
அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே பார்க்கக்கூடிய வேலைகள் பல உள்ளன. அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. கணினி/ ஐ. டி;
வீட்டிலிருந்தே செய்யும் வேலைகளில் முதன்மையானது கணினி/ ஐ.டி வேலை ஆகும். கணினிகள், மென்பொருள் (software), வன்பொருள் (hardware), நெட்வொர்க்குகள் மற்றும் இணையம் தொடர்பான விஷயங்களை உள்ளடக்கியது. குறியீடு எழுதும் மென்பொருள் உருவாக்குபவர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர், கணினி அமைப்புகளை நிர்வகிக்கும் நெட்வொர்க் நிர்வாகி, வலைதளங்களை உருவாக்குபவர், கணினி சிக்கல்களில் பயனர்களுக்கு உதவும் தொழில்நுட்ப ஆதரவு நிபுணராகவோ பணிபுரியலாம். இந்த வேலைகளை கணினி மூலம் வீட்டிலிருந்து செய்யமுடியும். மின்னஞ்சல், வீடியோ அழைப்புகளை ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்.
2. சந்தைப்படுத்துதல் (Marketing);
இது தயாரிப்பு சேவைகளை விளம்பரப்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது பற்றியது. இதில் வாடிக்கையாளர்களை சென்றடையுமாறு குறிப்பிட்ட பொருளை பற்றிய ஆன்லைன் விளம்பர பிரச்சாரங்களை நடத்துதல், வலைதள உள்ளடக்கத்தை எழுதுதல், சமூக ஊடக லிங்க்குகளை உருவாக்குதல். சந்தைப் படுத்துதலை பகுப்பாய்வு செய்தல், சந்தைப்படுத்துதல் உத்திகளை உருவாக்குதல் போன்றவற்றை செய்வது.
3. வாடிக்கையாளர் சேவை: (Customer Service)
வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பும், பின்பும் அதைப் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் சொல்லும் சேவையாகும். தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர் விசாரணைகளுக்கு பதில் அளிப்பது, புகார்களை கவனித்தல், தயாரிப்புகள் அல்லது சேவைகளை பற்றி தகவல்களை வழங்குவது போன்றவற்றை செய்யலாம்.
4. கணக்கியல் & நிதி: (Accounts and Finance)
கணக்காளர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள், வணிக நிறுவனங்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவுகளை கண்காணிக்கவும், நிதி அறிக்கைகளை தயாரிக்கவும், வரவு செலவு திட்டங்களை நிர்வகிக்கவும், நிதி முடிவுகளை எடுக்கவும் உதவுகிறார்கள். கணக்குப் பதிவேடுகளை சரிபார்த்து வரி வருமானங்களை தயாரித்து, சம்பள பட்டியலை நிர்வகித்து நிதி ஆலோசனை வழங்குகிறார்கள்.
5. வணிக மேம்பாடு: (Business Development)
புதிய சந்தைப் பொருட்களை கண்டறிதல், கூட்டமைப்புகளை உருவாக்குதல், புதிய தயாரிப்பு அல்லது சேவைகளை உருவாக்குதல் போன்றவை இதில் அடங்கும். புதிய வணிக வாய்ப்புகளை ஆராய்ச்சி செய்யலாம் ஆன்லைனில் நெட்வொர்க்கிங் செய்யலாம்.
6. எழுதுதல்: (Writing;
வலைத்தளங்களுக்கான உள்ளடக்க (கன்டன்ட்) எழுத்தாளராகவோ விளம்பரங்களுக்கான நகல் எழுத்தாளராகவோ, கையேடுகளை உருவாக்கும் தொழில்நுட்ப எழுத்தாளர்களாகவோ, பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், கதைகள் எழுதும் எழுத்தாளராகவும் இருக்கலாம். இதை வீட்டில் இருந்தே கணினி மூலம் இயல்பாக செய்யலாம்.
7. ஜூனியர் டேட்டா அனலிஸ்ட்;
எக்ஸெல் போன்ற கருவிகளை பயன்படுத்தி நிறுவனத்தின் டேட்டாக்களை பயன்படுத்தி எளிய அறிக்கைகளை உருவாக்க வேண்டும். அவற்றின் வடிவங்களை கண்டறியலாம். இதற்கு அடிப்படை கணிதம் மற்றும் கணினி திறன்கள் போதுமானவை.
8. வலை உள்ளடக்க நிர்வாகி (Web Content Administrator)
எளிதான வலைத்தள கருவிகளை பயன்படுத்தி வலைத்தள வெப்சைட்டுகளின் உள்ளடக்கத்தை அதாவது அவற்றுக்கான உரை மற்றும் படங்கள் போன்றவற்றை உருவாக்கலாம். தேவையான சமயத்தில் புதுப்பிக்கவும் செய்யலாம். இதற்கு HTML பற்றிய அடிப்படை அறிவும் நல்ல நிறுவனத் திறன்களும் இருந்தால் போதும். மேம்பட்ட கோடிங் அறிவு தேவையில்லை.
9. மெய்நிகர் உதவியாளர் (Virtual Assistant)
இந்தப் பணிக்கு சிறப்பு தொழில்நுட்பத் திறன்கள் தேவையில்லை. மின்னஞ்சல் மேலாண்மை, மின்னஞ்சல்களை படித்து பதில் எழுதுதல், திட்டமிடுதல், ஆராய்ச்சி போன்ற பணிகளைச் செய்யும் வணிகங்களுக்கு உதவலாம்.
10. ஜூனியர் ப்ரோக்ராமர்;
சில நிறுவனங்கள் எளிய குறியீட்டுப் பணிகளுக்கு உதவ தொடக்க நிலை ஜூனியர் ப்ரோக்ராமர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. இதற்கு அடிப்படை ப்ரோக்ராமிங் அறிவு உதவியாக இருக்கும். சில இடங்களில் பயிற்சி தந்து வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
மேற்குறிப்பிட்ட வேலைகளில் தனக்குப் பிடித்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து வீட்டில் இருந்தே பணிபுரியலாம்.