் கிராமத்திலிருந்து நகரம் வந்து, வெளிநாடுகளுக்கும் பறக்கின்றனர்.  சற்றே மாடர்னாகிவிட்ட மாமியாரையும், நீங்கள் ஃப்யூட்டி பார்லருக்கு செல்கையில் கூட்டி செல்லலாம். கூப்பிட்டால் வரமாட்டார்கள் என்று நீங்களாகவே தீர்மானம் செய்யாதீர்கள்.  கூட வராவிட்டாலும்,  அட்லீஸ்ட் உங்களை ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

குழந்தைகளை,  மாமியாருடன் தினமும் 10 - 15 நிமிடங்கள் பேச விடுங்கள். ஹோம்வொர்க், படிப்பு என்று கூறி ஒதுக்கி வைக்காதீர்கள். 

அரைகுறையாக ஏதாவது செய்கையில், மாமியார் சத்தம் போட்டால், உடனே மன்னிப்பு கேட்டுவிடுங்கள். அலுவலக அதிகாரிகள், உடன் பணி புரிபவர்கள் மற்றும்  நண்பிகளிடம் என எத்தனையோ பேர்களிடம் "ஸாரி" கேட்கிறோம். சண்டையா போடுகிறோம்..? மாமியாரிடம் "ஸாரி" சொன்னால் குறைந்து போகமாட்டோம்.h

இதையும் படியுங்கள்:
Home Tips: பயனுள்ள வீட்டு குறிப்புகள்..!
simple-home-tips

மகளுக்கும், மருமகளுக்கும் அட்லீஸ்ட் ஒரு சதவிகிதம் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்.  இதையெல்லாம் அதிகமாக பொருட்படுத்தாமல் செயல்பட்டால், நிச்சயமாக மாமியார், மருமகள் வழிக்கு மெல்ல-மெல்ல வந்துவிடுவார். ஆனால், கொஞ்சம் பொறுமையும்,  விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் வேண்டும்.  எல்லாமே  ஓவர் நைட்டில் நடந்துவிடாது.  ஒரு காலத்தில் மாமியாரும் மருமகள்தானே!

logo
Kalki Online
kalkionline.com