உலகின் மிக விலையுயர்ந்த 5 மாளிகை வீடுகள்!

5 Most Expensive Mansion Houses
Most Expensive Mansion Houses
Published on

சொந்த வீடு என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு தவிர்க்க முடியாத லட்சியமாக இருக்கும். அதில் சிறிய வீடு முதல் பெரிய பங்களா என்று ஒவ்வொருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். இது போன்று உலகில் காணப்படும் அதிக விலை உயர்ந்த வீடுகள் சிலவற்றைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

1. பக்கிங்ஹாம் அரண்மனை (Buckingham Palace), லண்டன், UK

சுமார் $2.9 பில்லியன் (இன்றைய இந்திய மதிப்பில் 24,070 கோடி) மதிப்புள்ள பக்கிங்ஹாம் அரண்மனை பிரிட்டிஷ் மன்னரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இந்த அரண்மனையில் 78 குளியலறைகள், 92 அலுவலகங்கள் மற்றும் 19 ஸ்டேட்ரூம்கள் (staterooms) உட்பட 775 அறைகள் உள்ளன. ஆடம்பரமான வீட்டின் உட்புறத் தோற்றங்கள், வரலாற்று கலை சேகரிப்புகள் மற்றும் பரந்து விரிந்த தோட்டங்களுடன் அதன் பிரமாண்டம் ஈடு இணையற்றது. இவ்வளவு பெரிய பங்களாவைப் பராமரிப்பதற்காக, வீட்டு பராமரிப்பு, தோட்டம் மற்றும் பாதுகாப்புக்கு என்று தனித்தனியாக அர்ப்பணிக்கப்பட்ட பணியாளர்களின் குழு எந்நேரமும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இதன் வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாக்க மறுசீரமைப்பு பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மிகவும் அவசியம்.

2. ஆன்டிலியா (Antilia), மும்பை, இந்தியா

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஆண்டிலியா, சுமார் $1 பில்லியன் மதிப்புள்ள (இன்றைய இந்திய மதிப்பில் 8,385 கோடி) நவீன அதிசயமாகும். 27 அடுக்குகள் கொண்ட இந்த வானளாவிய கட்டிடம் 4,00,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது மற்றும் இதில் கோவில், திரையரங்கம், சலூன், ஹெல்த் ஸ்பா, ஐஸ்கிரீம் அறை, ஹெலிபேடுகள் மற்றும் 168 கார் கேரேஜ் போன்ற வசதிகளும் உள்ளன. இது பூகம்பங்கள் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பங்களாவை பராமரிப்பது விரிவாக சொல்லிக்கொண்டே போகலாம். காரணம், தினசரி அங்கு கையாளப்படும் செயல்பாடுகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பதற்கு என்று ஒரு பெரிய பணியாளர் குழுவே தேவைப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் 5 பணக்கார மாநிலங்கள்!
5 Most Expensive Mansion Houses

3. வில்லா லியோபோல்டா (Villa Leopolda), பிரெஞ்சு ரிவியரா, பிரான்ஸ்

வில்லா லியோபோல்டா, $750 மில்லியன் (இன்றைய இந்திய மதிப்பில் 6,288 கோடி) மதிப்புடையது. மத்தியதரைக் கடலுக்கு (Mediterranean Sea) அருகே அமைந்துள்ள இந்த வில்லா, 80,000 சதுர அடியில், 11 படுக்கையறைகள், 14 குளியலறைகள், ஒரு ஹெலிபேட், ஒரு பசுமை இல்லம் மற்றும் 12 நீச்சல் குளங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அதன் வளமான வரலாறு மற்றும் ஆடம்பரமான உட்புறங்கள் இதை ஒரு தனித்துவமான சொத்தாக காட்டுகின்றன. வில்லா லியோபோல்டாவை பராமரிப்பதற்காக தோட்டக்கலை, குளம் பராமரிப்பு மற்றும் அதன் வரலாற்று பொருட்களை பாதுகாப்பதில் கைதேர்ந்த பணியாளர்களை நியமித்துள்ளனர்.

4. Villa Les Cèdres, Saint-Jean-Cap-Ferrat, France

$450 மில்லியன் (இன்றைய இந்திய மதிப்பில் 3,773 கோடி) மதிப்புள்ள, Villa Les Cèdres 18,000 சதுர அடி எஸ்டேட் ஆகும், இது 1830 ஆம் ஆண்டுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது. இது 14 படுக்கையறைகள், மிகப்பெரிய நீச்சல் குளம் மற்றும் 35 ஏக்கர் தோட்டங்களைக் கொண்டுள்ளது. வில்லாவின் தனித்துவமே அதில் உள்ள தாவரவியல் பூங்கா தான். காரணம் இது 14,000 க்கும் மேற்பட்ட தாவர இனங்களை கொண்டுள்ளது. அத்தகைய சொத்தை பராமரிப்பதற்காக விரிவான தோட்டக்கலை மற்றும் வரலாற்று பாதுகாப்பில் கைதேர்ந்தவர்கள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ஏன் சீனாவைப் போல இந்தியா வளர்ச்சி அடையவில்லை தெரியுமா? 
5 Most Expensive Mansion Houses

5. விட்டன்ஹர்ஸ்ட் (Witanhurst), லண்டன், UK

விட்டன்ஹர்ஸ்ட், $450 மில்லியன் ( இன்றைய இந்திய மதிப்பில் 3,773 கோடி) மதிப்புடையது, இது 25 படுக்கையறைகள் உட்பட 65 அறைகளைக் கொண்ட ஜார்ஜிய மாளிகையாகும் (Georgian Revival mansion). பிரமாண்டமான 70 அடி நீளமான அறை (foot-long drawing room) மற்றும் 40 அடி நீளமான சாப்பாட்டு அறை ஆகியவை இதன் பிரமாண்டத்தை எடுத்துக்காட்டுகின்றன. விட்டன்ஹர்ஸ்டின் தனித்துவம் அதன் கட்டிடக்கலை அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தில் தான் அடங்கியுள்ளது. வழக்கமான மறுசீரமைப்பு பணிகள், விரிவான வீட்டு பராமரிப்பு என்று அதன் பிரமாண்டத்தை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com